தொடர்கள்
அரசியல்
பத்ம விருதுகள் - மாலா ஶ்ரீ

20240411062742663.jpeg

பத்ம விருதை வாங்கிய கையோடு பிரேமலதா வானை நோக்கி கேப்டனுக்கு சமர்ப்பித்தது பார்வையாளர்களை நெகிழச் செய்தது.

20240411062715776.jpeg

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பத்ம’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கலைத்துறையில் சிறந்த சேவை செய்ததற்காக நடிகர் விஜயகாந்த்துக்கு அறிவிக்கப்பட்ட ‘பத்மபூஷண்’ விருதை, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மவிபூஷண் விருதுகளை பெற்று கொண்டனர்.

மேலும், தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குர் டாக்டர் நாச்சியார், கிராமிய நாட்டுப்புற கலைஞர் பத்திரப்பன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, அந்தமான்-நிக்கோபர் தீவுகளை சேர்ந்த பெண் விவசாயி கே.செல்லம்மாள் ஆகியோருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதுகள் வழங்கப்பட்டன. மறைந்த உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான பாத்திமாபீவிக்கு ‘பத்மபூஷண்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.