
ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சார் அவர்களின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
ஸ்ரீ சிவன் சார் அவர்களுக்கு வைர அபயஹஸ்தம் மற்றும் நவரத்ன கவசம் சாற்றிய ஆச்சர்யம்.
நமக்கெல்லாம் தெரியும் இத்தனை வாரங்களாக நாம் பல ஆச்சர்ய அனுபவங்களை அனுபவித்து வந்துள்ளோம். அதில் ஸ்ரீ சிவன் சார் கணக்கு வழக்குகளில் எவ்வளவு தெளிவாக இருப்பர் என்று பார்த்திருக்கிறோம். சிலரிடம் கேட்டு வாங்கியுள்ளார் சிலருக்கு கேட்காமலே கொடுத்துள்ளார். கேட்டு வாங்கியவர்களின் தொகையை அப்படியே அவருக்கு சேரும்படி செய்துள்ளார். அது போல் பக்தர்கள் விரும்பும் கைங்கர்யங்கள் நடக்க எப்படி அனுக்கிரஹம் செய்துள்ளார் என்று தெரிந்துகொள்வோம்

Leave a comment
Upload