அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டபோது ஷாக் அடிப்பது மின்சாரமா மின் கட்டணமா? என்று கேட்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ தற்சமயம் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது
காரணம் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட மின் கட்டண உயர்வு தான். அன்று ஸ்டாலின் கேட்ட அதே கேள்வி இப்போது அவருக்கும் கரெக்டாக பொருந்துகிறது.
மின் கட்டண உயர்வு என்பது ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுஎன்பதை யாரும் மறுக்க முடியாது. நடுத்தர மக்கள் ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் இந்த நிலையில் மின் கட்டண உயர்வு என்பது உண்மையில் அவர்களுக்கு ஷாக் தான்.
ஏற்கனவே மின் கட்டணம் 2023 மின் கட்டணம் உயர்ந்தது. இப்போது மின் கட்டணம் மீண்டும் உயர்வு ..தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இப்போது அது பற்றிய பேச்சே கிடையாது.
தோழமைக் கட்சிகளே இந்த மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று பெருமை பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். முதலில் அவர் அந்த கனவுலகத்தில் இருந்து வெளியே வந்து உண்மையை தெரிந்து கொள்ளட்டும்
Leave a comment
Upload