தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20230725204845171.jpeg

நாலு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் வரிங்க திருநாவுக்கரசர் எம்பியை முற்றுகையிட்ட எஸ் டி பி ஐ கட்சியினர்.

தேர்தல் வரப்போகுதுன்னு தொகுதிக்கு வந்த இப்படி பண்றீங்களேப்பா.

பணம் வாங்கிக் கொண்டு மக்கள் ஓட்டு போடக்கூடாது வைகோ.

ஓட்டு போட அரசியல் கட்சிகள் பணம் தரக்கூடாது என்று ஒரு முறை தைரியமா சொல்லி பாருங்க தலைவரே.

எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய மாநாட்டில் உப்பு,சப்பு இல்லை- ஓபிஎஸ்.

ஆமாம் அவர்கள் கொடுத்த புளியோதரைல உப்பு இல்ல புளியும் இல்லை.

திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியை வெளியேற்ற போலீஸ் முயற்சிக்கிறது தொல். திருமாவளவன்.

பிளாஷ் நியூஸ்க்கு தலைவர் ஏதாவது தகவல் சொல்வார்.

ஆகஸ்ட் 29 மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டம்.

அங்கையாவது மணிப்பூர் பிரச்சனை பற்றி பேசுவாங்களா அனுமதி கிடைக்குமா ?

நீட் தேர்வு விஷயத்தில் திமுக நாடகமாடுகிறது -எடப்பாடி.

அவங்க நாடகம் சினிமா சீரியல்னு எல்லாம் தெரிஞ்சவங்க.

நீட்டுக்கு தமிழ்நாட்டில் விலக்கு கேட்பது நியாயம்தான் பா. சிதம்பரம்.

நீங்க இப்படி சொல்றீங்க உங்க வீட்டு அம்மா கிடைக்காதுன்னு சொல்றாங்க எது சரி.

அதிமுக தானாக எங்களிடம் வரும் ஓபிஎஸ்.

இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க.

காஷ்மீரில் 300-க்கு மேற்பட்ட சினிமா படப்பிடிப்பு, டிவி சீரியல்கள் படமாக்கப்படுகின்றன. காஷ்மீர் துணைநிலை ஆளுநர் தகவல்.

அதாவது துப்பாக்கி சூட்டிங்க்கு பதில் இப்ப சினிமா ஷூட்டிங் நடக்குதாம்.

நீட் தேர்வு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக பேசி வருகிறோம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஆமா வெறுமபேசிகிட்டு மட்டும் தான் இருக்கீங்க ஒன்னும் நடக்கல.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது எங்கள் அரசியல் கோரிக்கை அல்ல முதல்வர் மு. க. ஸ்டாலின்.

அப்புறம் எப்படி தேர்தல் அறிக்கையில் இருந்தது.

தேசியத் தலைவராக உருவாகிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் புகழாரம்.

இருக்கட்டும் இருக்கட்டும் இந்த விஷயம் அமித்க்ஷாவுக்கு தெரியாம பாத்துக்கோங்க.

பழனிச்சாமிக்கு புரட்சி தமிழர் பட்டம்

அப்ப சத்யராஜுக்கு என்ன பட்டம் தருவீங்க

டாஸ்மாக் பணியாளர்களின் 39 கோரிக்கைகள் நிறைவேற்றம் அமைச்சர் முத்துசாமி.

முக்கியமா அந்த கரூர் பாய்ஸ் தொல்லை, கொள்ளை கூடாதுன்னு ஒரு கோரிக்கை வைத்திருப்பார்களே அது நிறைவேற்றமா ?

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை அமலாக்கத்துறை.

ஆமா அவர ரொம்ப கஷ்டமான கேள்வி எல்லாம் கேட்டு இருக்கீங்க.