
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டை சேர்ந்தவர் ஃப்ளமினி. இவர் 'Time Cave' பரிசோதனைக்காக, தெற்கு ஸ்பெயினில் 230 அடி ஆழமான குகைக்குள் கடந்த 2021-ம் ஆண்டு, நவம்பர் 21-ம் தேதி தனது 48-வது வயதில் சென்றிருக்கிறார். இக்குகைக்குள் உள்ளேயே தனது 2 வருட பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அங்கு, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற உக்ரைன்-ரஷ்யா போர், உலக கோப்பை கால்பந்து போட்டி, துருக்கி நிலநடுக்கம் போன்ற முக்கிய சம்பவங்கள் எதுவும் தெரியாதபடி ஃப்ளமினி வாழ்ந்துள்ளார்.
குகைக்குள் உளவியலாளர்கள், உடற்பயிற்சியாளர்கள், ஆய்வாளர்கள் என பலரது கண்காணிப்பில் இருந்தாலும், 500 நாட்கள் வரை யாருடனும் நேரடி தொடர்பு இல்லாமல் புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல், உடற்பயிற்சி என ஃப்ளமினி
பொழுதுபோக்கியுள்ளார். தனது இலக்கை கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக நிறைவு செய்து, குகையில் இருந்து ஃப்ளமினி வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்ததும், முதல் வேலையாக குளிக்கப்போவதாக ஃப்ளமினி தெரிவித்துள்ளார். மேலும், குகைக்குள் 500 நாட்களில் தனது ஒவ்வொரு நாள் செயல்பாடுகளையும் ஃப்ளமினி வீடியோ காட்சிகளாக பதிவு செய்து, தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். தற்போது அவை பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது...

Leave a comment
Upload