தொடர்கள்
வலையங்கம்
மாணவர்களை கவனியுங்கள்

20250208075843238.jpeg

ஒரு பக்கம் விஞ்ஞான வளர்ச்சி டிஜிட்டல் உலகம் என்று நாம் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 41% இளைஞர்கள் அதுவும் பள்ளி கல்லூரி மாணவர்கள். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு கூட நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் ஒரு தற்கொலை நடந்திருக்கிறது. எங்கே மதிப்பெண்கள் குறைந்து விடுமோ தேர்வில் தோல்வியடைவோமோ என்ற பயத்தில் இந்த தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மாணவர்களுக்கு தேர்வு மட்டுமே கடைசி இலக்கு அல்ல என்பதை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் முதலில் அவர்களுக்கு புரியும்படி சொல்லித் தர வேண்டும். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று ஒன்று இருக்கிறது என்ற உண்மையை அவர்களுக்கு முக்கிய பாடமாக சொல்லிக் கொடுத்தால் கூட நல்லது.

மதிப்பெண் பற்றிய ஒரு புரிதல் மிக மிக அவசியம். அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற இந்த மாயத் தோற்றத்தை கைவிட நாம் முதலில் இந்த தலைமுறைக்கு சொல்லித் தர வேண்டும். அப்போதுதான் இந்த தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படும்.