தொடர்கள்
Other
சந்திரயானும் சமூக ஊடகங்களும்.... பால்கி

சந்த்ரயான் 3 அவரவர் அறிந்தவாரே

23.08.2023 மாலை 6.05 மணி.

20230725225633638.jpg

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு மணிமகுடம் சூடப்பட்ட நாளும் நேரமும். பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய நாளும் கூட. அன்று தான் சந்திரனில் இந்தியாவின் சந்த்ரயான் 3 என்ற விண்கலம் கால் பதித்த நாளாகும். இந்த அரிய சாதனையை* உலகிலேயே நான்காம் நாடெனவும் சந்திரனின் கருமை சூழ்ந்த தென் முனையில் கால் பதித்த முதல் நாடெனவும் பெருமை பெற்றது. முழுக்க முழுக்க மேக் இன் இண்டியா என்ற முறையில் தயாரிக்கப்பட்ட உபரி பாகங்கள் கொண்டது இந்த விண்கலம்.

இந்த செய்தியை ஷோபனா ரவி படித்தால்…..என்பவர்க்கு

இந்த நிகழ்வை உலக நாடுகள் எப்படி கூறின?

வெறும் 615 கோடி ரூபாய் செலவா?

ஒரு ஆட்டோவை நிறுத்தி சந்திரனுக்கு வருவியா? எவ்வளவு கேப்ப? ன்னு கேட்டதுக்கு 1200 கோடின்னு சொல்ல

இஸ்ரோவே 615 கோடில ராக்கெட் உட்டா நீ ஜாஸ்த்தி கேக்குறீயே ன்னு மறிச்சி பேச, ரிடர்ன் எம்ப்டியால்ல வரணும்னு சொல்ல நம்ம சென்னை வாசிகளுக்குக் கூட சிரிப்பு வந்திடும்.

சந்த்ரயான் 1 தோல்வி யடைந்ததை நய்யாண்டி செய்த ந்யூயார்க் டைம்ஸ். அப்போதும் இப்போது எப்படி?

20230725230305891.jpg

20230725230341756.jpg

20230725230429939.jpg

பச்சை விளக்கு படத்தில் கண்ணதாசன் வரிகளைத்தான் என்ன சொல்ல……

தீர்க்கதரிசி.

மகளிர் அரட்டை அரங்கத்தில் ஒரு பெண்மணி கேட்கிறாள்,” அதெல்லாம் சரி, நாம சந்திரனில் வாழ ஆரம்பிப்போம்….ஆனால் இந்த கர்வா சௌத் விரதம் எப்பிடி கொண்டாடுறது?ன்னு தான். (வடக்கே கார்த்திகை மாதத்தில் முழு நிலவு கழிந்த நாலாவது நாளில் அந்நாள் முழுவதும் கணவனின் நீண்ட ஆயுளுக்காக விரதமிருப்பர். அப்போது சந்திரனை ஜல்லடை மூலமாக பார்க்கும் ஒரு சடங்கு உண்டு).

20230725230621907.jpg

அமுலின் விளம்பரம் என்றுமே தனி சிறப்பு தான். நா (மூ மூன் என்று அழகாக குரலிசைவில் ஒன்றாயிருப்பதுதான் சிறப்பு) இனிப்பை சுவைக்கட்டும்.

20230725230702535.jpg

ஆங்கில பத்திரிகைகள் இந்தியா சந்திரனில் என்பதை விதம் விதமாக கூறியிருப்பது ரசிக்கத் தக்கவை.

20230725230731215.jpg

சைக்கிளிலும் மாட்டு வண்டியிலும் விண்கல பாகங்கள் பல இடங்களிலிருந்தும் விண்ணில் செலுத்தும் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த நாட்களும் உண்டு.

20230725230816860.jpg

பிஹார் மாநில லல்லூ கட்சியின் எம் எல் ஏ, சந்த்ரயான் 3 வெற்றிக்கு நாசா விஞ்ஞானிகளைப் பாராட்ட,

ராஜஸ்தான் மினிஸ்டர்,” இந்த விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்களைப் பாராட்ட,

இன்னொரு பிஹார் எம் எல் ஏ, ஒரு படி மேலே சென்று, சந்த்ரயான் 3 பூமிக்கு திரும்பி வருகையில் நல்ல வரவேற்பளிப்போம் என்று கூறுகிறார்.

வங்கத்து தீதீயோ,” போன முறை இந்திரா காந்தியால் அனுப்பப்பட்ட ராகேஷ் ரோஷன் சந்திரனில் இறங்கிய போது என்று …கூறியது மக்களை யோசிக்கவைத்து விட்டது.

