தொடர்கள்
அழகு
அலியாபட் புடவை - மாலா ஶ்ரீ

20240411062338521.jpeg

அமெரிக்காவில் பேஷன் ஷோவுக்காக

163 பேர் உழைப்பில் உருவான அலியாபட் புடவை!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘மெட்காலா’ எனும் பேஷன் ஷோ நிகழ்ச்சியில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலியாபட் அணிந்து வந்த புடவை அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பாராட்டை பெற்றுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பகிர்ந்திருக்கும் இந்தி நடிகை அலியாபட் கூறுகையில், ‘‘இயற்கையே எல்லாவற்றிலும் பெரிது. இதை வைத்துதான் எனது புடவையை தீம் உருவாக்கினோம். எம்ப்ராய்டரி மற்றும் பீட்ஸ், விலைமதிப்பற்ற ஸ்டோன்ஸ்கள் வைத்து, கடந்த 1920-ம் ஆண்டு ஸ்டைலில் புடவை, மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் வடிவமைக்கப்பட்டது.

இப்புடவையின் நிறம் பூமி, வானம், கடல் போன்ற இயற்கையைப் பிரதிபலிக்கிறது. இப்புடவையை உருவாக்க மாஸ்டர் கைவினை கலைஞர்கள், எம்ப்ராய்டரி கலைஞர்கள், என மொத்தம் 163 பேர் சுமார் 1,965 மணி நேரம் உழைத்துள்ளனர். அப்படி உருவான புடவை, பலரது பாராட்டுகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி!’’ என்று அலியாபட் குறிப்பிட்டுள்ளார்.