தொடர்கள்
வலையங்கம்
காடுகளை காப்பாற்றுவோம்

2024041709172973.jpg

தற்சமயம் விலங்கினங்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் ஊடுருவ தொடங்கி இருக்கிறது. ஒரு கரடி வீட்டு வாசலில் படுத்து கிடக்கிறது. மயிலாடுதுறையில் ஒரு சிறுத்தை போன மாதம் ஒரு வாரம் தெருக்களில் நடமாடியது. யானைகள் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகள் மற்றும் வயல்வெளிகளில் நடமாடுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட யானை தாக்கி ஒரு விவசாயி இறந்ததை பிரச்சனையாக்கி சாலை மறியல் எல்லாம் செய்தார்கள். இதை போல் தண்டவாளங்களை கடந்து போகும் யானைகள் ரயில்கள் மோதி இறப்பும் அதிகரிக்கிறது. இவை எல்லாமே விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

அதே சமயம் நாம் ஒரு உண்மையை நமது சௌகரியத்துக்காக மறந்து விடுகிறோம். விலங்குகள் இடத்தை நாம் ஆக்கிரமித்து காடுகளை அழித்து நாம் குடியேறி இருக்கிறோம். அவர்களிடத்தை நாம் ஆக்கிரமித்ததைப் பற்றி கவலைப்படாமல் விலங்குகள் மீது குற்றம் சொல்வது என்ன மாதிரி கருத்து என்று தெரியவில்லை.

மனிதர்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் காடுகளும் விலங்குகளும் இயற்கையான வாழ்க்கைக்கு முக்கியம். காடுகள் இருந்தால் தான் மழை பெய்யும். மரங்களை வெட்டக்கூடாது என்பதில் கேரள அரசு காட்டும் அக்கறை மற்ற மாநிலங்கள் காட்டுவதாக தெரியவில்லை. அதனால் தான் கேரளாவில் பருவ மழை என்றுமே பொய்ப்பதில்லை. குறிப்பிட்ட பருவ காலங்களில் அங்கு பெய்யென பெய்யும் மழை என்ற அளவில் தான் இன்றும் இருக்கிறது. விலங்குகள் நமக்கு இயற்கை ரசிக்க கற்றுத் தருகிறது. எனவே விலங்குகளை சுதந்திரமாக அவர்களிடத்தில் சுற்றிவர தடை செய்யாதீர்கள் அவர்கள் இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள். காடுகளையும் காப்பாற்றுங்கள். அதுதான் நமக்கும் நல்லது இந்த நாட்டிற்கும் நல்லது.