
ஃபேஸ்புக்கில் நிபுணன் திரைப்பட இயக்குநர் அருண் வைத்யநாதனின் பக்கத்தில் தமிழகத்தின் சமீபத்திய பிரச்னைகள் பற்றி தனது பார்வையை எழுதியிருந்தார். (இணைப்பு : https://www.facebook.com/arun.vaidyanathan/posts/10155665023736871 : பதிவு இப்போது நீக்கப்பட்டுவிட்டது)
அங்கே பின்னூட்டத்தில் நடிகை ராதிகா, “Nice thought, but how can people be quiet when there is a lot of nonsense and manipulation around you. If there are good people there will be bad around also. But the point needs to be established. Foe example, Look at the actor who suddenly talks any MGR and his closeness, lot of people know the truth if they keep quiet, what has been said will be the truth” என்று ஆங்கிலத்தில் பகிர்ந்திருந்தார்.
“நம்மைச் சுற்றிலும் நிறைய விஷயங்கள் முட்டாள்தனமாகவும், மிகைப்படுத்துதலாகவும் இருக்கும் போது மக்கள் எப்படி அமைதி காக்க முடியும். நல்ல மக்கள் இருந்தால், கெட்ட மக்களும் இருக்கத்தான் செய்வார்கள். உதாரணத்திற்கு, ஒரு நடிகர் திடீரென தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொன்னதை எடுத்துக் கொண்டால், ஏராளமானோருக்கு அதன் உண்மைத் தன்மை தெரியும். அவர்கள் பேசாமல் இருந்தால், அவர் சொன்னது உண்மை என்றாகிவிடும்” என்று கூறியிருந்தார்.
அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத்தான் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதனைப் பார்த்தவுடன் பலரும் அவரிடம் அது குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன், கேள்வி கேட்டவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் தாக்க ஆரம்பித்து விட்டார்.
“எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் இருந்த தொடர்பு குறித்து 1996-ம் ஆண்டிலேயே ரஜினி துக்ளக் இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டிருக்கிறார்” என்று ஆதாரத்துடன் கேட்ட போது அதனை விட்டு விட்டு, “ரஜினி ஒரு கன்னடர்” என்று மாற்றினார்.
“அப்படியென்றால் உங்கள் தந்தையே ஒரு தெலுங்கர்தானே? உங்கள் சகோதரர் ராதாரவியே அதனை பலமுறை கூறியுள்ளார். தவிர உங்கள் தாயும் இலங்கையைச் சேர்ந்தவர்தானே?” என்று பதில் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
“என் தந்தை திராவிட அரசியலின் முக்கியத் தூண்களில் ஒருவர் என்பது கூடத் தெரியாதா உங்களுக்கெல்லாம்?” என்று அதற்கு பதில் அளித்திருந்தார் அவர்.
“திராவிடம் என்றால் தமிழும், தெலுங்கும் மட்டும்தானா? கன்னடமெல்லாம் அதில் வராதா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
“ரஜினி நல்ல மனிதர். ஆனால் ஜாதி, மதங்களை எல்லாம் வைத்து அரசியல் செய்ய முடியாது. தமிழகத்தில் அப்படி யாரும் அரசியல் செய்வதில்லை” என்று சம்பந்தமே இல்லாத அடுத்த குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
“உங்கள் கணவர் சரத்குமாரின் கட்சியே நாடார்கள் சமூகத்துக் கட்சி என்று கூறப்படுகிறதே. வன்னியர் கட்சி, இஸ்லாமியர்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றெல்லாம் கட்சிகள் இருப்பது தெரியுமா, தெரியாதா?” என்ற ஏனையோரின் கேள்விக்கு வழக்கம் போல அவரால் பதில் கூற முடியவில்லை.
”ரஜினியே என்னிடம் நான் ஒரு கன்னடர் என்று தனிப்பட்ட முறையில் கூறினார்” என்று அடுத்த தாவலுக்குச் சென்றார்.
“அவர் தனிப்பட்ட முறையில் கூறியதாகவே வைத்துக் கொள்வோம். அதைப் பொதுவில் பகிருவது சரியா?” என்ற பதில் கேள்விக்கும் பதில் இல்லை.
“இத்தனை நாட்களாக அரசியலுக்கு வராமல் இப்போது ஏன் வர வேண்டும்?” என்று அதற்கடுத்த கேள்வியை எழுப்பினார். “அதற்குத்தான் வெற்றிடம் இருக்கிறது என்று அவரே சொல்லி விட்டாரே” என்ற பதிலுக்கும் அவரால் பதில் கூற இயலவில்லை.
தொடர்ந்து பலர் எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் பதிலே சொல்ல முடியாத நிலையில், அவர் பதில் கூறுவதை நிறுத்தி விட்டார். பதிலுக்கு ‘சமத்துவ மக்கள் கட்சி’ என்று தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டுக் கொண்டிருந்த மூன்று பெண்கள் அந்தப் பதிவில் வந்து ரஜினியையும், அவரது குடும்பத்தினரைப் பற்றியும் தரக்குறைவாக பின்னூட்டங்கள் இட ஆரம்பித்தார்கள். “அவரெல்லாம் தமிழர் அல்ல. தமிழரை தமிழர்கள்தான் ஆள வேண்டும். அவர் தமிழ் பண்டிகைகளை கொண்டாடுவது இல்லை” என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் பதிவின் உரிமையாளர் அருண் வைத்யநாதன் அந்தப் பதிவினையே நீக்கி விட்டார்.
”ராதிகா ஒரு முழு நேர அரசியல்வாதியல்ல. அவர் கணவர் அரசியலில் இருக்கிறார். தேர்தல் அரசியலில் அவரது சொந்தத் தொகுதியிலேயே அவரால் வெற்றி பெற முடியாதச் சூழல். ராதிகா அவரை தமிழ்ப் பெண் என்று எப்படிச் சொல்லிக் கொள்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை சரத்குமார் தமிழர் என்பதால் ராதிகா தன்னையும் தமிழச்சி என்று சொல்லிக் கொள்வாரேயானால், அதே ரஜினிக்கும் வராதா? திராவிடம் என்றால் என்ன? தமிழர் கோஷத்தை எழுப்பி தனது தந்தை திராவிட சித்தாந்தத்தைக் கொண்டவர் என்று ஏன் குழப்பிக் கொள்கிறார்? ரஜினியின் அரசியல் வரவினால் இவருக்கு ஏன் கோபம் எழ வேண்டும்?” என்றெல்லாம் நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் எந்தக் கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. இருக்காது என்பதுதான் உண்மை.
- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்

Leave a comment
Upload