
வன விலங்கு கடத்தல்காரர்கள் அறிய வகை விலங்கினங்களை கடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்ததிங்களன்று பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கிய சதாம் ஹுசைன் என்பவரின் கை பையை சோதனைசெய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த பயணி ஒரு கங்காரு குட்டியினை பாங்காக்கில்இருந்து கடத்தி வந்திருந்தார். ஆனால் அந்த விலங்கு குட்டி பெங்களூரு வந்த பொழுது இறந்திருந்தது.
வன விலங்குகள் கடத்தல் குறித்து தென் மண்டல வன விலங்கு குற்ற தடுப்பு துணை இயக்குனர் ம கிருபாசங்கர் கூறுகையில், இதுவரை யாரும் கங்காரு குட்டியை கடத்தி வந்ததில்லை. இதுவே முதன் முறை. இந்த கடத்தலில் ஈடுபட்டவர் சென்னையைசேர்ந்தவர். அவரிடமிருந்து பச்சை இகுவானாக்கள், ஆல்டப்ரா ஆமை, கரு நிற இலை ஆமை, 75 ஆசிய இலை ஆமை மற்றும்கங்காரு குட்டி ஆகியவை பிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இறந்த கங்காரு குட்டி தவிர மற்ற அனைத்தும்பாங்காக்கிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வன விலங்கு கடத்தல் சம்பவம் சுங்கம் மற்றும் வனவிலங்கு கடத்தல் குற்ற தடுப்பு அதிகாரிகளிடையே ஆச்சர்யத்தைஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இது வரை இம்மாதிரியான கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் சென்னை விமான நிலையத்தில்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இப்போது புதிதாக பெங்களூரு பக்கம் திரும்பி உள்ள கடத்தல் காரர்களின் கவனம், அதிகாரிகளைகவலை அடையச் செய்துள்ளது.
தமிழக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் கடத்தல்காரர்களின் இந்த புதிய நடவடிக்கை பெங்களூரு விமானநிலையத்தில் சோதனைகளை தீவிரப் படுத்துவதின் அவசியத்தை உணர்த்துகின்றது என்றார். மத்திய வன விலங்கு அமைச்சகஅதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஒரு சம்பவத்தை வைத்து கடத்தல்காரர்கள் தங்கள் நடவடிக்கைகளை பெங்களூருவிற்குமாற்றி விட்டார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடர்ந்தால் மட்டுமே அப்படி ஒருமுடிவிற்கு வர முடியும் என்கிறார் அவர்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு வன விலங்கு கடத்தல் குறித்து கூடுதல் பயிற்சி அளித்துள்ளதால்அவர்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல் பட்டு இம்மாதிரியான கடத்தல் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். இதன் காரணமாகவே கடத்தல்காரர்கள் மற்ற ஊர்களுக்கு தங்கள் கடத்தல் வேலையே மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது, என்கிறார் ஒரு தமிழக வன அதிகாரி.
பெங்களுருவில் நடந்த கடத்தல் போல, சென்னையிலும் கடந்த ஞாயிறு அன்று ஒரு சம்பவம் நடைபெற்றது. அதில்உயிரோடிருந்த பர்மிய மலை பாம்பு, பந்து போல் சுருட்டிக்கொள்ளும் ஆப்பிரிக்க மலை பாம்பு, மற்றும் பன்னிரண்டிற்கும்மேற்பட்ட பச்சை இகுவானாக்கள்,ஆகியவை பிடிபட்டு. பிடிபட்ட அணைத்து விலங்குகளும் அதே விமானத்தில் பாங்காக்கிற்குதிருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
பர்மிய மலைப் பாம்பு அந்த இனத்தில் மிகவும் பெரிதான ஒரு பாம்பாகும். இந்த வகை பாம்புகள் அனைத்து தென் கிழக்குஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. அதே போல பந்து போல் சுருட்டிக்கொள்ளும் ஆப்பிரிக்க மலை பாம்புகள் மேற்கு மற்றும்மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. இந்த இருவகை பாம்புகளும் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் அதிகஅளவில் வளர்ப்பதற்கு ஆவல் காட்டுகின்றனர். இதனாலே கடத்தல் காரர்கள் இந்த பாம்புகளை அதிக அளவில்கடத்திவருகிறார்கள் என்கிறார் கிருபாசங்கர்.
வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகையில் இம்மாதிரி வன விலங்கு கடத்தலில் ஈடுபடுவோர்களுக்கு கொடுக்கப்படும்தண்டனையானது மிகவும் குறைவு. இதுவே அவர்களை மீண்டும் மீண்டும் இம்மாதிரியான குற்ற செயல்களில் ஈடுபடதூண்டுகிறது, என்கின்றனர். சமீபத்தில் மத்திய அரசு வன விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972இல் பல திருத்தங்களைகொண்டுவந்துள்ளது. அந்த திருத்திய சட்டங்களில் வெளிநாட்டு விலங்குகள், பறவை இனங்கள், பாலூட்டிகள் ஆகியவும்சேர்க்கப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும்என்பது உறுதி என்கின்றனர் அவர்கள்.

Leave a comment
Upload