தொடர்கள்
வரலாறு
சர்தார்ஜி! 12 மணி ஆச்சா ?? கலாய்க்கும் வசனம் - பால்கி

2024112522325104.jpg

பஞ்சாபின் சிங் தான் சார்தார் எனப்படுபவர். அவர்களின் அடையாளமே தலையில் டர்பன் (தலைப்பாகை)அணிந்து கொண்டிருப்பதுதான்.

சாதாரணமாக அந்த சமூகத்தினரை ஜோக்காக ஓய் சர்தார்ஜி! பாரா பஜ் கயே, அதாவது, என்ன சர்தார்ஜி பன்னண்டு மணி ஆயிடிச்சா! என்று சர்வ சாதாரணமாக கேலி செய்வது வடக்கே சகஜம்.

இப்போது இந்த வீடியோவுக்குள் புகுவோமா!!!.

அதில் நான்கு நண்பர்களில் ஒரு நண்பியும் ஒரு சர்தார் நண்பரும் மற்ற இரு நண்பர்களும் உள்ளனர்.

இடம் ஆஃபீஸ்க்கு வெளியே. நேரம் மதியம்..

கடந்து செல்லும் சர்தார்ஜி யை மற்ற மூவரில் ஒருவர், சர்தார்ஜி! பாரா பஜ் கயே என்று சற்றே கலாட்டா மூடில் ஓசையிட, நம்ம சர்தார் இளைஞனோ சற்றே புன்முறுவலித்த படியே அருகாமையில் உள்ள கூல் ட்ரிங்க்ஸ் கடையில் திறக்கப்படாத ஒரு குளிர் பான பாட்டிலை கையில் ஏந்திய வண்ணம் ஓசையிட்டவரிடம் வருகிறார்.

ஓசையிட்டவன் தணிந்த குரலில், என்ன சர்தார், நாங்க சொன்னதக் கேட்டு கோவப்பட்டுவிட்டாயா? என்று நட்பாய் நின்றான்.

சர்தார்ஜி, அது என்ன ஒவ்வொன்றிலும் கலாட்டா பண்ணுவதா? என்று கேட்கிறார் நிலைமையை தன்னகத்தே வளைத்தபடியே.

அந்த நண்பியும், என்ன இப்படித்தான் டென்ஷன் எடுத்துகிட்டு எங்கப் போவே…ஜில்னு இரு ப்ரோ என்று கூறுகிறாள்.

சர்தார், உன்னோட அம்மா சகோதரியை கடத்திகிட்டு போயிடறாங்கன்னு வெஸ்சுக்கோ. அப்ப நீங்க ஜில்லுனு இருப்பீங்களா, இருக்கத்தான் முடியுமா?

அதென்ன பாரா கஜ் கயா என்று சொல்வது உங்களுக்கு வேண்டுமானால் கலாட்டாவாக இருக்கலாம். அதே அந்த “”பாரா கஜ் கயா வின் இதிஹாசத்தைக் கேட்டீர்களானால் இந்த மாதிரி கலாட்டா பண்றத விட்றுவீங்க என்று சொல்கிறான்.

இப்ப அந்த கதையை சொல்லி விடுகிறேன் என்று ஆரம்பிக்கிறான்.

நடந்தது 1739. பெர்ஷியாவிலிருந்து வந்த கொள்ளைக்காரன் டில்லியை முற்றுகயிட்டான். அந்த நகரை முழுவதுமாக சுற்றி வளைத்துக்கொண்டு கைப்பற்றிவிட்டான்.

இது அவனது மனதுக்கு முழு திருப்தியைத் தரவில்லை.

