தொடர்கள்
பேரிடர்
ஓடிஷா இரயில் விபத்து - ஒரு தேசியத் துயர் ! பால்கி

2023050312565084.jpg

2 ஜூன் மாலை 8 மணி அளவில், அதாவது நேற்று இரவு, ஒடிஷாவின் பலாசோர் என்னும் ரயில் நிலையத்திற்கருகில் நின்றுகொண்டிருந்த சரக்கு இரயில் மீது இரண்டு பயணிகள் ரயில்கள் மோதின.

ஒரு பயணி இரயில் இஞ்சின் சரக்கு இரயிலின் ஒரு கண்டெய்னருக்குள் இருக்கும் படம் கொடுமை. இன்னும் மற்ற புகைப்படங்களை சம்பவ இடத்திலிருந்து தேசிய இந்தி மற்றும் ஆங்கில செய்தி சானல்கள் இடைவிடாது காட்டிக் கொண்டிருக்கின்றன.

20230503155408640.jpg

ஆக, மூன்று இரயில்கள் மோதிக்கொண்டன என்று தெரிகிறது. ஒரு சரக்கு இரயில், சென்னை செல்லும் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்ப்ரஸ், மற்றும் பெங்களூர், யஷ்வன்த்பூர் ஹௌரா எக்ஸ்ப்ரஸ்.

20230503140158731.jpeg

20230503140306415.jpg உடனே ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்னாய்க்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி குமாரும் சம்பவ இடத்தில் ஆஜராகி விட்டனர்.

2023050314040228.jpeg

இரயில்வே அமைச்சர் இந்த சம்பவம் பற்றிய ஆய்வறிக்கை கொடுக்க உயர் மட்ட அளவிலான குழு ஒன்றிற்கு உத்திரவிட்டுள்ளார். தொழில் நுட்ப தவறா, அதைக் கையாளும் நபரின் தவறா என்பது இனி தான் தெரிய வரும். யார் தவறாக இருந்தால் என்ன, கொடுக்கும் இழப்பீடுகளும், அல்லது டிஸ்மிஸ்களும் இழந்த உயிர்களை திரும்பக் கொண்டு வருமா என்ன ??

உள்ளூர் போலீஸ் உள்ளூர் மக்களின் உதவி கொண்டு தொடங்கியது மீட்பு பணி.

இப்போது வரை வந்த செய்திகள் படி 300 பயணிகளின் மரணம் ஏறக்குறைய 1000 பயணிகள் காயம் அடைந்திருக்கிறார்கள் என்று தகவல் வந்து கொண்டிருக்கின்றன. இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் கூடும். விபத்தின் கோரம் அப்படி.

20230503155437212.jpg

கடந்த 28 ஆண்டுகளில் நடந்த மிகக் கொடூரமான விபத்து எனவும் தெரிகிறது.

ஒரு புறம் கட்டாக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பப்படுவதும், மீட்பு பணி குழுவினர் சேதமடைந்த பெட்டிகளில் உடல்களை மீட்ட வண்ணமிருக்கின்றனர்.

7 தேசீய பேரிடர் மீட்பு குழுக்களும், 5 மாநில பேரிடர் மீட்பு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்கள் களத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸுகள் பம்பரமாய் சுழல்கின்றன.

இராணுவம், கடற்படை, விமானப் படைகளும் அங்கே ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசின் பிரதிநிதிகளும் அங்கு செல்ல இருக்கிறார்கள்.

வங்காள முதல்வர் மம்தா பானர்ஜீயும் சம்பவ இடத்திறகு வர இருக்கிறாராம்.

காலியாக இருக்கும் பெட்டிகளை பார்க்கும் போது கிடைத்ததை எடுத்துக்கொண்டு தப்பிக்கும் வழிகளில் பயணிகள் வெளியேறியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. அந்த வேகத்தில் பெட்டியில் உள்ள விஷயங்கள் தூக்கி வீசப்பட்டிருக்கவும் கூடும். மற்ற பெட்டிகளில் பயணிகளின் பொருட்கள் தாறுமாறாக சிதறிக் கிடப்பதை டீவீ சானல்களில் காண்பிக்கப்படும் நேரடி ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் தலைமையில் இந்த சம்பவம் தொடர்பாக அவசர ஆய்வு கூட்டம் சற்று முன்னர் முடிவடைந்த நிலையில் அவரும் சம்பவ இடத்திற்கும் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதே சமயம் கட்டாக்கில் ஆஸ்பித்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களையும் நேரில் காணப் போகிறார்.

