தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250318131253568.jpeg

பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது எடப்பாடி பேட்டி.

அத்தைக்கு மீசை முதல்ல முளைக்கட்டும் !!

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா ? பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு.

அவரே கட்சியில தொடர்பில் இருக்கிறாரா ? என்ற விஷயமே அவருக்கு தெரியாது !!

பாஜக கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் யாரும் வருத்தம் அடையவில்லை நயினார் நாகேந்திரன் கருத்து.

ஆமாமா அண்ணாமலைக்குதான் நிறைய வருத்தம் !!

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது செல்வப் பெருந்தகை.

கரெக்ட் அவங்களும் உங்கள மாதிரி தான் !!

சமத்துவம் ஒன்றே நமது நோக்கம் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த சமத்துவம் கணக்கில் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வது வராது அப்படித்தானே தலைவரே !!

மாநில உரிமைகளை பாதுகாக்க நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

உயர்மட்ட குழு எண்ணிக்கை நூற்றை தாண்டி விடும் போல் தெரியுது !!

கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கும் செங்கோட்டையன்.

ஆமா இப்ப அவருக்கு ஒன்னும் வேலை இல்லையே !!

இமயமலைக்கு அண்ணாமலை பயணம்.

நீங்களுமா !!

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்திற்கான நீதி உதயநிதி ஸ்டாலின்.

இது ஏதோ சினிமா டயலாக் மாதிரி தெரியுது !!

ஆயிரம் ஆண்டு அழுக்கை அகற்றி சமூக நீதியை திமுக அரசு நிலைநாட்டும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

புதுசா ஏதாவது வாஷிங் மெஷின் வாங்கி இருப்பாரு !!

பாஜக இருக்கும் கூட்டணி தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள் செல்வப் பெருந்தகை.

வாங்குன காசுக்கு கூவி தானே ஆகணும் !!