தொடர்கள்
கதை
உயர் ரகப்பட்டாசு – பா.அய்யாசாமி 

மரகதம், இது வாட்ஸ்ஆப் கால்,அவர்கள் பேசிய பின்னே பேசு அப்போதான் அவர்கள் பேசுவது உனக்கு புரியும் என்று சொல்லி தன் அலைபேசியை மனைவி மரகதத்திடம் கொடுத்தார் மயில்சாமி..

ம்...ம். அவள் காதில் வாங்கினாத்தானே?! செளக்கியமா இருக்கியாடா, உடம்பு எப்படியிருக்குஎன கேள்விகளை கேட்டுக்கொண்டே போனாள் மரகதம் மெல்போர்ன் நகரில் உள்ள தன் மகன் அபிஷேக்கிடம்.

நான் சொல்கிறதை இப்போவாது கேளு, நிறுத்தி பேசு என்று சொன்னார் இல்லை கிட்டத்திட்ட கதறினார் மயில்சாமி. பாசத்தில் அவள் காதுகளும் அடைத்துப்போயிருந்ததுஅத்தனை பாசம் பிள்ளை அபி மீது.
காதல் மணம்புரிந்த அபிஷேக் ஏழு வருடங்களாகியும்
மருமகள் தாரா வேற்றுச்சமூகத்துப் பெண் என்பதால் இரண்டு ஆண்டுகள் வரை கொஞ்சம் கோபமிருந்தது மரகதத்திற்கு, குழந்தையாய் ஆயுஷைப் பார்த்தபிறகு சற்றே தனிந்திருந்தது.

வீட்டு விசேடங்களில் மகிழ்ச்சியாக தம்மால் கலந்துக்கொள்ள முடிவதில்லை, கேட்கும் நபர்களுக்கும், உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் பதில் சொல்லிச்சொல்லி அவள் மனத்திலிருக்கும் நினைவை அனையாமல் பார்த்துக்கொண்டது இச் சமூகம்.

தீபாவளிக்கு இந்தியாவிற்கு வருகிறோம் என்றதும் மகிழ்ச்சியில் தாய்மனசு குதித்துக்கொண்டாடியது, வாடா..வா..நிறைய நாட்கள் இருப்பதுபோல லீவுபோட்டு வா என்றதும் சரிம்மா என்று வைத்து விட்டான் அபி.

என்னங்க நல்லா பேசினாங்களா போகலாமா ? இல்லை தீபாவளி முடிந்து இந்தியாவிற்கு போகலாமா ? என கேட்ட மனைவி தாராவிடம், அதெல்லாம் நல்லாதான் பேசினாங்க, நமக்கு இதுதான் தலைத்தீபாவளி இந்தியாவில் என்று பழைய நினைவுகளைப்பேசி சிரித்துக்கொண்ட இருவரும் தீபாவளிக்கே போய்வரலாம் என இந்தியாவிற்கு கிளம்பும் வேலையில் இறங்கினர். .


அபிஷேக் வீட்டிற்கு வந்ததில் மரகதம் தாயாக மகிழ்ச்சிய டைந்தாலும், மாமியாரகச் சற்று விலகியே இருந்ததைப் பார்த்த மயில்சாமி மனசுதான் இந்த மனிதர்களை என்ன பாடுபடுத்துது! என நினைத்துக்கொண்டார்

பலகாரங்கள் எதுவும் செய்யத் தெரியாது, மருதானி வைக்கும் பழக்கமில்லை,பெயரன் ஆயுஷ் கையில் அலைபேசி, காதி்ல் புளூ டூத்துமாக அமர்ந்துக்கொண்டு யாரிடமும் பேசுவதில்லை, எதிர்பார்த்தபடி ஒரு விசயமும் நடக்கலை என வருத்தமடைந்தாள் மரகதம்.

ஏழு வருசமாச்சு, தானும் மாற்றிக்கவில்லை, பெயரனுக்கும் நல்லது ஒன்றும் சொல்லி வளர்க்கவில்லை என புலம்பியபடி மயில்சாமியிடம் சொல்லி வருத்தப்பட்டாள். அவர்களை அவர்கள் போக்கிலே இருக்கவிடு என்றதற்கு, அதானே! நாளும் கிழமையுமா அட்வைஸ் ஒன்றும் வரலையே என நினைத்தேன் இதோ வந்திட்டு என்ற அர்ச்சனையில் மயில்சாமி மெளன சாமியானார்

நீ புதிதாக வாங்கிய உடைகளை எடுத்து வா தாரா, சாமிகிட்ட வைத்து நாளைக்காலையில்படைக்கணும் என்று கடுகடுவென மரகதம் சொன்னதும் பெட்டியிலிருந்த உடைகளை எடுத்துக்கொடுத்தாள்.


கம்ஆன் ஆயுஷ் என்ஜாய் தி பயர் வெர்க்ஸ் என அபி தன் மகனை அழைக்க..

நோ டாட்! யூ காண்ட்! இட்ஸ் இல்லீகல் என வகுப்பெடுத்தான் ஆயுஷ்.

கம் ஆன் யா! இன் இந்தியா இட்ஸ் லீகல் என்றான் அபி.

