தொடர்கள்
அனுபவம்
ஊட்டி 200 யை சுற்றி வந்த ஜான் சலிவனின் கொள்ளு பேத்திகள் - ஸ்வேதா அப்புதாஸ் .

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நவீன ஊட்டி உருவாகி 200 வருடங்களை சிறப்பிக்க வேண்டும் என்ற முடிவை நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் நீலகிரி எம் .பி .ராசாவிடம் சல்லிவன் கோர்ட் ஹோட்டலில் அறிமுகம் செய்து வைக்க அதற்கான அனைத்து முயற்ச்சிகளும் துரிதமாக எடுக்கப்படும் என்று கூறினார் ராசா .

20230501193333972.jpg

இந்த ஊட்டி 200 ஆம் வருடத்தை சிறப்பிக்கவே வேணுகோபால் தி மு காவில் உறுப்பினராக சேர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

20230501193605351.jpg

ராசா ஊட்டி 200 ரை பற்றி முதல்வரிடம் எடுத்து கூற ஊட்டி நகர் புது பொலிவு பெற 10 கோடியை நகராட்சியிடம் வழங்க உத்தரவிட்டார் முதல்வர் .

20230501193635616.jpg

கடந்த 2022 மலர்க்காட்சியில் ஊட்டி 200 ஆம் வருடம் சிறப்பிக்கம் துவக்க விழாவை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து கார்டன் சாலையில் ஜான் சல்லிவனின் உருவ சிலையை திறந்து வைத்தார் .

பலவருடமாகவே வேணுகோபால் இதற்கான பணிகளை தனிப்பட்ட முறையில் செய்து வந்தார் .

20230501193747926.jpg

ஜான் சல்லிவனின் உறவுகளை லண்டன் சென்று நேரில் சந்தித்து அவர்களின் ஊட்டி விசிட்டை உறுதி செய்து வைத்தார் .

ஜான் சல்லிவனின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தி பின் அவரின் ஐந்தாவது தலைமுறை பேத்திகளை சந்தித்து அவர்களை ஊட்டிக்கு வர அழைப்பு விடுத்தார் .

20230501193831557.jpg

இதற்கிடையில் நீலகிரி எம் .பி .ராசாவும் லண்டன் சென்று ஜான் சல்லிவனின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தி பின் அவரின் பேத்தியான ஓரியலை சந்தித்து அரசு விருந்தினராக ஊட்டி வர அழைப்பு விடுக்க நெகிழ்ந்து போய்யுள்ளனர் .

20230501194023259.jpg

அவர்களின் வருகை உறுதி செய்ய மலர்க்காட்சிக்கே அவர்களை சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டனர் .

20230501200656707.jpg

ஊட்டி வந்த அவர்கள் தமிழக மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர் .

20230501194151137.jpg

ராசா அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பாக உரையாடினார் .

20230501194227416.jpg

ஓரியல் ஏன் சல்லிவன் அலோன் மற்றும் ஜோசிலியன் பெரி ஸ்மித் சல்லிவன் இருவரையும் நீலகிரியின் முதல் ஆலயமான செயின்ட் ஸ்டீபன் சர்ச்சில் வரவேற்பு கொடுத்து சிறப்பு நன்றி வழிபாடு நடைபெற்றது .

20230501194301644.jpg

தங்களின் பாட்டி ஹாரிட்டா அவரின் மகள் ஹாரிட் கல்லறைக்கு சென்று மலர் வைத்து கண்கலங்கி மரியாதை செலுத்தினார்கள் .

20230501194354331.jpg

சிறப்பு பிராத்தனை வழிபாட்டில் ஸ்டீபன் சர்ச்சில் பணிபுரிந்த பாதிரிகள் ஆலய உறுப்பினர்கள் மற்றும் வேணுகோபால், பத்திரிகையாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர் .

20230501194424978.jpg

மூத்த பாதிரி மல்லே சிறப்பு உரை நிகழ்த்தினார் ,

20230501194622712.jpg

" ஊட்டி 200 மற்றும் ஒரு நபர் அவர் தான் ஜான் சல்லிவன் .அவர் இங்கு வரவில்லை என்றால் ஊட்டி என்ற மலைகளின் அரசியே இல்லை . ' All Roads leads to Rome ' என்பது போல இந்த மாவட்டத்தின் எல்லா

20230501201044149.jpg

சாலைகளும் ஊட்டியை நோக்கி தான் அப்படி அனைத்து சாலைகளும் ஜான் சல்லிவனால் உருவாக்க பட்டன அவரின் ஐந்தாவது தலைமுறையான இவ்விருவரும் இந்த ஆலயத்திற்கு வந்துள்ளது இறைவனின் அருள்" என்று கூறினார் .

