தொடர்கள்
அரசியல்
மீண்டும் மிஸ்டர் ரீல் - முதலமைச்சருடன் ஒரு சந்திப்பு.

20250319054239256.jpg

மிஸ்டர் ரீல் முதல்வரை அவரது வீட்டில் போய் பார்க்க போனபோது "அமைச்சரவை கூட்டத்திற்கு பொன்முடிக்கு லீவு கொடுத்து வரவிடாமல் செய்ய வேண்டியது தானே பாருங்கள் அவரைப் பார்த்தவுடன் உங்களுக்கு பிபி எகிரி விட்டது "என்று திருமதி முதல்வர் சொன்னார். கூடவே டாக்டர் முதல்வர் பொறுப்பை உதயாவிடம் தந்து விடுங்கள் கட்சிப் பொறுப்பை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று பிரிஸ்கிரிப்ஷன்லையே எழுதி கொடுத்தார் நீங்கள் தான் அவர் பேச்சைக் கேட்கவில்லை "வருத்தப்பட்டார் திருமதி.

உடனே மிஸ்டர் ரீல் "இப்படியெல்லாம் பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுக்கும் டாக்டர் பெயர் என்ன ?" என்று ஆர்வத்துடன் திருமதி முதல்வரிடம் கேட்க "அவர் ஆழ்வார்பேட்டையில் ரொம்ப பிரபலம் அந்த டாக்டர் பேர் துர்கா என்று சொல்ல "உடனே மிஸ்டர் ரீல் துர்கா என்று ஒரு முறை சொல்லிவிட்டு திருமதியைப் பார்க்க உடனே முதல்வர் "இவங்கதான் அந்த டாக்டர்" என்று சொல்லி சிரித்து உதயா அவங்க அம்மாவ டியூன் பண்ணி விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறார். நான் கேட்டால் அப்படியெல்லாம் இல்லை அப்பா என்று என்னிடம் நடிக்கிறார் அவர் நடிப்புதான் ஊரந்ததே என்றார் முதல்வர் .

20250319054239256.jpg

மிஸ்டர் ரீல் உடனே முதல்வரிடம் பொன்முடியின் கட்சி பொறுப்பை காலி செய்தீர்கள் அமைச்சர் பதவியில் இருந்து அவருக்கு எப்போது கல்தா"என்று கேட்க "ஏற்கனவே ஆளுநர் பொன்முடி மேல் ரொம்பவும் காண்டாக இருக்கிறார். அவர் சந்தோஷப்பட கூடாது என்று யோசிக்கிறேன் " என்று முதல்வர் சொல்ல அப்ப இப்போதைக்கு பொன்முடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லுங்கள் என்று மிஸ்டர் ரீல் கேட்க 'நீதிமன்றம் என்ன சொல்வது என்று பார்க்க வேண்டும் "முதல்வர் அலுத்துக் கொண்டார்.

"கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களே "என்று மிஸ்டர் ரீல் கேட்க ஆட்சியில் பங்கு கேட்பவர்களுக்கு தொகுதி பங்கிட்டின் போது பேச்சுவார்த்தைக்கு கூப்பிடாம கொஞ்சம் பயம் காட்டினால் பயந்து போய் விடுவார்கள் அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை "என்றார் முதல்வர்.

20250319054239256.jpg

"சரி விஜய் சமாளிக்க என்ன பண்ண போகிறீர்கள் ?"என்று மிஸ்டர் ரீல் கேட்க "அதுதான் யோசிக்க வேண்டி இருக்கிறது சென்ற தேர்தலின் போது ரஜினி குடைச்சல் தந்தார் அவரை ஒரு மாதிரி சரி கட்டினோம். இவர் அப்படியே நம்ம பார்முலாவை காப்பி அடிச்சு அரசியல் செய்கிறார் அதான் என்ன செய்வது என்று யோசிக்கிறேன் என்றவர் மீண்டும் எங்கள் ஆட்சி தான் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை" என்றார்.

`"அதற்கு என்ன ஃபார்முலா வைத்திருக்கிறீர்கள் ?என்று மிஸ்டர் ரீல் கேட்ட பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அண்ணன் அழகிரி வந்தார் அவரிடம் இது பற்றி பேசிய போது தேர்தல் விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் வாக்காளர்களை எப்படி குளிப்பாட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும் அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடு என்று சொல்லிவிட்டார் "என்றார் முதல்வர்.

20250319054239256.jpg

` அழகிரி ஃபார்முலாவே தனியாச்சே ஏதாவது ரெண்டு மூணு டிப்ஸ் தந்திருப்பாரே அதை சொல்றது "என்று நைசாக மிஸ்டர் ரீல் அதற்கு முதல்வர் சொல்றேன். அதை எதிர்த் தரப்பில் போட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு சொன்னார். விஜயின் ஜனநாயகன் படம் உரிமையை ஏற்கனவே அண்ணன் பினாமி பெயரில் வாங்கி விட்டார். அந்தப் படம் திரையிடும் போது நடு நடுவே நல்லாட்சி நாயகன் திட்டங்கள் என்று விளம்பரங்கள் ஒவ்வொரு ரீலுக்கும் இடையே இரண்டு ரீல் திரையிடப்படும். ரசிகர்கள் பொறுமை இழந்து விஜய் வாக்கு வங்கி திமுக வாக்கு வங்கியாக மாறிவிடும். அதேபோல் இந்த தீபாவளி பொங்கல் என்று முதல்வர் ஆரம்பிக்க ரேஷன் கடையில் இலவச வேட்டி புடவை தரப் போகிறீர்களாக்கும் என்று மிஸ்டர் ரீல் சொல்ல முதல்வர் அதுதான் இல்லை மகளிர்க்கு 5000 ரூபாய்க்கு கூப்பன் வழங்கப்படும். அவர்களுக்கு பிடித்த புடவை கடையில் போய் அவர்களுக்கு பிடித்தமான புடவைகளை வாங்கிக் கொள்ளலாம். அதேபோல் இன்னொரு ஐயாயிரம் ரூபாய் டோக்கன் தரப்படும். பிடித்தமான நகை கடையில் போய் ஏதாவது வாங்கிக் கொள்ளலாம். இது தவிர மார்வாடி கடையில் வைத்த எல்லா நகைகளையும் நாங்களே மீட்டுத் தரும் திட்டம் கடன் அட்டை பைசல் இப்படி ஒரு வாக்குக்கு ஒரு லட்சம் வரை என்று ஒரு திட்டம் இருக்கிறது. எனவே முதல்வர் பதவி எல்லாம் எனக்கு ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. அஞ்சாநெஞ்சன் அழகிரி இருக்க எனக்கென்ன மனக்கவலை என்றார்முதல்வர். எது எப்படியோ இந்த ஆண்டு தீபாவளி அடுத்த ஆண்டு பொங்கல் ஆண்கள் கடனுக்கென்று எங்கும் அலைய தேவையில்லை.

அஞ்சாநெஞ்சன் அழகிரி போற்றி போற்றி போற்றி என்றபடி புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.