தொடர்கள்
பொது
ஊட்டி உயருமா ?? முதல் மலை மாநகராட்சியாக !! -ஸ்வேதா அப்புதாஸ் .

ஊட்டி நகர மன்றத்தின் அவசர கூட்டம் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது .

2024051222345471.jpg

இந்த கூட்டத்தில் நகர மன்ற தலைவி வாணீஸ்வரி தலைமையில் ஒட்டுமொத்த 36 கவுன்சிலர்கள் இணைந்து ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கருத்து விவாதிக்க பட்டு அந்த முக்கிய தீர்மானத்தை அரசுக்கு அனுப்பிவைத்துள்னர் .

20240512223520852.jpg

ஊட்டி நகரை சுற்றியுள்ள கேத்தி பேரூராட்சி , தொட்டபெட்டா , நஞ்சநாடு , இத்தலார் மற்றும் உல்லத்தி ஊராட்சிகளை இணைத்து ஊட்டி நகராட்சி விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக விரைவில் தரம் உயர அரசு முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது .

இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலம் ஊட்டி .

20-7.1987 அன்று சிறப்பு நிலை நகராட்சியாக உயர்ந்து செயல் பட்டு வருகிறது .

முன்னாள் ஆளுநர் பி .சி .அலெக்ஸாண்டர் இந்த நகராட்சி நகர மன்றத்திற்கு வந்து சிறப்பித்துள்ளார் .

20.67 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட ஊட்டி நகரின் மக்கள் தொகை உயர்ந்து கொண்டிருக்கிறது .

20240512223646774.jpg

சென்னைக்கு அடுத்து ஆளுநர் மாளிகை , பொட்டானிக்கல் கார்டன் , ரோஜா பூங்கா , உயரமான சிகரம் தொட்டபெட்டா , படகு இல்லம் மற்றும் கர்நாடக கார்டன் அமைந்துள்ள நகரம் .

20240512224228696.jpg

நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் அதிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நகரம் .

செயின்ட் .ஸ்டீபன் சர்ச் , செயின்ட் .மேரிஸ் ஆலயம் , தூய இருதய ஆண்டவர் ஆலயம் .

செயின்ட் .தாமஸ் ஆலயம் .

உலகத்தின் முக்கிய ஸ்ரீ .மாரியம்மன் கோயில் மற்றும் ஹெல்கில் முருகன் கோயில் உலக பிரசித்தி பெற்றது.

சர்வேதச பள்ளிகள் இந்த நகரில் உள்ளது .

20240512224548563.jpg

தற்போதைய ஆணையாளர் ஏகராஜ் நகர மன்றத்தில் ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர தகுதி உள்ளது என்று கூறியுள்ளார் .

20240512224620326.jpg

" தற்போது ஊட்டி நகர் 30.67 சதுர கிமீ பரப்பளவு கொண்டது .2024 ம் ஆண்டு படி சராசரியாக 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர் .ஆண்டு வருமானம் ரூ .43.94 கோடி என்று வியக்கவைத்துள்ளார் .

அருகில் உள்ள பேரூராட்சிகள் ஊராட்சிகளை இணைக்கும்போது 212.சதுர கி மீ மாநகராட்சியாக மாறும் 1லட்சத்து 93 ஆயிரத்து 710 ஆக மக்கள் தொகை உயர்ந்து ஆண்டு வருமானம் . 52.14 கோடியாக உயரும் என்ற தீர்க்கதரிசனத்தை கூறி அனைத்து வசதிகளுடன் புதிய அரசு திட்டங்கள் வரும் என்று கூறியுள்ளார் .

நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் நம்மிடம் கூறும்போது ,

20240512224655540.jpg

" தற்போது ஊட்டி நகர மன்றத்தின் தீர்மானம் ரொம்ப லேட்டாக இருந்தாலும் விரைவில் ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் தமிழக அரசு .

நான் கடந்த வருடம் செப்டம்பர் மாதமே இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்கிறார் .

ஊட்டி முனிசிபாலிட்டி அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் பழைய நகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது .

ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முன்பே உருவானது ஊட்டி நகராட்சி! 1866 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி .

1885 மெட்ராஸ் பத்தாம் சட்ட படி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது .

