
நீங்கள் உங்கள் எண்ணத்தில்(உள்ளத்தில்?) யூகிக்கும் வார்த்தைகளை ஓர் கருவி பதிவு செய்கிறது. நம்ப முடிகிறதா உங்களால்?
விஞ்ஞானம் நம்மை மீறி வளர்ந்து கொண்டிருக்கிறது.
MIT Media Lab என்ற அமெரிக்காவை சேர்ந்த கல்வி நிறுவனத்தில் ஓர் ஆராய்ச்சி மாணவன் அர்ணவ் கபூர். இவர் சில பல ஆச்சரியக் கண்டுபிடுப்புகளை மேற்கொண்டுள்ளார் .
இந்த இந்திய மாணவன் அமெரிக்காவில் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு நமக்குப் பல பெருமைகளை தேடிக்கொடுத்துள்ளார். இவரது ஆராய்ச்சிகள் பெரும்பான்மையானது மனித மரபணுக்கள் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சிகளே. Harvard Medical Schoolல் ஓர் ஆராய்ச்சி மாணவனாக இருக்கும் பொழுது மரபணுக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திடுவது தொடர்பாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார் .அதன் பிறகு MIT Media Lab ,USA ஆராய்ச்சியாளனாக பல உளவியல் சம்பந்தப்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார். இவர் கண் தெரியாத மற்றும் காதுகேட்காதோர்க்கு உதவும் ஓர் கருவியை கண்டு பிடித்து தற்போது அது இந்தியாவில் வடமாநிலங்களில் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் Google நிறுவனம் நடத்திய Google Lunar X Prize challenge போட்டியில் பங்கு பெற்று நிலவில் 500 மீட்டர் தவழக்கூடிய ஓர் கருவியை கண்டுபிடித்துள்ளார் . இது போல் நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம், அர்ணவ் கபூர் திறமைகளை.
இவரது AlterEgo என்ற கருவியை அணிந்தால் நீங்கள் உங்கள் மனதோடு பேசலாம் . அதாவது உங்கள் மனதுக்குள் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் அந்த கருவி மூலம் வெளிப்படும். உங்கள் எண்ண அசைவுகள் அதில் பதிவாகும். இது intelligence-augmentation என்னும் உளவியல் புலனாய்வு பெருக்குதல் சம்பத்தப்பட்ட வகையை சேர்ந்த கருவியாகும்.இந்த கருவியை helmet போல் தாடையுடன் சேர்த்து அணிந்துகொள்ள வேண்டும். உங்கள் தாடையின் உள் அசைவை கொண்டு உங்கள் எண்ணத்தை அது பதிவு செய்கிறது .
ஓர் பெண்ணைப்பார்த்து இவள் அழகாக இருக்கிறாளே என்று நினைத்தால் கூட அந்த கருவி ஆம் என்று பதில் சொல்லும்.
பல பொருட்களின் விலையை பார்த்து விட்டு மொத்தம் எவ்வளவாக இருக்கும் என்று மனதுக்குள் கேட்டால் மொத்த விலையை அது கூட்டிச் சொல்லும். சாம்பிளுக்கு கீழே காணொலி காண்க!
இந்த முயற்சி ஓர் கணிப்பொறிக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை உருவாக்குகிறது. இப்பொழுது ஐபோனில் siri என்று ஒரு மென்பொருள் இருக்கிறது.
Amazon Alexa என்ற ஓர் கருவியை வெளியிட்டுள்ளது . இவைகள் நாம் சொல்வதை செய்யும் . இவைகளை Artificial Intelligence என்று அழைக்கிறோம் . அதாவது செயற்கை நுண்ணறிவு . இதற்கு அடுத்த கட்டமாக இவர்கள் இப்பொழுது கண்டுபிடிப்பது Intelligence Augmentation.
இந்த ஆராய்ச்சி ஆரம்பக் கட்ட நிலையிலேயே அசத்துகிறது. இன்னும் வளர வளர நம்மை பிரமிக்க வைக்கப் போகிறது.
வாழ்த்துக்கள் அர்ணவ்!
- ஸ்ரீ தமிழ்

Leave a comment
Upload