தென் துருவத்தில் டோல்கேட் அமைப்போம் என்று நிதின் கட்கரி சொல்லுவதும்,

20230725230928543.jpg

சந்த்ரயான் 3 அங்கு சேர்ந்த்ததற்கு என்ன ப்ரூஃப் கேட்டு கேஜ்ரிவால் கேட்பதும் ரசிக்கத் தக்க மீம்ஸ் தான்.

20230725230954746.jpg

சொர்கத்திலிருந்து விக்ரம் சாராபாயும், கலாம் அய்யாவும் சபாஷ் என்று கை தட்டுவதும்,

2023072523103386.jpg

வீட்டு வாசலில் அமர்ந்தவாறே இளஞ்சிரார்கள் மூவண்ணத்தில் தோய்ந்த நிலவை நோக்கி ரசிப்பதும் பாராட்டத்தக்க மீம்ஸ்.

20230725231106823.jpg

இஸ்ரோவின் மகளிர் சக்தி மிகவும் சக்தி வாய்ந்தது தான்.

2023072523115614.jpg

ப்ரக்யான் ரோவரின் டையர்கள் நிலவில் ஓடுகையில் நமது இந்திய தேசீய சின்னத்தை பதித்தவாரே செல்லும்.

20230725231345480.jpg

நிலவின் மீது இந்தியா என்ற உறுதியான வாசகத்தைச் சொன்னவாரே இஸ்ரோ தலைவர் சோம்னாத் பிரதமரை பேச அழைக்க அவர் பேசுகையில், “முன்பெல்லாம் சந்தா மாமா அதோ…….. தூரத்தில் என்று சொன்ன காலம் போயாச்சி. இனி குழந்தைகள், சந்தாமாமாவா, அதோ (தூரத்தில்) அங்க இருக்கு என்று சொல்லும் காலம் வந்துவிட்டது என்றாரே பார்க்கலாம்.

அடுத்த வாரம் தான் ரக்ஷா பந்தன் (சகோதரி சகோதரனுக்கு ராக்கி கட்டுவது), இங்கு பாரத பூமியை நாம் தாயென்றும் சந்திரனை மாமாவென்றும் அழைக்கிறோம் அல்லவா. ஆக இந்த சந்த்ரயான் 3 மூலம் பூமி தன் சகோதரனுக்கு அட்வான்ஸாகவே ராக்கி கட்ட சென்றுவிட்டார் என்று சித்தரிக்கும் மீம் வரவேற்கத்தக்கது.

20230725231425207.jpg

பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் சந்த்ரயான் 3 தோல்வி போன்றே ஒரு மீம் போட்டு தன்னாசையை வெளிப்படுத்தியும் எல்லை மீறிய கொச்சைப்படுத்தல்களும் மனதைப் புண் படுத்தத்தான் செய்தன.

போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் நம் பணி பணி செய்து கிடப்பதே என்ற பாணியில், இஸ்ரோ சூரியனை ஆராய்ச்சி செய்ய அதித்ய – L1 என்ற விண்கலத்தை விட வரும் சுப யோக சுப தினமான செப்டம்பர் 3 என தேதியும் குறித்து விட்டதை அந்த ப்ராஜக்டின் தலைவர் நிருபரின் கேள்விக்கு விடை தந்தார் இன்று. “சந்த்ரயான் 3 வெற்றியடைந்துவிட்ட சூட்டோடு இந்த அடுத்த அறிவிப்பை கொடுத்துவிட்டீர்களோ?,” என குறுக்காய் கேள்வியைத் தொடர அந்த விஞ்ஞானி, “இந்த திட்டம் சந்த்ரயான் 3 உடன் இணையாகவே திட்டமிடப்பட்டு செயல்படுத்த முனைப்புகளும் நடந்த வண்ணம் தானிருக்கின்றன,” என்று முடித்தார்.

ஒரு க்விஸ்ஸோடு முடிச்சிருவோமா?

கேட்பவர்: சந்த்ரன்ல மொத மொதல்ல கால வெச்சவன் யாரு?

கேட்டவர்: நீல் ஆர்ம்ஷ்ட்ராங்க்.

கேட்பவர்: அது சரி ரெண்டாவதா கால் வெச்சவன் பேர் தெரிமா?

கேட்டவர்: ம்ம்....🤔🤔🤔 தெர்லபா.

கேட்பவர்: அட இன்னாபா...இத் கூட தெர்லண்றியே.

கேட்டவர்: தெர்ல சார். யாரு சார்?

கேட்பவர்: அட. அதே ஆலுதாம்பா..

அதான் நீ சொன்னியே...நீல் ஆர்ம்ஷ்ட்ராங்க்.

அவுருதாம்பா இன்னோர் காலையும் வச்சாரு.

அவரு இன்னா அங்க ஒரே கால வச்சி நொண்டி ஆடவா போனாரு...

அம்பேல் ஜூட்