அப்புறமா என்ன செய்தான் தெரியுமா? ஹிந்துஸ்தானத்தின் சகோதரிகளையும் இள வயது பெண்களை கைது செய்து கொண்டான். ஏனெனில், அவர்களை தனது நாட்டுக்கு கட்த்திச் சென்று அவர்களை விற்கமுடியும். இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியது, சீக்கியர்களுக்கு இந்த செய்தி ஆத்திரமடையச்செய்தது. அப்போது சீக்கிய இராணுவத்தின் தளபதியாக இருந்த சர்தார் ஜஸ்ஸா சிங் அஹ்லுவாலியா, இந்த தனது நாட்டு பெண் கைதிகளை எப்படியாவது மீட்கணும் என்ற சபதம் செய்து கொண்டார்.

ஆனால் இது ஒன்றும் சுலபமான காரியம் இல்லை. நாதிர் ஷாவிடம் லட்சக்கணக்கான படை பலம் , அதுவும் பயங்கர ஆய்தங்களுடன், அதே சமயம் சர்தார் ஜஸ்ஸா சிங்கிடம் இருந்ததோ சில நூறு ஆட்களே. அப்படியிருக்க இது எப்படி சாத்தியமாகும்?

அவருக்கு அவரும் குருமார்களின் உபதேசம் நன்றாக நினைவில் வந்தது

குரு கோபிந்த் சிங்கின் பெயரை எடுத்த ஒவ்வொரு சீக்கியனும் ஒன்றரை லட்ச வீரர்களுக்கு சமம். அப்படி எங்கள் குருமாரகளின் உபதேசம் அவர்களின் மனதில் இத்தனை அபரிமிதமான சக்தியை ஊட்டி விட்டது, என்றால் அது சத்தியமே. ஒரு சீக்கியன் ஒன்றரை லட்ச படைகளை சர்வ சாதாரணமாக எதிர் கொள்ள தயாராகிவிடுவானாம்.

இப்போது இந்த சபதத்தை எப்படி முழுமையாக்குவது? என்று சீக்கியர்கள் ஒரு திட்டம் தீட்டினார்களாம்.

சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் நாதிர் ஷாவும் அவனது படைகளும் குடித்துவிட்டு கும்மாள்மிட்டுக்கொண்டிருக்கையில் சீக்கியர் படை அந்த விரோதிகள் மீது தாக்குதல் நடத்துவது என்று.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேலான சகோதரி மற்றும் இளம் பெண்களை மீட்டார்களாம். மீட்டது மட்டுமின்றி அவர்களை பத்திரமாக அவரவர் இல்லத்திற்கே சென்று விட்டு விட்டு வந்தனர்.

அன்றிலிருந்து நாதிர் ஷாக்குப் பிறகு எத்தனை கொள்ளையர்கள் வந்தனரோ அனைவரும் இந்த சீக்கிய திட்டத்திற்கு பயந்தனர். ஆமாம் சீக்கியர்களுகளின் பன்னிரண்டு மணி என்றால் அவர்கள் எவரையும் விட்டு வைப்பதில்லை.

அன்றிலிருந்து இன்று வரை நமது நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்பட்டதோ அப்போதெல்லம் சீக்கியர்கள் உதவத் தவறியதேயில்லை.

அன்னால் நீங்களோ ஒன்றோ சீக்கியர்களைக் கண்டால் பாரா பஜ் கயே என்று ஏளனிக்கிறீர்கள்.

அன்றெல்லாம், நள்ளிரவில் ஏதேனும் கொந்தளிப்பு சத்தம் கேட்டால் முகலாய தீவிரவாதிகளின் வீரர்கள் ஒருவரையொருவர், “12 பஜ் கயே ஹை க்யா, தேகோ சீக் தோ நஹி ஆ கயே?” என்று கேட்டுக்கொள்வார்கள் (இப்ப 12 ஆயிடிச்சா? சீக்கியர்கள் இங்கே இருக்கிறார்களா?)

சரித்திரத்தின் பக்கத்தை அந்த சீக்கியர் சொல்ல வாயடைத்துப்போன அவரது நண்பர்கள் சாரி கேட்டுக்கொண்டனர்.