மூல கோலம் போடுவது – ராஜி என்கின்ற ராஜராஜேஸ்வரி. அதற்கு கருத்தை வடிப்பது மைதிலியுடையது.
இந்த இருவர் கூட்டணியைப் பற்றி சமீபத்தில் ப்ரயாக்ராக் மஹாகும்பமேளா செல்லும் பொருட்டு மும்பையிலிருந்து கிளம்பி டெல்லி விமான நிலயத்தில் ப்ரயாக்ராஜ் செல்லும் விமானத்திற்காக காத்திருக்கையில் அங்கு மஹா கும்பமேளா யாத்திரையை முடித்துவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்த மைதிலி பிரசாத்தைச் சந்திக்க நேரும்போது தெரியவந்தது.
அவர்களது முயற்சியை இந்த மகளிர் தினத்தில் பகிருவது பொருத்தம் தானே.
கும்பமேளா சென்று வந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், தனது சகோதரி ராஜியின் கோலம் மூலம் என்கின்ற கோலத்துக்கு, மைதிலி, அந்த கோலத்தைப் பற்றிய தனது கருத்துகளை கோலம் மூலம் தரும் உள்கருத்து என்ன என்பதை இந்த படத்திற்கு கோலம் மூலம் - உள்நோக்கு என்று கருத்திட்டது போலேவே, இது மாதிரியான அவரது சகோதரி ராஜியின் கோலங்களுக்குத் தக்க கருத்து தலைப்பு கொடுத்து அதை சுருக்கமாக விவரித்து தங்களின் சுற்றம் நண்பர்கள் வட்டத்துக்குள் பகிர்ந்து கொள்வார்களாம்.
ராஜியும் மைதிலியும் கடந்த ஐந்து வருடங்களாக இந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்கு நமது விகடகவி வாசகர்களுக்காக மூன்று சாம்பிள்கள்.
சமீபத்தில் கடந்த சிவராத்திரி பற்றிய அவரது சகோதரி வரைந்த சிவலிங்க கோலத்திற்கு இவரது கருத்தை உள்நோக்காகப் பகிர்ந்துகொண்டார்.
இதோ அந்த கோலமும் உள்நோக்கமும் உங்கள் முன்னால்.
“மகா சிவராத்திரி, நமது உள்ளத்தைப் பற்றி சிந்திக்கவும், தியானிக்கவும், சிவபெருமானிடம் நமது பக்தியை ஆழப்படுத்தவும், ஆன்மீக வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்காக அவரது ஆசிகளைப் பெறவும் சிறந்த இரவு.
சிவன் ஒரு தங்க ஒளியைப் போல அற்புதமாகத் தோன்றுகிறார். விபூதியின் மூன்று கோடுகள் (புனித சாம்பல்) எதிர்மறை எண்ணங்கள் மற்றும் ஈகோவைத் தூய்மைப்படுத்துவதைக் குறிக்கின்றன, பொருள் உலகத்திலிருந்து பிரிந்து, உள் சுத்திகரிப்பில் ஈடுபட்டு, உயர்ந்த சக்திக்குச் செல்வதற்கான நிலையான நினைவூட்டலாகச் செயல்படுகின்றன. ருத்ராக்ஷம், சமந்தி, தாமரை, வில்வம், சம்பங்கி மற்றும் அழகான அலங்கார மாலைகள் சிவனை அலங்கரிக்கின்றன. சிவலிங்கத்திற்கு மேலே உள்ள பாம்பு போன்ற கிரீடம் சிவனின் சக்தி, அழியாமை, ஆன்மீக ஆற்றல் மற்றும் பாதுகாவலரின் பங்கை மிகச்சரியாக சித்தரிக்கிறது.
இந்த மங்களகரமான நாளில் இந்த கோலம் மூலம் சிவனைப் பார்ப்பது ஒரு பெரிய பாக்கியம்.”
இதுபோலே கடந்த ஜனவரி 26 நமது குடியரசு தினத்தையும், அப்போது நமது பாரதத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவையும் இணைத்து அவரது சகோதரி ராஜி கீழ்கண்ட கோலத்தைத் தீட்ட,
மைதிலி அதற்கு கோலம் மூலம் – ஆத்ம சுத்தி என்ற கருத்திட்டு விளக்கமளித்திருந்தார். அந்த கருத்து இதோ கீழே.