உள்ளூர் மக்களின் தன்னார்வ உதவி வெகுவாக பாராட்டும் படி உள்ளது. மீட்புக் குழுவினரோடு சேர்ந்து சடலங்களை அப்புறப்படுத்துவதும், காயப்பட்டவர்களை ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றி விடுவது மட்டுமின்றி, அங்கு தேவைப்படும் ரத்தம் கொடுக்க வரிசை வரிசையாக நிற்கின்றனர்.

ஒடிஷா இந்த விபத்து தொடர்பாக ஒரு நாள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் இதே போன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளது.

இத்தனை துக்கத்திலும் அரசியல் செய்ய யாரும் தவறுவதில்லை.

கேஜ்ரிவாலில் ஆம் ஆத்மீ பார்டீ,” இது ரயில்வே சேவையின் தரம் குறைந்து வருவதைத்தான் காட்டிகிறது.

காங்கிரஸின் தலைவர் கார்கே,” விபத்தைத் தவிர்க்கும் “கவச்” வேலை செய்யவில்லையா?

உத்தவ் தாக்கரே,” ரயில்வே அமைச்சரே! பதவி விலகு”

திரினாமூல் காங்கிரஸ்,” இது மட்டும் எங்க மம்தா பானர்ஜீ மேடம் இருக்கும்போது நடந்திருந்தால் ஒரு பெரிய அளவில் குற்ற்ச்சாட்டு நாடகம் அரங்கேறியிருக்கும்”.

பாஜகாவின் தலைவர் நட்டா இன்று நடப்பதாக இருந்த மோதி அரசின் 9 ஆண்டுகள் நிறைவு தொடர்பான நாடு தழுவிய நிகழ்ச்சிகள் ரத்து செய்வதாக அறிவித்துவிட்டார்.

இந்த கடினமான தருணத்தில், அகால மரணமடைந்தவரின் ஆத்மா சாந்தி அடையவும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும், இவர்களை இழந்து அவதியுறும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்நிலையிலிருந்து தைரியமாக மீளவும் விகடகவியின் பிரார்த்தனைகள்.

அவசர உதவிக்கு கீழ் காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

20230503154544987.jpeg

West Bengal government's emergency control room number: 033- 22143526/ 22535185.
RailMadad helpline: 044- 25354771.
Howrah station helpline number: 033 – 26382217
Kharagpur station helpline numbers: - 8972073925, 9332392339
Balasore station helpline number: 8249591559, 7978418322
Shalimar station helpline number: 9903370746
Odisha government's helpline number : 06782-262286.
Chennai Railway station helpline number: 044- 25330952

ஆதங்கம் :

விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி இரயில் விபத்து நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. டெஸ்லா கார்களில் விரையும் போது சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஏதேனும் வாகனம் இடிப்பது போல இருந்தால் அது ஒரு அலாரம் அடித்து உஷார் செய்யும். இவ்வளவு பெரிய இரயில்வே நெட்வொர்க்கில் ஸ்டேஷன் மாஸ்டரையோ அல்லது சிக்னல் கொடுக்கும் மனிதர்களையோ நம்பியா நம் சிஸ்டம் இருக்கிறது. வெட்கம். இது போன்ற அடிப்படை உயிர் காக்கும் விஷயங்களில் அறிவியல் உதவாமல் சாட் ஜிபிடி, ஆப், என்று இல்லாத விஷயங்களுக்கு நாம் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கின்றோமோ என்று தார்மீகக் கோபம் வருகிறது. ஒரு டிராக்கின் முன்னே இடம் தெளிவாக இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் என்ன பெரிய இரயில்வே நெட்வொர்க்.