
மிஸ்டர் ரீல் அமலாக்கத்துறை அலுவலக அதிகாரியை பார்க்க போனபோது அவரது மேஜையில் தடிமன் தடிமனாக புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த மிஸ்டர் ரீல் அதிகாரியை பார்த்து "நீங்கள் இன்னுமா பொன்னியின் செல்வன் நாவல் படிக்கவில்லை, அதுதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக வந்து விட்டதே, அதைப் பார்க்கலாமே "என்று சொன்னபோது அந்த அதிகாரி "இதெல்லாம் பொன்னியின் செல்வன் கதை புத்தகம் அல்ல, நாங்கள் சோதனை செய்ய வேண்டிய, நடவடிக்கை எடுக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல் கட்சி வாரியாக வைத்திருக்கிறோம் "என்றார். அப்போது " தனியாக சிகப்பு தடிமன் புத்தகம் இருக்கிறதே அது என்ன "என்று மிஸ்டரர் ரீல் கேட்க "அது ஆளுங்கட்சி அமைச்சர்கள் தவறு செய்த விவரங்கள், ஆதாரங்கள் அடுத்த ஆட்சி மாறினால் இன்றைய ஆளுங்கட்சி மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க ஆதாரம் கேட்டால் தர வேண்டாமா அதற்குத்தான் இது" என்றார் அதிகாரி.
"சரி அதை விடுங்கள் செந்தில் பாலாஜியை ஐந்து நாள் மட்டும் காவலில் எடுத்திருக்கிறீர்கள் அது போதுமா அப்புறம் மேலும் காவலில் எடுக்க ஏன் கேட்கவில்லை எல்லாவற்றையும் அவர் ஒப்புக் கொண்டு விட்டாரா" என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு அமலாக்கத்துறை அதிகாரி "அவரிடம் மொத்தம் 5000 கேள்விகள் கேட்க வேண்டும். இந்த ஐந்து நாட்களில் 50 கேள்விகள் தான் கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லும் போது அமைச்சர் உச்சா போய்விடுகிறார். அவருக்கு டயப்பர் மாற்றி கேள்வி கேட்கிறோம். அப்போது டைபரும் நனைஞ்சு போகிறது. அவரிடம் இருந்து கைப்பற்றிய பணம் முழுவதும் டயப்பர் வாங்கவே செலவாகிவிடம் போலிருக்கிறது. அதனால் மீதி 4950 கேள்விகளை கேட்க வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறோம்" என்றார் அமலாக்கத்துறை அதிகாரி.
ஆர்வத்துடன் மிஸ்டர் ரீல்" அது என்ன அந்த வேறு திட்டம் "என்று கேட்க" அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே 20 க்கு 20 , 400 அடியில் பெரிய பாத்ரூம் கட்டிக் கொண்டிருக்கிறோம். அங்கு வைத்து கேள்வி கேட்பது என்பது திட்டம். இதனால், டயப்பர் செலவுமிச்சமாகும். எப்படி எங்கள் ஐடியா"என்று கேட்க மிஸ்டர் ரீல்" ரொம்ப யோசிக்கிறீர்கள் "என்று பதில் சொன்னார்.
அப்போது "உதயநிதி ஸ்டாலின் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று தொடர்ந்து உங்களை அழைத்து கொண்டு இருக்கிறார் நீங்கள் ஏன் அவர் வீட்டுக்கு போக மாட்டேன் என்கிறீர்கள்" என்று மிஸ்டர் ரீல் கேட்க "அவர் வீட்டுக்குப் போனால் எதுவும் கிடைக்காது அவர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஆதாரங்கள் எல்லாவற்றையும் அவர் செந்தில் பாலாஜியிடம் தந்திருந்தார். செந்தில் பாலாஜி அந்த ஆதாரங்களை அவர் வீட்டுக்கு பால் போடும் பையன், பேப்பர் போடும் பெரியவர், காய்கறி விற்கும் பெண்மணி என்று அவர்களிடம் எல்லாம் ஆதாரங்களை கொடுத்து பத்திரப்படுத்த சொல்லி இருந்தார். இதை செந்தில் பாலாஜியின் திருமதி எங்களிடம் சொல்லிவிட்டார். நாங்கள் அவர்களிடமிருந்து அந்த ஆதாரங்களை வாங்கிக் கொண்டு விட்டோம். இந்த விஷயம் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் செந்தில் பாலாஜியிடம் அடிச்சி கேட்டா கூட உண்மைய சொல்லாதீங்க என்று சொன்னவர் திருமதி செந்தில் பாலாஜியை உஷார் படுத்த மறந்து போனார். அவரிடம் நாங்கள் எல்லா விஷயத்தையும் கேட்டு வாங்கி விட்டோம். அடுத்து சம்மன் கைது என்று தான் எங்கள் நடவடிக்கை இருக்கும் " என்று அமலாக்கத்துறை அதிகாரி சொன்னதும் ஆர்வத்துடன் மிஸ்டர் ரீல் "அந்த நடவடிக்கை எப்போது "? என்று கேட்க "அது எல்லாம் அமித்ஷா முடிவு செய்ய வேண்டிய விஷயம் எங்களுக்கு தெரியாது "என்றார் அமலாக்கத்துறை அதிகாரி.