ஹவ் கேன் இட்ஸ் பாசிபிள் டாட் ? வீ பீப்பிள் ஆர் த சேம், தென் ஒய்? - ஆயுஷ்

Oh..yes. .no என தடுமாறிய அபி There is a system in US, Here is a custom என்ற போது, என்னடா, TR மாதிரி விளக்கம் சொல்லிகிட்டு என்ற மயில்சாமி பக்கத்திலிருந்து வெடிக்க வைத்தார்.

கூடுதல் வெடிச்சத்தமும், கலர் கலரான மத்தாப்புகளையும் ரசித்தது குழந்தை மனசு. ஒரு கட்டுப்பாட்டுக்குப்பின் கிடைக்கும் சந்தோஷம் நிறைவான மகிழ்ச்சையைத் தருவது போல ரசித்து வெடித்தான் ஆயுஷ்.


என்னது இது ? தீபாவளிக்கு யாராவது கருப்புக்கலர் துணியை

எடுப்பாங்களா இல்லை அதை சாமிக்குத்தான் படைப்பாங்களா ? என மரகதம் தாராவிடம் கடுகடுத்தாள்.

இல்லை அத்தை! வேற சில கலரில் துணிகளும் இருக்கு அதை வைக்கலாம் என மாற்றிக் கொடுத்தாள்.

மாலை நேரமானதும் பக்கத்தில் வசிக்கும் பாஸ்கர் அங்கிள் மற்றும் கோமதி ஆண்டியைப் பார்த்துவிட்டு வருகிறேன்மா என்ற அபியிடம்...

கண்டிப்பா போய் பாரு அபி, உன்னை வளர்த்ததில் அவர்களின் பங்கும் அதிகம், எத்தனை அன்பு உன் மேலே, இப்போ உடம்பிற்கு முடியாமல் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள் தாராவையும். ஆயுஷையும் அழைத்துக்கொண்டு போ, உங்களைப் பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். இந்த ஓட்ஸ், பாதம் எல்லாம் அவர்களுக்கு கொடு என மரகதம் கொடுத்துவிட, அத்தை! உங்களுக்காகவும் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் என சொன்ன தாராவிற்கு பதில் சொல்லாமல் உள்ளே போய்விட்டாள்.

வாங்க என வரவேற்று அங்கிள் தனது மனைவியிடம் அழைத்துப் போனார், சுருண்டு படுத்தியிருந்தவள் எழுந்து நல்லாயிக்கியா அபி என விசாரித்து குழந்தையைக் கொஞ்சினாள்,தாராவிடம் பேசினாள்,

வருத்தப்படாதே! மரகதம் விரைவில் சரியாகிவிடுவாள் அவளை ஒன்றும் தப்பாக நினைக்காதே! பாசக்காரி என்றவள் நெஞ்சைப் பிடித்துத்திணறி இறும ஆரம்பித்தாள்கோமதி.

இவங்களுக்கு என்ன ஆச்சு ? என்ற தாராவிடம், புற்றுநோய்

final stageனு சொல்லி கைவிரிச்சுட்டாங்க என்றதும் இருவரும் உடைந்த அழத்தொடங்கினர். பெற்றோர் அழுததைக்கண்டு ஆயுஷ் கண்களும் கலங்கின.
ஊரெங்கும் வெடிச்சப்தம் காதுகளை துளைத்தன, இரண்டு நாட்களாக தூக்கமுமில்லைவெடிச்சப்தம் எழும் போதெல்லாம் கண்களை மூடி சகித்துக் கொண்டியிருந்தாள் கோமதி.

பண்டிகை தினமன்று, ஆயுஷ் எழுந்தும் தலையில் எண்ணெய் வைத்துக்கொள்ள மறுக்க, என்ன வளர்ப்போ என மருமகளுக்கு அருச்சனை நடந்தது, புத்தாடை அணிந்து மகழ்வோடு பட்டாசுகளை வெடிக்க ஆயுஷை கூப்பிடவும் வற்புறுத்தியும் மறுத்துவிட்டான்,

நோ....நோ..ஐ காண்ட் டூ பயர்ஸ். ஆண்டி இஸ் இன் வெர்ஸ்ட் கண்டிசன் ஹவ் யூ பீப்பிள் ஆர் இன்சிஸ்ட் மீ டு டூ திஸ்? காண்டு யூ ஹேவ் மானேர்ஸ் ? என கத்தினான் ஆயுஷ்.

வாயடைத்து நின்றார்கள் வீட்டார்கள். நாம பக்கத்திலேயே இருக்கோம், அவள் படுகிற பாட்டை தினமும் பார்க்கின்றோம,

ஆனால் எத்தனை சுயநலத்தோடு இருந்திருக்கின்றோம், ஒரு தடவை போய் பார்த்த குழந்தை ஆயுஷூக்கு தோன்றியது நமக்கு தோணலையே என பேசிக்கொண்டனர்.

மரகதமும் மயில்சாமியும், தாராவும் அபியும் அவன் சொல்வது சரிதான் என சொல்லி அவனை அமைதிப்படுத்திக் கொண்டியிருந்தார்கள்.

தாரா எதையுமே தனது மகன் ஆயுஷிற்கு சொல்லித் தரவில்லை என நினைத்த மரகதத்திற்கு பெரிய விசயமான மனிதம் போதிக்கப்பட்டியிருக்கிறது என்கிற உண்மை தெரியவந்ததில் உள்ளங்களில் தீபம் ஒளிர உண்மையான தீபாவளியைக்கொண்டாடிணார்கள்.