
Heading : "கூட்டி கழிச்சு பாரு" அண்ணாமலை கணக்கு - விகடகவியார்
Comment : R S பாரதி முதல்ல கூச்சலிட, மற்றவர்கள்,புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்கிறார்களோ என்னவோ? பார்க்கவன் Reston VA USA
Heading : சென்னை டூ பாண்டி ! பீர் பஸ் !! - மாலா ஶ்ரீ
Comment : இப்படியாக எல்லாம் செய்து சுற்றுலா பயணிகளை கவர தேவையா? பார்க்கவன் Reston VA USA
Heading : தருணம்
Comment : இரண்டு அடி கவிதையாயினும் பள்ளி கால நினைவுகளில் மூழ்க விட்டது. மிக அருமை.
தணிகைவேல், சண்முகப்ரியா, காரைக்கால்
Heading : வாழ்க்கை இது தான்
Comment : விகடகவியில் வெளியாகும் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கை உளவியல்களை ஒட்டி பரிமளிக்கின்றன.
நவமணி பாண்டியன், சீர்காழி
Heading : சென்னை டூ பாண்டி ! பீர் பஸ் !! - மாலா ஶ்ரீ
Comment : என்னது... சென்னை-பாண்டிக்கு பீர் பஸ்ஸா?! பஸ் கட்டணத்தை கேட்டாதான் 'ஜெர்க்' ஆகுது! அந்த காசுக்கு 2 நாள்ல 4 புல், 10 பீர், சால்னா அயிட்டம், ஒரு படம் பார்த்துட்டு ஊருக்கு திரும்பிடலாம் போலிருக்கே! காஸ்ட்லி மாப்ளே?!
ராஜசேகர், பார்த்திபன், காரைக்குடி
Heading : தமிழில் மஹாத்ரியா - ராம்
Comment : மஹாத்ரிகர் சொல்றதை கேட்கறதுக்கு ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா, அப்படி செஞ்சுக்கிட்டு இருந்தா, நம்மை இளிச்சவாயனா மாத்திடுவாங்க. அப்புறம் நம்ம குடும்பத்தை யார் காப்பாத்தறதுனு பைத்தியமா அலைய வேண்டியதுதான்! உரை நல்லாயிருக்கு, அவ்வளவே... சாமி எல்லாம் வராது. ஆ'சாமி'ங்கதான் அதிகமாகும்!
வசந்தா நாராயணன் , ஓசூர்
Heading : மெளனம் கலையட்டும்.!.
Comment : 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா?'னு சொல்வாய்ங்களே,.. அதுபோல இருக்கு, கவர்னரின் உடனடி ஒப்புதல்! இனிமே அவரது செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.
சிவகாமசுந்தரி, அருணாசலம், விருத்தாசலம்
Heading : விகடகவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Comment : விகடகவி வாசகர்களுக்கு நீங்கள் கூறிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்தியாச முயற்சி. வரும் புத்தாண்டில் விகடகவியின் வளர்ச்சி மேன்மேலும் உயர், எங்களின் நல்வாழ்த்துக்கள்.
கவிதா கிருஷ்ணமூர்த்தி , தென்காசி
Heading : "கூட்டி கழிச்சு பாரு" அண்ணாமலை கணக்கு - விகடகவியார்
Comment : ஊழல், அதிகாரவர்க்கம் பணம், கறுப்புப் பணம், அளவுக்கு மீறி சொத்து சேர்ப்பது, அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இதெல்லாம் அரசியலில் சகஜம் என்ற அளவுக்கு மக்கள், அரசியல்வாதிகளின் சுரணை சுருங்கிவிட்டது தான். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் மக்கள் மனதில் அதிர்வலை ஏற்படுத்தாது. ஏன்னா, தமிழக மக்கள் அதிக பணம் வாங்கி ஓட்டு போட பழகியதுதான்!
திலகவதி, பாக்யா, ராகவன், பிரியா, சென்னை
Heading : "என்ன புலியவே காணோம் " பிரதமரின் முதுமலை விசிட். - ஸ்வேதா அப்புதாஸ்.
Comment : பிரதமர் மோடியுடன் நாங்களும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் யானைகள் சரணாலயத்துக்கு சென்று வந்தது போலிருக்கிறது. அதுசரி, ஒரு பெண் முதன்மை துறை செயலாளர் எப்படி துறை அமைச்சர், மாவட்ட கலெக்டரை ஓரங்கட்டலாம்? அவருக்கு என்ன சூப்பர் பவரா?! அவரை யாரேனும் ஓரங்கட்டி ராவ் சும்மா இருப்பாரா??
