தொடர்கள்
பொது
தி எலிபெண்ட் விஸ்பிரர்ஸ் - ஸ்வேதா அப்புதாஸ் .

உலகமே ஆச்சிரியத்தில் பார்த்த ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்'

20230723142123188.jpg

என்ற ஆவண படத்தில் நிஜ கதாபாத்திரங்களான பொம்மன் பெல்லி உலக அரங்கில் முக்கிய யானை காட் பாதர் மதர் என்ற அங்கீகாரம் வலம் வர ஜனாதிபதி முதல் பிரதமர் வரை மிக முக்கிய வி ஐ பி கள் இவர்களை நேரில் முதுமலை யானை முகாமுக்கு வந்து பாராட்டி கௌரவ படுத்தி விட்டு சென்ற வண்ணமிருக்க பெரும்பாலான முக்கிய விழாக்களுக்கு இவர்கள் தான் சிறப்பு விருந்தினர்கள் .

20230723142224756.jpg

முதல்வர் ஸ்டாலின் இவ்விருவரையும் நேரில் சென்னைக்கு அழைத்து பாராட்டி ஒரு லட்சம் பண உதவி செய்தது சிறப்பான ஒன்று .

2023072314232145.jpg

குட்டி யானைகளை தன் குழந்தைகள் போல பராமரித்த தாய் பெல்லி தனக்கு ஒரு அரசு வேலை வேண்டும் என்று விகடகவிக்கு பேட்டி கொடுக்க அதை பரிசீலித்த முதல்வர் கடந்த மாதம் அவருக்கு முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் அரசு வேலை கொடுத்து அதற்கான ஆணையை நேரில் பெல்லிக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .

Ù ஆஸ்கார் விருது தம்பதியினருக்கு ஏகப்பட்ட புகழ் மாலைகள் குவிய

ஆவண படத்தில் நிஜமாகவே நடித்து உழைத்த இவர்களுக்கு எந்த பண உதவியும் செய்யவில்லையாம் .

20230723142548198.jpg

இயக்குனர் கார்திக்கி ஜஸ்ட் வந்து பார்த்து இவர்களுடன் மற்றும் அந்த குட்டி யானைகளுடன் போஸ் கொடுத்து படம் எடுத்து சென்றதோடு சரி இவர்களை கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை நம்மிடமும் இவர்களின் நண்பர்களிடம் எடுத்து கூற இவர்கள் ஏமாற்ற பட்டதை உணர்ந்தனர் பலர் .

20230723142709438.jpg

இந்த ஆவண படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கோவன்ஸ் ,

இயக்குனர் கார்த்திக்கி கன்சால்வேஸ் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது ஆஸ்காருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சமூக ஆர்வலர் பிரவீன் ராஜ் என்பவர் பொம்மன் பெல்லியை

சென்னை உயர் நீதி மன்ற வக்கீல் முகமது மன்சூர் யிடம் அழைத்து சென்று இவர்களின் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் எடுத்து கூற பெல்லி பொம்மன் சார்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர போவதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாரமேமே நாம் ஆஸ்கார் புகழ் பெல்லி மற்றும் பொம்மன் தம்பதியை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20230723143052547.jpg

" இந்த ஆவண படம் எடுக்க நாங்க இருவரும் எங்களின் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்துள்ளோம் .இந்த படம் எடுக்க காட்டில் உள்ள மேடு பள்ளம் என்று கால் கடுக்க யானைகளை கூட்டி கொண்டு நடந்து சென்று வந்துள்ளோம் .

இரவு அதிகாலை என்று கடும் குளிரில் கூட நடித்து கொடுத்துள்ளோம் .

இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் எங்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாக கார்த்திகி கூறினாள் .என் பேர பிள்ளைகள் படிக்க அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்று கூறி சென்றார்கள் பின்னர் ஆஸ்கார் வெற்றிக்கு பின் போனில் நாங்களே தொடர்பு கொண்டு பேசியபோது நாங்க கொஞ்சம் பிசியாக இருக்கிறோம் நேரில் வருகிறேன் என்று கூறி உங்க வங்கி கணக்கில் பணம் போடுகிறேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டாள் .வங்கிக்கு போய் பார்த்தால் ஒரு பைசா கூட போடவில்லை .

2023072314320137.jpg

பின்னர் பாராட்டு விழாவுக்கு பம்பாய் சென்ற போது எல்லோரும் பார்ப்பதால் நல்ல விதமாக பேசுவது போல நடித்து விட்டு பின் கப் சிப் என்று இருந்து விட்டனர் .

இங்கு வந்த கார்த்திகி அவசரமாக வந்து அந்த ஆஸ்கார் விருதுடன் போட்டோ எடுத்து விட்டு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாள் .

20230723143823576.jpg

ஆஸ்கார் விருதுடன் ஏழு கோடி பணம் கிடைத்துள்ளதாம் அதில் கொஞ்சம் உதவி செய்திருக்கலாம் அல்லது நடித்து கொடுத்ததிற்கு கொஞ்சம் சம்பளம் போல பணம் கொடுத்திருக்க வேண்டாமா ? மிகவும் காரியமான பொண்ணு அவள் எங்களை ஏமாற்றிவிட்டாள் என்று தான் சொல்லவேண்டும் .

நம் முதல்வர் மற்றும் எம் .பி .ராசா அவர்கள் செய்த உதவியை மறக்க முடியாது .

2023072314390826.jpg

ஜனாதிபதி அம்மா ,பிரதமர் வந்து பாராட்டி சென்றதை வாழ்நாளெல்லாம் மறக்க முடியாது .

அதே வேளையில் எங்களுக்கு இயக்குனர் கார்திக்கி உதவி செய்திருக்க வேண்டும் .

ஏமாற்றி விட்டார் எங்களால் தான் அந்த ஆஸ்கார் கிடைத்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .

எங்கள் கிராமமான முதுமலைக்கு சென்னையில் இருந்து வக்கீல்கள் வருவது வழக்கம் .அவர்களில் சிலர் நண்பர்களாகிவிட்டனர் அப்படி ஒரு பெஸ்ட் நண்பர் தான் சமூக ஆர்வலர் பிரவின் ராஜ் .

20230723144106474.jpg

ஆஸ்கார் கிடைத்தவுடன் அவர்கள் எங்களை வந்து பார்த்தார்கள் பின்னர் சென்னை சென்றபோது கார்த்திகி எங்களை ஏமாற்றிய கதையை கேட்டு அவர் தான் வக்கீலிடம் கூட்டி சென்று எல்லாவற்றையும் கேட்டு நியாயம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் .ஆஸ்கார் விருது குழுவுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் .

பார்க்கலாம் பதிலுக்கு காத்திருக்கிறோம் என்று கூறினார்கள் .

இந்த வழக்கை தொடர பொம்மன் பெல்லி தம்பதியினருக்கு தூண்டுகோலாக செயல் பட்டு வரும் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரவின் ராஜை பலமுறை தொடர்பு கொண்டோம் அவரின் மொபைல் பிசி என்று தான் வருகிறது .

வாட்சப் மெசேஜ் கொடுத்து பேட்டிக்கு ஓகே என்று மட்டும் பதில் வந்தது ஆனால் இது வரை அவர் பேசவில்லை

20230723144227128.jpg.

உலக புகழ் " தி எலிபெண்ட் விஸ்பிரர்ஸ் " விரைவில் உயர்நீதி மன்றத்தில் அதிரலாம் .