தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260106181357630.jpeg

ஆண்டுக்கு மூணு சிலிண்டர் இலவசம் எடப்பாடி தேர்தல் வாக்குறுதி.

இப்பல்லாம் தேர்தல் வாக்குறுதிகளைக் யாரும் நம்பறது இல்ல !!

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பிப்ரவரி 7-க்கு பிறகு திமுக பேச்சுவார்த்தை.

ஆமா ஆமா இப்ப டைம் சரியில்லை !!

தொகுதி பங்கீடு காங்கிரஸுடன் சுமூக பேச்சு கனிமொழி எம்பி பேட்டி.

உங்க அம்மா சத்தியமா உண்மையா !!

ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில் தான் தமிழக வெற்றிகழகக் கட்சியே நடக்குது முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

அப்ப ஆட்சிக்கு வந்தால் லாட்டரி நிச்சயம் அப்படித்தானே ?

பாஜக எப்போதும் விருப்ப மனு வாங்குவதில்லை -நயினார் நாகேந்திரன்.

ஆமா டெல்லியில் சொல்லுவாங்க, இவங்க நிப்பாங்க அப்படித்தான் பழக்கம் !!

எத்தனை என்ஜின் வந்தாலும் தமிழக வெற்றி கழகம் தான் டாப் எஞ்சின் –விஜய்.

ஆனா பனையூர் விட்டு வெளியே வராது ?

பாமகவுக்கு நல்ல காலம் பிறக்கப்போது டாக்டர் ராமதாஸ்.

குடுகுடுப்பைக்காரர் சொல்வதை எல்லாம் நம்பற அளவுக்கு ஆயிட்டார் டாக்டர் !!

விசில் சத்தத்தால் தீய சக்திகள் தெறித்து ஓடும் –விஜய்.

ரொம்ப சத்தம் போடுறீங்க பார்த்து !!

தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகல்.

எடப்பாடி ஏதாவது சொல்லி இருப்பாரோ !!

திமுகவிடம் அதிகமான சீட்டுகளை கேட்போம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பேட்டி.

கேட்பது உங்கள் உரிமை கைவிரிப்பது அவர்கள் உரிமை !!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்க போகிறது , டாக்டர் ராமதாஸ் கேள்வி.

போன மாசம் ஸ்டாலின் நல்லவர்ன்னு சொன்னீங்க !!

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் நோக்கம் அல்ல -வைகோ பேட்டி.

ஆமா தர மாட்டாங்கன்னு எங்களுக்கு தெரியும் !!

இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு விழா முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

எப்படி இருந்த கட்சி, இப்படி ஆயிடுச்சு !!

திருச்சியில் திமுக மாநில மாநாட்டிற்கு கால் கோள் விழா.

சுப முகூர்த்த சுப வேளையில் நடந்தது , ஆனால் இது பெரியார் மண் சத்தியமா சொல்றேன் நம்புங்க !!