ஸ்ரீ லீலா

இப்போது தெலுங்கு படத்தில் மிகவும் பிசியாக இருக்கும் நடிகை ஸ்ரீ லீலா தான். சமீபத்தில் ராஷ்மிகா ஒரு படத்தில் இருந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விலகினார். இப்போது அந்தப் படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார்.
நயன்தாரா

படத்தின் பிரமோஷனுக்காக நடக்கும் நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கமலஹாசன் விஜய் ஆகியோர் கலந்து கொள்வார்கள். நடிகர் அஜித் இது போன்ற நிகழ்ச்சியை தவிர்ப்பார். அதேபோல் நடிகை நயன்தாராவும் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன் என்று மறுப்பார். ஆனால், இப்போது ஜவான் படத்துக்கு படத்தின் பிரமோஷன் காட்சிகளுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று படப்பிடிப்பு நிறுவனம் சொல்ல நயன்தாராவும் ஓகே சொல்லிவிட்டார்.
மீரா நந்தன்

வால்மீகி அய்யனார் சண்டாமிர்தம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் மலையாள நடிகையான மீரா நந்தன். இதுவரை அவர் குடும்பப்பாங்கான படங்களில் தான் நடித்திருக்கிறார். திடீரென கவர்ச்சி படங்களை தனது வலைதளத்தில் பதிவு செய்ய சினிமா வாய்ப்புக்காக நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்று ஒரு ரசிகர் கருத்து சொல்ல இது என் தனிப்பட்ட விருப்பம் உடைகளை வைத்து யாரையும் எடை போடாதீர்கள் என்று ரசிகருக்கு டோஸ் விட்டிருக்கிறார் மீரா நந்தன்.
வில்லன் ஹீரோ

கைதி மாஸ்டர் விக்ரம் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், அநீதி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இது தவிர ரசவாதி என்ற படத்தில் ஹீரோவாக இருக்கிறார். இன்னொரு பெயரிடாத படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸுக்கு ஜோடி ஷிவாத் மிக ராஜசேகர் இவர் நித்தம் ஒரு வானம் படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்

நாக சைதன்யா கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மீனவர்கள் வசிக்கும் கிராமத்தை சுற்றிய கதை. இந்த படத்தில் மீனவ பெண்மணியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இரண்டு நாயகிகள்

விஜயின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இது பழைய செய்தி. இந்தப் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயினிகள் ஒருவர் ஜோதிகா இன்னொருவர் பிரியங்கா மோகன்.
அதிதி ஷங்கர்

விருமன் படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடித்த அதிதி ஷங்கர் அடுத்து இன்னொரு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு 800 கோடி. ஆசியாவில் பத்து பிரபல நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் இருந்து வருகிறார்.
சட்னி சாம்பார்

சட்னி சாம்பார் இது ராதா மோகன் இயக்கும் புதிய படத்திற்கான பெயர் வாணி போஜன், யோகி பாபு, நிதின் சத்யா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் யோகிபாபு இட்லி கடை நடத்துபவராக நடிக்கிறார். வாணிபோஜன் படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிற பெண் வேடம்.

Leave a comment
Upload