தொடர்கள்
விகடகவியார்
குருபூஜை குழப்பம்-விகடகவியார்

20241127173954253.jpg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் சுட சுட வெண்பொங்கல் தந்தார் ஆபீஸ் பையன்.

"பக்கத்துல இருந்த பெருமாள் கோயிலில் தந்தாங்க பெருமாள் பிரசாதம் சாப்பிடுங்க" என்றார்.

பொங்கல் ஒரு கவளம் முழுங்கிவிட்டு

"எல்லா கட்சித் தலைவர்களையும் போய் தேமுதிக தலைவர்கள் சுதீஷ் மற்றும் விஜய் பிரபாகரன் இருவரும் பார்த்து விஜயகாந்த் இறந்து ஒரு வருடம் ஆனதை , விஜயகாந்த் நினைவிடக் கோயிலில் குருபூஜையாக கொண்டாட அழைத்து இருக்கிறார்கள் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை ஆகியோரை இவர்கள் சந்தித்து இருக்கிறார்கள் "என்றார்.

நாம் அப்போது "குருபூஜை என்றால் பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்படும் தேவர் குருபூஜை தான். குருபூஜை என்று சொல்வார்கள் இது என்ன புது கதையாக இருக்கிறது" என்று நாம் கேட்டோம் .இந்த சந்தேகம் எல்லோருக்கும் வரத் தொடங்கி இருக்கிறது.

பிரேமலதா செல்வாக்குள்ள தலைவர் எல்லாம் இல்லை விஜயகாந்த் வைத்து தான் அவர் அரசியல் செய்ய வேண்டும் அதற்கு தான் இந்த குருபூஜை என்றார்.

கூடவே பாரதிய ஜனதா, தேமுதிகவை தங்கள் கட்சியுடன் இணையுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு யோசனை சொல்லி இருக்கிறார்கள் இது பற்றியும் பிரேமலதா குடும்பத்தினர் விவாதம் செய்து வருகிறார்கள். இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார் விகடகவியார்.

20241127174155986.jpeg

"பாட்டாளி மக்கள் கட்சி திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று சொல்கிறது என்று நாம் கேட்க எல்லாம் தேர்தல் ஜுரம் தான் இட ஒதுக்கீடு என்பது தான் தற்சமயம் பாட்டாளி மக்கள் கட்சியிடம் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே முன்பு இருந்தது போல் முக்கியத்துவம் தருமா என்று தெரியவில்லை.

திமுக அமைச்சர் சிவசங்கர் அறிக்கை பேட்டி என்று "ராமதாஸ்களை "வறுத்து எடுக்கிறாரே பார்க்கவில்லையா நீங்கள் ? திராவிட கட்சிகள் இப்போதைக்கு இந்த இட ஒதுக்கீடு பூச்சாண்டிக் எல்லாம் பயப்படுவது போல் தெரியவில்லை என்று சிரித்தார் விகடகவியார்.

"வழக்கப்படி தொல்.திருமாவளவன் கட்சியின் விஷயத்துக்கு வருவோம் " விடுதலை சிறுத்தை கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு என்று ஒரு திமுக தலைவர் என்னிடம் பேசும் போது சொன்னார்,

ஆதவ் அர்ஜுனா சர்ச்சை அடங்கியது.

இப்போது வன்னியரசு வரும் சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று ஒரு ஊசி பட்டாசை கொளுத்தி போட்டு இருக்கிறார். வழக்குப்படி திருமா அது அவர் சொந்த கருத்து என்று சொன்னாலும் வேறு கட்சிகளிலும் எங்களுக்கு வாய்ப்புகள் வந்து வண்ணம் இருக்கின்றன ஆனாலும் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்வோம் அந்த துணிச்சல் எனக்கு மட்டுமே உண்டு என்று பெருமையாக சொல்கிறார். இதையும் திமுக கவனித்துக் கொண்டிருக்கிறது" என்றார் விகடகவியார் .

20241127174341118.jpg

" திமுக தலைமை செயற்குழு கூட்ட செய்திக்கு வாரும் "என்றோம் .

"செயற்குழு 200 இடங்களுக்கு மேல் வெற்றி என்று பெரிய தலைவர் எல்லாம் பேசினார்கள் பெருமையாக ஆனால் சில உறுப்பினர்களை பேச சொன்ன போது 19 அமைப்புகள் இருந்தாலும் இளைஞர் அணிக்கு தான் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று ஒருவர் புகார் சொன்னார். உடனே ஸ்டாலின் எழுந்து அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்றார். அப்போது அவர் போன முறை செயற்குழு கூட்டத்தில் கூட இதை தான் சொன்னீர்கள் ஆனால் இப்போதும் இளைஞர் அணிக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று தொடர்ந்து பேசினார். அதற்குள் ஒரு மூத்த தலைவர் பேசியது போதும் உட்காருங்க என்று அவரை உட்கார வைத்து விட்டார்.

இதேபோல் இன்னொரு உறுப்பினர் அமைச்சர்கள் திமுககாரர்களுக்கு எதுவும் செய்வதில்லை. டெண்டர், டிரான்ஸ்பர் எல்லாம் அதிமுககாரர்கள் தான் இப்போதும் வந்து சாதித்துக் கொள்கிறார்கள் என்று புகார் சொன்னார். கூடவே நாங்கள் அதிமுக ஆட்சியில் அவர்கள் வீட்டு வாசலில் போய் எந்த சிபாரசுக்கும் நின்றது கிடையாது என்றும் சொன்னார். இதற்கு அமைச்சர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தலைமை 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறது. தொண்டர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை என்பதை தான் செயற்குழு கூட்டம் சொல்லி இருக்கிறது என்று சொல்லிவிட்டு மீதம் இருந்த பொங்கலை சாப்பிட்டு விட்டு பொங்கல் சூப்பர் என்ற கமெண்ட்டுடன் புறப்பட்டார் விகடகவியார்.