தொடர்கள்
கதை
’நமக்கானது நம்மை விட்டுப் போகாது’ !! - மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240514060336537.jpg

கோவிலிலிருந்து தனது டூவீலரை அடுத்த தெருவுக்கு விரட்டினான் குமார். அங்கதான் அவ மனைவி பிரியாவோட ஃபிரண்டு புவனா வீடு இருக்குது. புவனா அவளோட காலேஜ்லே ஒன்னா படிச்சவ. இப்பதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகி, இங்க சென்னையில வந்து செட்டிலாகி இருக்கா.

பிரியா புவனா வீட்டு வாசல்ல இருந்த காலிங் பெல்ல அடிச்சா.கதவ திறக்கறதுக்காக காத்திருந்த போது, கோவில்ல தொலைந்து போன அவளது புது ஜோடி செருப்பு தரையில் அவளைப் பார்த்து சிரிச்சது. அதிர்ச்சி. ஆச்சரியம்.

’வா, வா,’ன்னு வெளியே வந்து அவங்கள வரவேற்றாள் புவனா. அவளோடு பிரியாவுக்கு பேசவே தோணல.முழுக்க. வெளியில பாத்த தன் ’புதுசெருப்ப எப்படி இங்க வந்தது, அதை எப்படி எடுக்கறது... இரண்டு ஜோடியும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாங்க.

கொடுத்த காபியை குடித்து விட்டு ’தேங்க்ஸ்’ சொல்லிட்டு வீட்டுக்கு வெளியே வந்த பிரியா, அந்த புது ஜோடி செருப்ப உலக அதிசயத்துக்கு ஈடா ரொம்பவும் பாராட்டினா. புவனாவும் எடுத்து அத போட்டுப் பாரு’என்றாள்.போட்டு பார்த்த பிரியா ’என் காலுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு இல்ல.

புவனா,’உன் கல்யாணத்துக்கு நான் இதுவரைக்கும் கிஃப்டுன்னு எதையும் கொடுக்கல. காதணிக்கு பதிலா காலணி" சிரித்தாள். "எடுத்துக்கோ"

"ஷுயூர் ? ரொம்ப தேங்க்ஸ் டா" மறுப்பு எதுவும் சொல்லாமல், அதை தன் கால்களில் அணிந்து கொண்டு புறப்பட்டாள். யப்பா தொலைஞ்சு போனது கிடைச்சுருச்சு.

குட்டி ஃப்ளாஷ்பேக்.

அரைமணி நேரத்துக்கு முன்னால,கோவிலின் உள்ளே இருந்து அவசர அவசரமாக வெளியே வந்த வந்த பிரியாவுக்கு அங்கு அவளுடைய புது செருப்பை இல்லாததுஅதிர்ச்சியைத் தந்தது. வெளியில் விடும் போதே தயங்கிக் கொண்டேத்தான் விட்டாள். ‘995 ரூபாய்’ ஸ்டிக்கரை கூட இன்னும் எடுக்கல. உள்ளே கோவிலை சுற்றும் போது கூட அவளது நினைவெல்லாம் புதுச்செருப்பின் மேல்தான்.

புதுச் செருப்பு காணாம போனா என்ன ?? பக்கத்துல அனாதையா இருந்த ஒரு ஜோடி செருப்ப பார்த்தாங்க. அடுத்த நிமிடம் அது பிரியாவின் கால்ல இருந்தது. பழசா இருந்தாலும் தன் காலுக்கு பொருத்தமாக இருப்பதாகவே தன் கணவனிடம் சொல்லி சமாதானப்படுத்திக் கொண்டாள்.பிறகுதான் புவனாவின் வீட்டுக்கு போனாங்க.

இன்னொரு ஃபிளாஷ்பேக்.

புவனா அதே கோவில விட்டு வரும் போது அவளோட செருப்பைக் காணோம். கொஞ்சம் புதுசா இருக்கிற செருப்பை போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டா. வெயில். வேற வழி ?

பிரச்சினை என்னன்னா ரெண்டு பேருமே பாவம் செருப்பு திருடறவங்க இல்லை. செருப்ப விட்ட இடம் மறந்து போய் மாத்தி போட்டுக்கிட்டு வந்தவங்க தான் பாவம்.

அவசரத்துல கோவில்ல யாரோட செருப்பையோ போட்டுக் கொண்டு வந்த குற்ற உணர்ச்சி இப்போது புவனாவிடமும் இல்ல. பிரியாவிடமும் இல்லை.

வாசலில் இருந்த அவளுடைய செருப்பு அவளப் பார்த்து கண் சிமிட்டியது.

’நமக்கானது நம்மை விட்டுப் போகாது’