சிகப்பி, மாயா குப்புசாமி, அண்ணாநகர்
Heading : சினிமா சினிமா சினிமா -லைட் பாய்
Comment : கிளுகிளு நடிகைங்க படங்களை பார்த்ததும் லைட்பாய்க்கு கை ஒதறும் போலிருக்கே... நடிகை பிரியாமணி என எழுதுவதற்கு பதில் 'நடிகர்' எனக் கூறுகிறாரே? அவர் எப்போதும் பருத்தி வீரனாக மாறினார்?
பத்மநாபன், சுகாசினி, பிரமிளா, ஐதராபாத்
Heading : ஜோ பைடன் அயர்லாந்து விசிட் - டப்ளிலினிலிருந்து சிவராமன்
Comment : உலகெங்கிலும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரந்து விரிந்திருப்பதும், அவர்கள் உயர் பதவிகளில் மிடுக்குடன் வீற்றிருப்பதும் மெச்சத்தகுந்ததே! இதேபோல் தமிழர்கள் வருவார்களா, வரவிடுவார்களா என்ற சந்தேகமும் வராமல் இல்லை! ஏன்னா, இப்போ தமிழர்கள் 'சோம' பானத்தில் மூழ்கிவிட்டனரே!
ராதா வெங்கட், சிவசங்கரன், வளசரவாக்கம்
Heading : கருணை நிறைந்த மும்பைகர்கள் - பால்கி
Comment : மும்பை லோக்கல் டிரெயின்ல பயபுள்ளைக ஏறி இறங்குறாகளா? பொம்பளை பசங்க, வயசானவங்க கதியை நினைச்சா பயமா இருக்கு! சர்க்கஸ்ல சிங்கத்தோட அசைவுக்கேற்ப ரிங் மாஸ்டர் அங்குமிங்கும் ஓடுற மாதிரி இருக்கு. கொடுமை!
ராஜசேகரன், விஸ்வம், குணா, பெங்களூர்
Heading : கூரையைப் பிய்த்துக் கொண்டு குழந்தை வரம் - மாலா ஶ்ரீ
Comment : ஆப்ரிக்க பெண் நபடான்சி நிலையை நினைச்சா பரிதாபமா இருக்கு. ஒவ்வொரு பிரசவத்துக்குப் 2, 3, 5 என பெத்து போட, அதென்ன ஜெராக்ஸ் மெஷினா? அதுகூட சூடாச்சுன்னா நின்று போய்விடும்! இதுக்கு மேல வேணாம். கிடைக்கற பணத்தை இனிமே குழந்தைகளை வளர்க்க பாரும்மா... இங்க ஒண்ணு, ரெண்டு வளர்க்கறதே பெரிய விஷயமா இருக்கு!
Heading : தன் முடிவை தைரியமாக எதிர் கொண்ட டாக்டர் - மாலா ஶ்ரீ
Comment : டாக்டர் ஹர்ஷவர்தனின் மனிதநேய மற்றும் முன்னேற்பாடு பணிகள் பாராட்டுக்கு உரியது. அவரை போல் ஒவ்வொருவரும் திட்டமிட்டு, தங்களின் உடல்நலனிலும் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என்பதை பிரார்த்தனையாக வலியுறுத்துகிறோம்.
கங்காதரன், சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
Heading : வாசகர் மெயில்
Comment : வணக்கம், சென்ற சில வாரங்களாகப் பாரத மலைக்கோவில்கள் வரவில்லையே? நானும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் தொடர்ந்து படித்து வருகின்றோம். ஆரூர் சுந்தரசேகர் அவர்கள் எழுத்தின் மூலம் நாங்கள் கோயிலை நேரில் பார்ப்பதைப் போன்று உணர்கின்றோம். மற்றும் YouTube இணைப்பும் பிரமாதமாக உள்ளது. பாரத மலைக்கோயில் தொடரை விரும்பி எதிர்பார்க்கும் விகடகவி வாசகர் B.கோபாலகிருஷ்ணன், குரோம்பேட்டை.
GOPALAKRISHNAN, CHROMEPET

Leave a comment
Upload