20230501194717393.jpg

ஆலய பாதிரி அருண் திலகன் , " ஜான் சல்லிவனின் பேத்திகள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்திற்கு வருகை புரிந்தது ஊட்டி வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு வைரம் போல ஜொலிக்கப்போகிறது".

என்று கூறினார் .

20230501194755813.jpg

ஓரியல் சல்லிவன் தன் உரையில் , " இருநூறு வருடங்களுக்கு பின் எங்கள் கிரேட் கிராண்ட் பாதர் ஜான் சல்லிவன் உருவாக்கின ஊட்டிக்கு இறைவன் எங்களை அழைத்து வந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும் .அதிலும் எங்கள் கிரேட் கிராண்ட்மா துயில்கொள்ளும் ஆலயத்திற்கு வந்து இந்த நன்றி பிராத்தனையில் கலந்து கொண்டது ஒரு அதிசியமான ஒன்று என்று தான் கூறவேண்டும் .எங்களை இங்கு அழைத்து வந்த வேணுகோபால் , எம் .பி ராசா மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறுகின்றோம் " என்று ஆனந்த் கண்ணீர் உதிர்த்து பேசினார் .

20230501194911874.jpg

இந்த சிறப்பு விருந்தினர்கள் ஊட்டி , குன்னூர் , கோத்தகிரி என்று பல இடங்களை சுற்றி பார்த்தனர் .

20230501195008483.jpg

ஊட்டி கிளப் சென்று உலகின் முதல் பில்லியர்டு போர்டை பார்த்து பிரமித்து போய்யுள்ளனர் .

20230501195157945.jpg

இதுவரை இந்திய உடையான புடவை கட்டி பார்க்க ஆசை பட அதற்கான ஏற்பாட்டை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பெரியதர்ஷனி செய்தார் .

கிரேப் கலர் புடவையை ஓரியிலி சல்லிவனுக்கும் .

பிங்க் கலர் புடவை ஜோசிலியன் சல்லிவனுக்கும் அழகாக கட்டிவிட்டனர் டெபுடி தாசில்தார்கள் உமாவும் , சுகந்தியும் .

20230501195421179.jpg

இரு வெள்ளைக்கார நங்கைகள் புடவை கட்டிய வண்ணம் 4 ஆம் எண் அறையில் இருந்து வெளியே வர 'மதராசி பட்டணம் ' படம் தான் நம் நினைவுக்கு வந்தது .

20230501195520249.jpg

இருவரையும் புடவையில் பார்த்து பிரமித்து போனார் வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி !.

20230501195601262.jpg

நாம் இருவரின் நடுவில் நின்று போஸ் கொடுக்க வருவாய் அலுவலர் ஒரு நிமிடம் சாவினிரை அவர்களுக்கு கொடுத்து விடுகிறேன் என்று கூற ஓகே சொன்னோம் .

20230501200110670.jpg

கம்பிர தமிழக மாளிகையின் முன் இருவருக்கும் ஜான் சல்லிவனின் சாவினிரை வழங்கினார் .பின்னர் மூன்று அலுவலர்களும் புன்னகையுடன் படம் எடுத்து கொண்டனர் .

20230501200020806.jpg

ஜான் சல்லிவனின் சாவினிரை எம் .பி .ராசா மற்றும் தர்மலிங்கம் வேணுகோபால்

20230501200430347.jpg

தொகுத்துள்ளது குறிப்பிட தக்கது .

20230501200355869.jpg

" இந்த அழகிய ஹில்ஸ் ஊட்டியை சுற்றி வந்ததை மறக்க முடியாது அதிலும் டைகர் ரிசெர்வ் பாரஸ்ட் சென்று வந்தோம் எலிபண்ட் , பைசன் , மங்கி பார்த்தோம் வெரி நைஸ் இந்த பத்து நாள் எங்க தாத்தா சல்லிவனுடன் இருந்தது போல உணர்ந்தோம் " என்று கூறினார்கள் .

20230501201207883.jpg

இவர்கள் "தி எலிபண்ட் வீஸ்பெர்ஸ் " கதாபாத்திரங்களான பொம்மன் , பெள்ளி , ரகு வை சந்திக்கவில்லையாம்

20230501201309929.jpg.

ஊட்டி 200 ஆம் ஆண்டையும் இவர்களின் விசிட்டையும் நீலகிரி என்றும் மறக்காது .