தொடர்கள்
தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா…!-ஆர் .ராஜேஷ் கன்னா

20240417083555166.jpeg

நன்றி: தினமணி

நான்கு கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து 379 தொகுதிகளில் மந்தமாக வாக்குபதிவு 66.95 % பதிவாகியுள்ளது. இது வரை 45 கோடி வாக்காளர்கள் வாக்களித்து விட்டனர்.

அடுத்த 3 கட்டத்தேர்தலில் அதிகளவு வாக்காளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.

வட இந்தியாவை பொறுத்தவரை 2014 மற்றும் 2019 ஆண்டு போல் எந்தவித அலையும் வீசவில்லை .தேர்தல் வாக்குபதிவு கூட எந்தவித சலனமில்லாமல் நடைப்பெற்று வருகிறது என்று பத்திரிக்கையாளர்கள் பேச்சாக உள்ளது.

20240417083721462.jpeg

பிஜேபி கட்சி 400 எம்பிக்களுக்கு மேல் ஜெயிக்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று இப்போதே உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் இருக்கும் பிரபல ஆங்கில நாளேடுக்கு பேட்டி அளித்துவிட்டார்.

20240417083745928.jpeg

மம்தா பானர்ஜி வரும் நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட் வந்ததும் இந்தியா கூட்டணி அமைக்கும் அரசுக்கு தனது கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று சொல்லிவிட்டார்.

20240417083813294.jpeg

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டுமக்கள் விடைக்கொடுக்க தயாராகிவிட்டனர். வரும் ஜுன் 4 தேதி இந்தியா கூட்டணி புதிய அரசாங்கத்தை அமைக்கும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே பேசினார்.

20240417083952160.jpg

பிஜேபி கொள்கை அடிப்படையில் 70 வயது நிரம்பிய தலைவர்கள் கட்சி பணி மற்றும் பதவியில் இருக்க கூடாது என விதி உள்ளது. வரும் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றாலும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வருடம் மட்டுமே பிரதமராக இருக்க முடியும் என்று ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி தான் பிரதமர் என்று அமித்ஷா அழுத்தமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

20240417084015129.jpeg

உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் ஒரு வாக்கு, நாடு முழுவதும் நடக்கும் பயங்கரமான பாகுபாடு மற்றும் அநீதியை அகற்றும். உங்கள் ஒரு வாக்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணிகளை தொடங்க வைக்கும். உங்கள் ஒரு வாக்கு ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ரூ.8,500 டெபாசிட் செய்ய வைக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொதுகூட்டத்தில் பேசினார்.

20240417084045711.jpeg

வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4 தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி துண்டு துண்டாக உடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திரமோடி என பிஜேபி கட்சி அறிவித்துவிட்டது.

ஒரு பேச்சுக்கு சொல்கிறேன் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மம்தாபானர்ஜி , ஸ்டாலின்,லாலு பிரசாத் பிரதமர் ஆவார்களா?பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக அமித்ஷா பேசினார்.

20240417084354169.jpg

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று இதுவரை இந்த கூட்டணி தெரிவிக்கவில்லை என்று வடமாநில மக்கள் பேச்சாக உள்ளது.

எது எப்படியோ, நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட் ஜுன் 4 தேதி….

கத்திரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.

இன்னும் 17 தினங்கள் காத்திருக்க வேண்டும்.

வெயிட் அண்ட் சீ அடுத்த பிரதமர் யார் என்று?!