தொடர்கள்
பொது
பயம் வேண்டாம், புரிதல் போதும் - 4- பிருந்தா ரகுநாத்

2026916160507409.jpg

பகுதி 4: “வீட்டுல நாம என்ன பண்ணலாம்?”

தினசரி வாழ்க்கையில் செய்யக்கூடிய சின்னச் சின்ன விஷயங்கள்

குழந்தைக்கு உதவுவது என்றாலே வீட்டுல தினமும் பல மணி நேரம் உட்கார வைத்து படிக்க வைக்கணும் என்று நினைக்க வேண்டியதில்லை.

சில சமயம் நாம் குழந்தையை அணுகுற விதத்திலேயே பெரிய மாற்றம் வரலாம்.

இந்தப் பகுதியில், வீட்டுல ரொம்ப கஷ்டப்படாம செய்யக்கூடிய சில விஷயங்களைப் பார்ப்போம். படிப்பை மட்டும் மையமாக வைக்காமல், குழந்தையின் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வழிகளைப் பார்ப்போம்.

இதில் பார்க்கப்போவது:

- குழந்தையின் சிரமத்தைப் புரிஞ்சுக்கிட்டு எப்படி அணுகலாம்?
- பாராட்டு, தினசரி பழக்கம், ஒரு நிலையான அட்டவணை
- உறுதியா இருப்பதும் அன்பா இருப்பதும் எப்படி ஒன்றாகச் செல்லலாம்?
- படிப்பைத் தாண்டி குழந்தைக்கு இருக்கிற திறமைகளைப் பார்க்கறது
- குழந்தையோட சேர்ந்து வாசிப்பது
- கவனக்குறைவு இருந்தால் எப்போது மருத்துவ ஆலோசனை கேட்கலாம்?

முக்கியமான விஷயம்:
தினமும் செய்யக்கூடிய சின்னச் சின்ன விஷயங்கள்தான் காலப்போக்கில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். குழந்தைக்கு உதவுவது ஒரு நாள்ல முடிஞ்சுட வேண்டிய வேலை இல்ல. கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுற பயணம்.

புரிந்து கொள்வோம்...

2026916160231750.jpg

"பிருந்தா ரகுநாத்"
குழந்தைகள் சிறப்பு கல்வி ஆலோசகர்,
மாண்டிசோரி பயிற்சியாளர்.
98418 83569.