தொடர்கள்
பொது
மறுவடிவம் பெறும் எலக்ட்ரானிக் கழிவுகள்

இந்திய வம்சாவளி பெண் சாதனை

20180313184220686.jpg

ஆஸ்திரேலியாவின் நியூசவூத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீணா சகஜ்வாலா (42) என்ற பெண் மின்னியல் மற்றும் மின்னணு துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

உலகளவில் எலக்ட்ரானிக் கழிவு பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு, ஓசோன் ஓட்டை மற்றும் நிலத்தடி நீருக்கு பாதிப்புகள் உருவாகின்றன. இவற்றை தவிர்ப்பதற்கும், எலக்ட்ரானிக் கழிவு பொருட்களை மறுசுழற்சி மூலம் மீண்டும் மதிப்புமிகு பொருளாக கொண்டுவர, வீணா முதன்முறையாக மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கியிருக்கிறார்.

இந்த மைக்ரோ தொழிற்சாலையில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, கம்ப்யூட்டர் சர்க்யூட் போர்டு உள்ளிட்ட எலக்ட்ரானிக் கழிவு பொருட்கள் மூலம் 3டி பிரிண்டிங்குக்கு தேவையான கிரேடு செராமிக்ஸ் மற்றும் பிளாஸ்டிக் நார்களாக மாற்றி வீணா சாதனை படைத்திருக்கிறார்.

இதுகுறித்து வீணா கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவில் மட்டுமே பல மில்லியன் டன் எலக்ட்ரானிக் கழிவுகளால் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நான் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டேன். இதையடுத்து, அந்த கழிவுபொருட்கள் மூலம் பிளாஸ்டிக் நார் உள்ளிட்ட பொருட்களை மைக்ரோ தொழிற்சாலை மூலம் தயாரித்து வருகிறோம்’ என்கிறார்.

- சிரி