'இருந்தா கூட செந்தில் பாலாஜி சகோதரரை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை 'என்று நக்கலாக மிஸ்டர் ரீல் கேட்க, செந்தில் பாலாஜி சகோதரர் அவரது வீட்டில் தான் இருக்கிறார். அவரது மனைவியை நாங்கள் விசாரணை செய்யும் போது அவர் செல்பேசியில் வரும்போது இரண்டு கிலோ வெங்காயம் அரை கிலோ தக்காளி வாங்கி வாருங்கள் என்று சொன்னதை வைத்து நாங்கள் மோப்பம் பிடித்ததில் நாங்கள் சீல் வைத்த வீட்டுக்குள் பக்கத்து வீடு வழியாக உள்ளே வந்து அவர்கள் குடும்பம் நடத்துகிற விஷயம் எங்களுக்கு தெரிந்தது. கொஞ்ச நாள் சந்தோஷமாக இப்படியே இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம் "என்றார் அமலாக்கத்துறை அதிகாரி.
அப்படி என்றால் உங்கள் டார்கெட் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் இல்லையா அப்படி என்றால் வேறு யார் என்று மிஸ்டர் ரீல் கேட்க அது ஒரு பெரிய குடும்பம் இப்பொழுதே சொல்ல முடியாது என்று அமலாக்கத்துறை அதிகாரி பதில் சொல்ல, அதுதான் எங்களுக்கு தெரியுமே முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் சபரீசன் அதுதானே என்று மிஸ்டர் ரீல் சொல்ல சபரீசன் எங்கள் பட்டியலில் இல்லை அவர் ஏற்கனவே எங்கள் அலுவலகத்துக்கு வந்து என்னை விசாரிப்பதென்றால் இப்போதே விசாரியுங்கள் கட்சிக்காரர்கள் மந்திரி பதவி கேட்டு தொல்லை பண்ணுகிறார்கள். அதிகாரிகள் டிரான்ஸ்பர் கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள் கொஞ்ச நாள் உங்கள் காவலில் நான் இருக்கிறேன் நிம்மதியாக இருக்கும் என்று எங்களை கெஞ்சினார் நாங்கள் தான் இப்படி சட்டத்துக்கு புறம்பாக உங்களை சிறையில் வைக்க விசாரிக்க முடியாது. அப்புறம் அமித்ஷா கோபித்துக் கொள்வார் என்று அவரை திருப்பி அனுப்பி விட்டோம் என்று அமலாக்கத்துறை அதிகாரி சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் நீங்கள் உண்மையில் அவ்வளவு நல்லவர்களா என்று கேட்க அதற்கு அமலாக்கத்துறை அதிகாரி தெரியலையே என்றார் அப்பாவியாக.
சரி அமலாக்கத்துறை நடவடிக்கை அடுத்து முதல்வர் குடும்பத்தின் மீது எப்போது அவர்களே எங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றெல்லாம் பேசுகிறார்களே என்று மிஸ்டர் ரீல் கேட்க அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக எல்லாம் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் எங்கள் டிஆர்பிரேட் அதால பாதாளத்தில் ஏதாவது செய்யுங்கள் என்று கோரிக்கை வைப்பார்கள் அப்போது நாங்கள் ஆக்சன் எடுப்போம். அப்படித்தான் அமைச்சர் பொன்முடி மீது கூட நாங்கள் சோதனை நடவடிக்கை விசாரணை என்று அவரை பாடாய்படுத்தினோம். சேனல்களும் பொன்முடி கைது செய்யப்படுவாரா இல்லையா என்று சிறப்பு பட்டிமன்றம் எல்லாம் நடத்தினார்கள். இதனால், எங்களுக்கும் ஓசியில் ஒரு விளம்பரம் கிடைத்தது இப்படி எல்லா தரப்பிலும் யோசித்து தான் அமலாக்கத்துறை நடவடிக்கை இருக்கும் என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் உங்க நடவடிக்கை எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கும் போல இருக்கு என்று அலுத்து கொண்டார்
` அப்போது அமலாக்கத்துறை அதிகாரி எதிர்க்கட்சிகள் எங்கள் நடவடிக்கையை பார்த்து பாரதிய ஜனதா கட்சி எங்கள் கூட்டணி கட்சி என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால். நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை அவர்கள் தான் எங்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல் இவர்கள் எப்படி ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்று சொல்லி அமலாக்கத்துறை அதிகாரி சிரிக்க அமலாக்கத்துறை நடவடிக்கையில் கூட அரசியல் கொஞ்சம் ஜாஸ்தி தான் போல இருக்கு என்று யோசித்தபடி புறப்பட்டார் மிஸ்டர் ரீல். நேரம் ஆகி விட்டதால் விகடகவி அலுவலகத்திற்கு மிஸ்டர் ரீல் செய்தியை எழுதி கொண்டு வேகமாக வந்தார்.

Leave a comment
Upload