நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் சீமான்.
அதாவது அத்தைக்கு மீசை முளைத்தால் .......
திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்று 2226 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம் - முதலமைச்சர் ஸ்டாலின்.
அதாவது சனாதன தர்ம ஆட்சின்னு சொல்றீங்க அப்படித்தானே முதல்வரே !!
அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்கள் உயர்ந்த இடத்திற்கு வர முடியும் அதற்கு நானே சாட்சி எடப்பாடி.
ஆனால் விசுவாசம் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கணும் அப்படித்தானே தலைவரே !!
அதிமுகவோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை அமைச்சர் ரகுபதி.
உங்க கூட கூட்டணி இருக்கிறவங்க உங்களை குறை சொல்லிட்டே இருப்பாங்க, ஆனா போகவும் தயாரா இல்லை அப்படித்தானே அமைச்சரே !!
தொண்டர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.முனுசாமி.
ஆனால் வாக்காளர்கள் நம் பக்கம் இல்லையே தலைவரே !!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு - அரசு அறிவிப்பு.
ஆனால் இந்தக் கட்டுப்பாடு டாஸ்மாக்கு செல்லாது !!
கன்னடர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள்.
அவங்க ஒற்றுமையாக தான் இருக்காங்க நீங்க போட்டு குழப்பமா இருந்தா சரி !!
தண்ணீர் பாட்டில், மிதி வண்டிகளுக்கு ஜிஎஸ்டி குறைகிறது.
அப்ப எதுல அதிகமாக்க போறீங்க அதையும் சொல்லுங்க !!
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
வேணவே வேணாம் உங்கள நம்பி ஏமாந்ததெல்லாம் போதும் வாங்கி வச்ச பால் பாக்கெட், பிஸ்கட் ,பிரட் ,தோசை மாவு எல்லாம் வேஸ்டா கிடக்குது !!
செயல் மொழி தான் நமது அரசியலுக்கான தாய் மொழி நடிகர் விஜய்.
நல்லா இருக்கு இந்த டயலாக் யார் எழுதி தந்தது !!
தமிழகத்தில் அதிமுக கூட்டணி தற்போது வலுவானதாக அமையவில்லை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருத்தம்.
2026-இல் ஆட்சியைப் பிடிப்போம் என்று பொதுச் செயலாளர் சொல்வது பொய்யா கோபால்!!
ஆந்திராவைப் போல் திமுக கூட்டணியில் உள்ள செல்வப் பெருந்தகைக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படாதது ஏன் ? தேமுதிக தலைவர் எல்கே சுதீஷ் கேள்வி.
செல்வப்பெருந்தகை காலி பண்ண எதிர் கோஷ்டி எல்.கே.சுதீஷ் கிட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பாங்களோ !!
அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டி உள்ளன சசிகலா.
அதுதான் உங்களை வேணான்னு சொல்லிட்டாங்களே அதுதான் அந்த மாற்றம் !!
மொழி அரசியலை இனியாவது திமுக கைவிட வேண்டும் தமிழிசை வலியுறுத்தல்.
பதிலுக்கு அவங்க சனாதன தர்மத்தை கைவிட சொல்லி கேப்பாங்களே பரவாயில்லையா அக்கா !!
பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம் கேரள முதல்வர் விமர்சனம்.
ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல தெரியுது !!
போதைப்பொருளை ஒழிக்க ஒன்றிணைந்த முயற்சி தேவை முதல்வர் ஸ்டாலின்.
டாஸ்மாக் மட்டும் ஓகே மற்றதெல்லாம் கெட் அவுட் அதானே முதல்வரே !!
Leave a comment
Upload