தொடர்கள்
அழகு
தாமிரபரணியை சுத்தப்படுத்திய ஆட்டோ டிரைவர்கள் - மாலா ஶ்ரீ

20230503071952271.jpeg

ஒரு காலத்தில் பொங்கிப் பிரவாகமாக ஓடி தென்மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்த தாமிரபரணியின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

வீரவநல்லூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லூர்துராஜ், தனது நண்பர்களுடன் இணைந்து, கடந்த பல ஆண்டுகளாக வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் உள்ள தாமிரபரணி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணிகளில் தளர்வின்றி ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 3 நாட்களில் மட்டும் ஆட்டோ டிரைவர் லூர்துராஜ் குழுவினர், தாமிரபரணி ஆற்றில் சுமார் 200 அடி தூரத்துக்கு குப்பைக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தி உள்ளனர். இந்த தூய்மைப் பணியின்போது, தாமிரபரணி ஆற்றில் கிடந்த சுமார் 2 டன் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள், பழைய துணிமணிகள் மற்றும் செருப்புகளை அகற்றியுள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் மனித குலத்தின் மிகப் பெரிய எதிரி. பூமியை சூடாக்குவதில் மனித கண்டுபிடிப்புக்களில் முதலிடம் பிளாஸ்ட்க் தான். பாழாய்ப் போன பிளாஸ்டிக்கை முடிந்தவரை விட்டொழிப்போம்.