“இந்த அற்புதமான மகா கும்பக் கோலம் உலகின் தற்போதைய கவனம், இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் மகத்துவத்தின் அற்புதமான சித்தரிப்பு ஆகும். திரிவேணி சங்கமத்தில் பல்வேறு வாழ்க்கையின் பல் வேறு தரப்பட்ட நிலைகளைச் சேர்ந்த மக்கள் நீராடும் கலை விளக்கக்காட்சி நம்பிக்கை, பக்தி மற்றும் உள் சுத்திகரிப்புக்கான ஆழ்ந்த விருப்பத்தை அடையாளப்படுத்துகிறது. இந்த மகா கும்பத்தின் சிக்கலான வரைபடம் மற்றும் விரிவான அம்சங்கள் உண்மையிலேயே மனதைக் கவருகின்றன.
மூவர்ணக் கொடி விஸ்வகுரு பாரதத்தின் ஒற்றுமையையும் பெருமையையும் பிரதிபலிக்கிறது, அமைதியான நீல நிறத்தில் கங்கை, துடிப்பான பச்சை நிறத்தில் யமுனை, மற்றும் மண் பழுப்பு நிறத்தில் சரஸ்வதி, சங்கத்தை சரியாகக் குறிக்கின்றன. அழகான கூடார வீடுகள், மகா கும்பம் மற்றும் பின்னணியில் உள்ள கம்பீரமான கோயில் ஆகியவை இந்த வியக்கவைக்கும் காட்சியை நிறைவு செய்கின்றன.
கோலம் போடுவது அவரது சகோதரியாக இருக்கும், ஆனால் அதற்கு இவரது பொருத்தமான வாசகம் சேர்ந்து ஒரு ஸ்ட்ராங்க்கான காம்போ எஃப்ஃபெக்ட் கொடுப்பது தான் இங்கு ஹைலைட்.
“ஒவ்வொரு கோலத்திற்கும் வாசகம் மாறும் என்கிறார்” மைதிலி.
[மூக்கு கண்ணாடியில் ராஜராஜேஸ்வரி, அவரருகே மைதிலி]
இந்த முறை மார்கழி பக்தி மாதத்திற்கு பண்டரிபுர விட்டலனை முன்னிருத்தி அவனும் அவனது அத்யந்த பக்தர்கள், அவரது அபங்க் பாடல்கள் (அந்த கோலத்துடன் அந்த அபங்க் பாடலின் யூட்யூப் ஆடியோ/வீடியோ லிங்க்கையும் இணத்து) கோலங்கள் தீட்டப்பட அதற்குப் பொருத்தமாக கருத்தும் கூடவே இணத்திருந்தார்களாம்.
சென்ற 22 ஆம் நாள் மார்கழி கோலம், மத்தியில் ருக்குமாயீ சமேத விட்டலன் இருக்க கோலத்தின் பார்டரில் சிவலிங்கங்களாக இருக்க
அதற்கு கொடுக்கப்பட்ட தலைப்பு கோலம் மூலம் – தெய்வீக சங்கமம் என்று விவரித்திருந்தார்களாம். சைவமும் வைணவமும் ஐக்கியம். அன்று ஆருத்ரா தரிசனம்.
இது போன்று theamatic ஆக (கருப்பொருள் சார்ந்த) கணபதி என்கின்ற விநாயக சதுர்த்தியில் 11 தினங்கள், நவராத்திரியில் 9 தினங்களும், மார்கழியில் திருப்பாவைக்காக 30 தினங்களும் போன்ற சிறப்பு தினங்களுக்கும் அவர்களது கூட்டணி தன் கைவரிசையை காட்டியுள்ளது என்று பெருமிதப்படுகிறார்.
தங்களுக்குள் இருக்கும் மகிழ்ச்சியை இப்படி ஆக்கி ஆக்கமுற கொண்டாடி மகிழ்கிறார்கள் .
Leave a comment
Upload