தொடர்கள்
அரசியல்
ஆபரேஷன் கரூர் ! அசட்டையாக இருக்கும் அமைச்சர் ! - விகடகவியார் டைரி குறிப்பு

20230503073612701.jpeg

1. எச்சரித்த முதல்வர்

வெளிநாட்டுக்கு புறப்படுவதற்கு முன் முதல்வர் அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியாக அழைத்து எச்சரிக்கையாக இருங்கள் வருமானவரித்துறை அமலாக்கத்துறை உங்களை விசாரிக்க வரக்கூடும். நீங்கள் தொடர்புடைய இடங்களில் அவர்கள் சோதனை நடத்தக்கூடும் என்று சொல்லி இருக்கிறார். இதனால் உஷாரான அமைச்சர் செந்தில் பாலாஜி சர்ச்சைக்குரிய ஆவணங்கள் பணம் போன்றவற்றை வேறு இடங்களுக்கு மாற்றி இருக்கிறார்.

20230503073635710.jpeg

2. திமுகவின் மன்னார்குடி மாஃபியா

டெல்லி மதுபான ஊழல் போல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் திமுகவை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் நத்தம் விஸ்வநாதன் தங்கமணி போன்றவர்கள் டாஸ்மாக் அமைச்சர்களாக இருந்தாலும் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் பார்த்துக் கொண்டார்கள். செந்தில் பாலாஜி மன்னார்குடி மாஃபியாக்களிடம் அரசியல் படித்தவர் அவர்கள் இப்போது எப்படி நடுத்தெருக்கு வந்திருக்கிறார்களோ அதேபோல் நம்மையும் அவர் கொண்டு வர பார்க்கிறார் என்ற பேச்சு திமுகவில் வர தொடங்கிவிட்டது. இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் செந்தில் பாலாஜி என்று பொறும ஆரம்பிச்சிருக்கிறார்கள்.

20230503073700714.jpeg

3. முதல்வர் கோபம்

​முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு போன நாட்களில் இருந்து திமுகவுக்கு விரும்பத்தகாதச்சில சம்பவங்கள் நடந்து வருகிறது. அமலாக்கத்துறை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சொத்துக்கள் முடக்கம் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக தங்கள் இலாகா ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறது. ஆனால் உதயநிதி தரப்பு எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வருகிறார்கள். செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை கரூரில் திமுகவினர் அதிகாரிகள் மீது தாக்குதல் இது போதாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் பற்றி அவதூறாக தனது ட்விட்டரில் பதிவு செய்ய அது தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை இந்த விஷயம் முதல்வரின் கவனத்திற்கு போனதும் அமைச்சரை அழைத்துவிளாசித் தள்ளிவிட்டார். ஒரு அமைச்சர் மாதிரி நடந்து கொள்ளுங்கள் என்று சத்தம் போடஇதன் பிறகு பயந்து போன அமைச்சர் மனோ தங்கராஜ். அந்தப் பதிவை ட்விட்டரில் இருந்துநீக்கி இருக்கிறார்.

4. அடுத்த டாஸ்மாக் அமைச்சர்

​செந்தில் பாலாஜி அடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கும் தேவைப்பட்டால் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளும். எனவே அடுத்த டாஸ்மாக் அமைச்சர் யார் என்ற பேச்சு இப்போதே அமைச்சர்கள் வட்டாரத்தில் வரத் தொடங்கி இருக்கிறது அமைச்சர் துரைமுருகன்,நேரு ஆகியோர் டாஸ்மாக் மீது பாசமாக பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால்,உதயநிதி ஸ்டாலின் சாய்ஸ் இன்றைய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரிடம் தான் டாஸ்மாக் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வரிடம் ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்கிறார்.

2023050307402500.jpeg

5. வருமான வரித்துறை கோபம்

​வருமானவரித் துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதை வருமானவரித்துறை கொஞ்சம் சீரியஸ் ஆகத்தான் பார்க்கிறது. இதுவரை பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்திருக்கிறது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கூட வருமான வரித்துறை சோதனைக்கு அன்றைய ஆளுங்கட்சி முழு ஒத்துழைப்பு தந்திருக்கிறது. கரூரில் சிகிச்சை பெற்று அதிகாரிகளை இயக்குனர் சிவசங்கரன் நேரில் சென்று நலம் விசாரித்துஆறுதல் சொல்லியிருக்கிறார். அப்போது தாக்குதலுக்கு ஆளான பெண் அதிகாரி அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி தான் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.புலனாய்வுத் துறை இயக்குனர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் போன்றவற்றைப் பற்றி விசாரித்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. தப்ப முடியாமல் அவரை எப்படி இருக்குவது என்று பாருங்கள் என்று சொல்ல அதற்கு சோதனை செய்த அதிகாரிகள் நமக்கு தேவையான ஆதாரங்கள் நிறைய கிடைத்திருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டு நமது தரப்பில் இருந்து சிலர் வருமானவரி சோதனை வர இருக்கிறது என்று அமைச்சரை அலர்ட் செய்திருக்கிறார்கள் என்ற தகவலும் அந்த அதிகாரிகள் சொல்ல யார் அந்த கருப்பு ஆடுகள் என்று கண்டுபிடிங்கள் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார். வருமான வரித்துறை புலனாய் இயக்குனர்.

