

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மெர்க்குரி.
படம் தயாராகி திரைக்கு வரவிருந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில்லை என்ற முடிவெடுத்ததால் மெர்க்குரிக்குச் சிக்கல்.
தமிழைத் தவிர இந்தி உள்ளிட்ட வேற்று மொழிகளிலும் இப்படம் தயாராகி இருப்பதால், வேறு வழியின்றி இன்று தமிழகத்தைத் தவிர ஏனைய இடங்களில் படத்தை திரையிட்டுள்ளனர். ‘இந்தி பதிப்பையாவது தமிழகத்தில் திரையிட அனுமதியுங்கள்’ என்று தயாரிப்பாளர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை.
‘வேறு வழியின்றி இன்று தமிழகத்தில் ரிலீஸ் செய்ய இயலவில்லை. படம் இங்கே திரைக்கு வரும்வரை காத்திருங்கள். திருட்டுத்தனமாக இணையத்தில் பார்க்க வேண்டாம்’ என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை வைத்துள்ளார்
- குருவாயூரப்பன்

Leave a comment
Upload