தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

ராஷ்மிகா

20240410155149825.jpeg

புஷ்பா படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் என்னுடைய ஸ்ரீவள்ளி கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார் ராஷ்மிகா மந்தனா.

விஜய்

20240410155223334.jpeg

நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் அவரது கடைசி படத்தை இயக்குனர் ஆ. வினோத்தை இயக்க சொல்லி இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தா இவர்களில் யார் என்று முடிவு செய்யுங்கள் என்று விஜய்க்கு பரிந்துரை செய்திருக்கிறார் இயக்குனர்.

மாளவிகா மோகன்

20240410155246542.jpeg

நடிகை மாளவிகா மோகன் கூலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறார் தயாரிப்பாளர்கள் யாராவது இருக்கிறீர்களா ?

மூன்று கெட்டப்

20240410160106716.jpg

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லீ படத்தில் அவருக்கு மூன்று வேடம். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சிம்ரன் மீனாவும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்கள்.

மடோனோ செபஸ்டியன்

20240410155331624.jpeg

லியோ படத்தின் பிரமோஷனில் என்னை ஓரம் கட்டினார்கள். இதில் ஏமாற்றம் எனக்கு இல்லை. ஏனென்றால் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து எனக்குத் தெரியும். உங்கள் படம் போஸ்டரில் கூட இருக்காது என்றார்கள் அது பற்றியும் நான் கவலைப்படவில்லை. ஆனால் படத்தில் அந்த கேரக்டர் தான் பெரிதாக பேசப்பட்டது. இதை இப்போது அவர்களே சொல்கிறார்கள். என்கிறார் மடோனா செபஸ்டியன்.

வேண்டாம் நயன்தாரா

20240410155354940.jpeg

விஜயின் கடைசி படத்தில் நயன்தாரா நடிக்க தூது விட்டார். ஆனால் வேண்டாம் என்று மறுத்து விட்டார் விஜய்.

கல்கி 2898 ஏடி

கமலஹாசன் தற்சமயம் கல்கி 28 98 ஏ டி என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் மொத்தம் 15 நிமிடம் மட்டுமே வரும் கேரக்டரில் நடிக்கிறார். இதற்கு அவர் வாங்கும் சம்பளம் 20 கோடி.

லாக்டவுன்

20240410155635821.jpeg

லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள லாக்டவுன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஐஸ்வர்யா மேனன்

20240410155756686.jpeg

தற்சமயம் இணையதளத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் போட்டோஸ் ஹார்ட்டின்களை குவித்து வருகிறது. என்னிடம் பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பரப்புவதாக பலர் சொல்கிறார்கள். இது என் மனதை வலிக்க செய்கிறது. ஆனா இதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்று நான் கடந்து போகிறேன். எனக்கான வாய்ப்புகள் வரவேண்டும் என்றால் வந்தே தீரும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றார் ஐஸ்வர்யா மேனன்.

பூஜா ஹெக்டே

20240410155904251.jpeg

அஜய் ஞானமுத்து இயக்க இருக்கும் ஒரு வெப் தொடரில் நடிக்க இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.