6. ஆச்சரியம்

​திமுக தரப்பில் ரெய்டு பற்றி எந்த பயமும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ரெய்டு நடந்த முதல் நாள் அவர் கோட்டையில் அதிகாரிகளுடன் இருந்தார். இரண்டாம் நாள் கரூரில் அவர்கள் பாட்டுக்குரைடு நடத்தட்டும் நாம்கலைஞர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவோம் என்று கூட்டத்தைத்நடத்திக் இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

7. யாருமே இல்லை

​ஏற்கனவே அமலாக்கத்துறை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சொத்துக்களை முடக்கியதை தொடர்ந்து செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை என்றதும் அடிக்கடி அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு உதயநிதி ஸ்டாலின் என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். அவங்களுக்கு எதுவும் சிக்காது என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னொரு முக்கிய விஷயம் வருமானவரித்துறை யார் யார் வீட்டுக்கு ரெய்டு சென்றார்களோ அங்கே சம்பந்தப்பட்டவர் இல்லை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் இல்லை இதே போல் கரூர் துணை மேயர் வீட்டுக்கு சென்றபோது அங்கும் அவர் இல்லை இப்படி பல இடங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லாதது வருமான வரித்துறைக்கு கூடுதல் ஆச்சரியம் கூடவே சந்தேகம்.

8. யாரோ சொல்லி இருக்கிறார்கள்

​வருமான வரித்துறை எப்போது சோதனைக்கு சென்றாலும் அவர்கள் முதலில் கைப்பற்றுவது சம்பந்தப்பட்டவர்களின் செல்பேசிகள் தான் அப்படியே கைப்பற்றப்பட்ட செல்பேசிகளை ஆய்வு செய்தபோது சில வாய்ஸ் மெசேஜ் சில குறுந்தகவல்கள் இவற்றையெல்லாம் பார்த்த போது வருமானவரித்துறை சோதனை வரவிருக்கிறது என்பது முன்னெச்சரிக்கையாக இவர்களுக்கு யாரோ சொல்லி இருக்கும் விஷயம் தெரிந்தது. ஆனாலும் சோதனையை தீவிரப்படுத்தியதில் அவர்களுக்கு வேண்டிய ஆதாரங்கள் கரெக்டாக சிக்கியது ஆனாலும் செந்தில் பாலாஜி அசராமல் தான் இருக்கிறார்.

9. அடுத்து வருகிறது அமலாக்கத்துறை

​என் வீட்டில் எந்த ரெய்டும் நடக்கவில்லை என்று செந்தில் பாலாஜி சொல்லி வருகிறார்.ஆனால் வருமான வரித்துறை அவர் தொடர்புடைய இடங்களில் சிக்கிய ஆதாரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்டவை. எனவே அமலாக்கத்துறை தான் செந்தில் பாலாஜியை விசாரிக்க வேண்டும் அதனால் தான் வருமானவரித்துறை செந்தில் பாலாஜி வீட்டுக்கு செல்லவில்லை விரைவில் அமலாக்கத்துறை வந்து தனது கடமையை செய்யும்.

20230503073826441.jpeg

10. கரூர் குரூப்ஸ்

​ஒரு பக்கம் டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் அபராதத்துடன் பணியாளர் மீது கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கை செய்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இன்னொரு பக்கம் அமைச்சர் தான் இப்படி கூடுதல் விலை விற்க சொல்கிறார் என்று டாஸ்மாக் ஊழியர் சொல்லும் வீடியோ ஒன்று வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. இதன் நடுவே கரூர் குரூப்ஸ் என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் அராஜகமாக பணம் வசூல் செய்வோரை தடுக்க கோரி சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு சி ஐ டி யு ஏ ஐ டி யூ சி அண்ணா தொழிற்சங்கம் உள்ளீட்ட ஒன்பது சங்கங்கள் கடிதம் எழுதி இருக்கிறது. ஜூன் 20- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு நடக்கிறது.

11. எட்டு நாள் சோதனை

​கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மற்றும் நண்பர்கள் ஆதரவாளர்கள் வீடுகள் அலுவலகங்களில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்தது. எட்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத மூன்றரை கோடி பறிமுதல்350 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு என்ற தகவல்களை வருமான வரித்துறை சொல்லி இருக்கிறது.

12. மேல் முறையீடு

​வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 19 பேருக்கு ஜாமீன் வழங்கியது கரூர் நீதிமன்றம். இப்போது அதை எதிர்த்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யச் சொல்லி மேல்முறையீடு செய்திருக்கிறது வருமான வரித்துறை.

13. இரண்டு பெட்டிகள்

​செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கிறது வருமான வரித்துறை. வருமான வரித்துறை சோதனை வர இருப்பதை கேள்விப்பட்டு இந்த ஆவணங்கள் கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் வீட்டில் பத்திரப்படுத்தப்பட்டு இருந்ததாம்.