தொடர்கள்
வலையங்கம்
வேண்டாம் வெட்டி பேச்சு


தமிழகத்தில் கஞ்சா பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படை பணப்பட்டுவாடா செய்வது தடுப்பதற்காக சோதனை செய்த போது அவர்களுக்கு பணத்திற்கு பதில் கிடைத்தது கஞ்சா தான்.
சென்னையில் கஞ்சா வியாபாரி பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளை சில இளைஞர்கள் அடிக்கிறார்கள் இந்த வீடியோ வைரல் ஆனது. எப்படி எல்லாம் காவல்துறை அதிகாரிகள் இளைஞர்களால் தாக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் குடும்பம் நிச்சயம் பார்த்து இருக்கும். காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை என்ற வெறுப்பு தான் இந்த அரசு மீது அந்த குடும்பப் பெண்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். இதனைத் தொடர்ந்து கும்பகோணம் நடுரோட்டில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுனரை இழுத்துப் போட்டு அடிக்கிறார்கள். தற்சமயம் இந்த வீடியோவும் வைரலாகி கொண்டு இருக்கிறது. இது தவிர கரூரில் மனைவி மாமனார் மீது தாக்குதல்காரணம் கஞ்சா போதை தான்.தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பழக்கம் அதிகமாகிவிட்டன. தமிழக போலீசாரம் கஞ்சா ஒழிப்புக்காக 2.0, 2.1, 2.2 என வரிசையாக பல ஆபரேஷன்களை நடத்தி முடித்து விட்டது ஆனாலும் கஞ்சா இன்னும் ஓழிந்தபாடாக இல்லை அதற்கு பதில் இன்னும் அதிகரிப்பதாக இருப்பதாகத்தான் கடந்த மூன்று நாட்கள் நடந்த தொடர் சம்பவங்கள் சாட்சி .
: இது பற்றி எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்த பிறகும் முதல்வர் மௌனம் சாதிக்கிறார். போதை இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்குவேன் முதல்வர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார் ஆனால் அது பேச்சு அளவு தான் இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள். தயவு செய்து பேச வேண்டாம். காவல்துறைக்கு முழு அதிகாரத்தையும் எந்த அரசியல் தலையீடு இல்லாமல் அவர்களுக்கு தாருங்கள் அவர்கள் அந்த வேலையை திறம்பட நிச்சயம் செய்வார்கள். வெட்டிப் பேச்சு வேண்டாம்