தொடர்கள்
தொடர்கள்
மீண்டும் கைலாயம் !! கோல்டன் கைலாஷ் - மினி தொடர். 2

2024911213350457.jpeg

பேராசிரி மயக்கம் போட்டு விழுந்ததிலிருந்து கைலாஷ் நோக்கிய பயணம் தடைபடுமோ என்று கொஞ்சம் கலக்கமாகத் தான் இருந்தது.

அடுத்த நாள் தாஷி திரெக் யார்பா போகலாம். இங்கிருந்து 20 கி.மீ தான் என்றார்.

அன்று ஏதோ திருவிழா. அத்தனை லாசா கார்களும் அங்கே தான் அணிவகுத்து நின்றிருந்தன.

காரில் போகாமல் நடக்கலாம். ஆனால் பேராசிரி இருந்த நிலைக்கு நிச்சயம் நடக்க முடியாது.

தாஷியிடம் சொன்னேன். அந்த போலீஸ் வண்டியில் லிஃப்ட் கேளு அவரை மட்டும் மலைக்கு மேல் கோவிலுக்கு அழைத்துச் சென்று விடலாம் என்றேன். என்ன பைத்தியமா போலீஸ் கிட்டலே லிஃப்டா என்றான் கொஞ்சம் கலவரத்துடன்.

2024911213448701.jpeg

(இங்கிருந்து பின்னே தெரியும் மலை உச்சிக்கு ஏறினால் சீனக் கோவில்களைப் பார்க்கலாம். ஆனால் ஆக்சிஜன் குறைவாக இருந்த அந்த மலையில் பத்தடி நடந்தாலே மூச்சிரைத்தது)

நான் நேரடியாக நாலைந்து போலீஸ் வண்டிகளையே மறித்து லிஃப்ட் கேட்டுப் பார்த்தேன் அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களே தவிர எரிந்து விழவில்லை அல்லது கடுமையாகவும் பேசவில்லை.

2024911214055192.jpeg

திரெக் யார்பாவில் பல குகைகள் இருக்கின்றன. அக்காலத்து அரசர் தம் மனைவியர் இருவருடன் இங்கு வந்து தங்கியிருக்கிறாராம். மேலே சீனக் கோவில்கள் இருக்கிறது. பிரசித்தி போல. ஏராள மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தே வந்திருந்தார்கள்.

அடுத்த நாள் 800 கி.மீ கடந்து சாகா என்ற ஊருக்கே போய் விடலாம் என்று யோசித்தோம். திபத்தில் சீன அரசு ரயில்வே லைன் அமைத்து வருகிறது. தற்போது ஷிகாட்சே என்ற இடம் வரை இரயில் போக்குவரத்து இருக்கிறது. அது 300 கி.மீ. அங்கிருந்து இன்னொரு 500 கி.மீ சாகா என்ற ஊர்.

பேராசிரியை ஷிகாட்சே வரை இரயிலில் அழைத்துச் சென்று அங்கிருந்து சாகா சென்று விடலாம் என்று திட்டம்.

முதல் நாள் தவிர பேராசிரியருக்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் நடந்து எழுந்து நடமாடும் வரை டென்ஷன் தானே.

ஆக ஷிகாட்சே வரை இரயிலில் சென்று அங்கிருந்து தயாராக முந்தின நாள் இரவே அனுப்பிய டிரைவர் காத்திருந்தார்.

அங்கிருந்து 500 கி.மீ கடந்து சென்று சேர்ந்த ஊர் சாகா.

அடுத்த வாரம் வரை பொறுங்கள். மானசரோவரும் தார்ச்சன் என்ற ஊரையும் பார்த்து விடலாம்.

மானசரோவரில் முனிவர்கள் அதிகாலை நேரத்தில் வானிலிருந்து நட்சத்திரங்களாக இறங்கி வந்து ஏரியில் வட்டமடித்து விட்டு செல்வது வழக்கமாம்.

சென்ற வருடம் தான் இதை பார்க்க முடியவில்லை. இந்த வருடமாவது பார்க்க வேண்டும் என்ற முடிவில் இருந்தோம்.

மானசரோவரில் இருந்து அடுத்த வாரம்.