
எங்கு பார்த்தாலும், தன்னிடம் யார் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று கேட்பதால், இறுதி முடிவு அறிவிக்கும் வரை வெளியே செல்லாமல் இருக்கிறாராம், நடிகை சங்கீதா. நேரம் கிடைக்கும் போது மகளுடன் விளையாடுவது, டிவி பார்ப்பது என பொழுதைக் கழிக்கிறாராம் அவர்.

சினிமா படப்பிடிப்பு இல்லை என்றாலும், விளம்பரப் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. விளம்பரத்தில் நடித்து வரும் வருமானத்தைத் தொண்டு நிறுவனங்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறாராம், அவர்.
நடிக்க இருக்கும் படத்திற்கு தினம் கதை கேட்டு வருகிறார் ஜெயம் ரவி. இதற்காக நந்தனம் சிக்னல் அருகே தனியாக அலுவலகம் திறந்திருக்கும் ஜெயம் ரவி, படத்தின் முழுக் கதையையும் ஷாட் பை ஷாட்டாக சொல்ல வேண்டும் என்று இயக்குனர்களிடம் நிபந்தனை விதிக்கிறாராம். அடுத்து ஐசரிகணேஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார், ஜெயம் ரவி.

நீலாங்கரையில் உள்ள வீட்டை இடித்துவிட்டு அங்கு பெரிய வீடு கட்ட இருக்கும் விஜய், பனையூரில் உள்ள வீட்டுக்குக் குடி போயிருக்கிறார். நீச்சல் குளம் உட்பட பல வசதிகளை கொண்ட வீடாக அது அமைந்துள்ளதாம்.

"நான் நடித்த படங்களில் உள்ள ஹீரோக்களில், நவ்தீப் என்னை இரண்டுமுறை கரெக்ட் பண்ண முயற்சி செய்தார்" என்று தெரிவித்த காஜல் அகர்வால், எல்லோருடனும் ஒவ்வொரு அனுபவம் உண்டு என்றும் குறிப்பிட்டார். இதைப் படித்த பல நடிகர்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

சமுத்திரக்கனி நடிப்பில் ‘உள்ளே வெளியே’ இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கும் பார்த்திபன், அடுத்து பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதற்காக, பிரபுதேவாவைச் சந்தித்து, அவரிடம் கதை சொல்லி இருக்கிறாராம், பார்த்திபன். வெல்கம் பேக் இயக்குநரே!

ரஜினி படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தை ‘விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த சஷிகாந்த் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் நடைபெற உள்ளதாம்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும், நாகார்ஜுனாவுடன் இணைந்து, தோழா படத்தில் நடித்திருந்தார், கார்த்தி. அந்தப் படத்திற்குத் தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்புக் கிடைத்ததைத் தொடர்ந்து, இப்போது, தெலுங்கு மொழியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கார்த்தி. தெலுங்கு மொழியில் வெற்றி பெற்ற, “நீதி நாதி ஒகே கதா” படத்தை இயக்கிய, வேணு உடுகுலா இயக்கத்தில் ஒரு புத்ய படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி.

தெலுங்குப் படங்களில் மட்டும், கவர்ச்சியாக நடிக்கிறார் என்கிற குறையைப் போக்கும் விதத்தில், தமிழிலும் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருப்பதை அறிவிப்பது போல, மிஸ்டர் சந்திரமவுலி படத்தில், படு கவர்ச்சியாக நடித்திருருக்கிறார், ரெஜினா. அந்தக் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் திரு. இந்த படத்தில் இவரது நிஜ மாமனாரான இயக்குநர் அகத்தியனும் நடித்திருக்கிறார். அவர் நடிப்பது நவரச நாயகன் கார்த்திக்கின் நண்பனாக. இதில் கார்த்திக்கும் அவரது மகன் கெளதமும் படத்திலும் அப்பா-மகனாகவே நடிக்கிறார்கள்.
- பாலன்

Leave a comment
Upload