முதல் நகராட்சி கோயம்பத்தூர் கலெக்டர் தலைமையில் துவங்கியது .

முதல் நகர மன்ற தேர்தல் 1877 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது .

உள்ளூர் மக்கள் தொகையை விட தற்போது வருடத்திற்கு ஐம்பது லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் .

இந்த மலைகளின் அரசி எல்லா சீதோஷண நிலையை தன்னகத்தே கொண்டது .

மேலும் வேணுகோபால் கூறும் போது ஊட்டி இன்னும் பழைய நகர அமைப்பில் தான் உள்ளது சாலைகள் தகவல் தொடர்பு , வடிகால் வசதிகள் எதுவுமே புதுப்பிக்கவும் படவில்லை முன்னேற்றமும் இல்லை . சுற்றுலா, சுகாதாரம், ,திரை பட ஷூட்டிங் , பொழுதுபோக்கு , விளையாட்டு போன்றவை வளர்ச்சியடைய தற்போதுள்ள நகராட்சி அமைப்பு கைகொடுக்காது என்பது தான் உண்மை .

ஊட்டி மாநகராட்சி தரம் உயர்ந்தால் தான் சர்வதேச சுற்றுலா தல அந்தஸ்த்தை எட்டமுடியும்" என்று கூறினார் .

நகர மன்ற தலைவி வாணீஸ்வரி கூறும் போது ,

2024051222474610.jpg

" இந்த திட்டம் ஒரு நீண்ட கால கனவு .நம் நகராட்சி ஒரு மாநகராட்சியாக உயர்ந்தால் பல முன்னேற்றங்கள் வளர்ச்சியை எட்டும் . தற்போது நம் முதல்வரின் தலைமையில் ஊட்டி மாநகராட்சியாக உயர்ந்தால் மிக பெரிய வளர்ச்சியை அடையும் என்பது பெருமையான ஒன்று . புதிய வளர்ச்சி திட்டங்கள் வர வாய்ப்புகள் உண்டு .

ஏற்கனவே இதற்கான கோரிக்கை பல வருடங்களுக்கு முன் அரசிடம் வைத்து எந்த நடவடிக்கையும் இல்லை .தற்போது என் தலைமையில் 36 உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து அவசர தீர்மானமாக நகர மன்றத்தில் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைத்துள்ளோம் .

நம் முதல்வர் எங்க தீர்மானத்தை ஆராய்ந்து எதிர் வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஊட்டி மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நாளை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார் நம்பிக்கையுடன் .

முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நம்மிடம் பேசினார் ,

20240512230025426.jpg

"ஊட்டி மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நகர மன்றத்தின் தீர்மானம் ஒரு சிறப்பான விஷயம் அதே போல ஊட்டியின் மக்கள் தொகை போதுமானதா . கேத்தி பேரூராட்சி இணைத்தால் எல்லநள்ளி பகுதியில் உள்ள நீடில் இண்டஸ்ட்ரீஸ் , சர்வதேச பள்ளிகள் , பொறியியல் கல்லூரி கைகொடுக்கும் .

நஞ்சநாடு தொட்டபெட்டா ஊராட்சிகள் இணைக்கும் பட்சத்தில் இங்கு உள்ள சர்வதேச பள்ளி பகுதி ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் .

அதே சமயம் இந்த பகுதியில் உள்ள கிராம வீடுகளுக்கு வரி நிர்ணயிக்க படும் .ஊட்டி வாசிகளின் வீட்டு வரி முதல் அனைத்தும் உயரும் .அதே சமயம் ஊட்டி மிக பெரிய வளர்ச்சியை அடையும் என்பதை மறுக்க முடியாது " என்று கூறினார் .

20240512230244114.jpg

ஊட்டி மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் நகர் சிங்கப்பூர் போல மாறுமா அல்லது இதே அழகில் கோடப்மந்து கால்வாய் , சாக்கடை நீர் ஏரி .எந்த வசதியும் இல்லாத பஸ் நிலையம் .

மிக மோசமான சாலைகள் நடைபாதைகள் , மோசமான டாய்லெட்டுகள் , தரமற்ற ஹோட்டல்கள் மற்றும் பாழடைந்த நகராக தான் தொடருமா? என்று கேட்கிறார்கள் ஊட்டி வாசிகள் .