சென்னையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் சொன்னார்…
சென்னையில் இப்போது எங்கும் சிசிடிவி கேமராக்கள் அதிகம் இருப்பதால் செயின் பறிப்பு திருட்டை விட நவீன முறையில் புதிய திருடு அதிகமாகி உள்ளது.சாலை ஓரங்களில் அல்லது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளை நவீன முறையில் திருடி செல்கின்றனர்.
பூட்டப்பட்ட பைக்கின் மேல் அமரும் திருடன் தன் காலால் போர்க் -லாக் செய்திருக்கும் வண்டியின் ஹேண்டில் பார் மீது தன் காலை வைத்து ஒரு அழுத்து அழுத்தியதும் போர்க்- லாக் விநாடிகளில் உடைந்து விடும் .
பைக் சாவி போடும் இடத்திற்கு கீழ் இருக்கும் வயர்களை பிரித்து இணைத்து வண்டியை ஸ்டார்ட் செய்து எடுத்து சென்று விடுகிறார்கள் .
இதற்கென்றே சென்னையில் இருக்கும் வண்டி வாகனங்களை பிரித்து விற்பவர்கள் திருடி வந்த வண்டிக்கு ரூ 5000 கொடுத்து வண்டியை வாங்கி கொள்கின்றனர். வண்டியின் இஞ்ஜின் நம்பரை அழித்து புதியதாக வேறு நம்பர் போட்டு ரூ15-25 ஆயிரம் வரைக்கும் விற்றுவிடுகின்றனர்.
திருடப்பட்ட புதிய பைக்காக இருந்தால் அதன் பாகங்களை பிரித்து தனித்தனியாக சென்னையில் விற்று கிட்டதட்ட புதிய பைக் விலைக்கு அதன் பாகங்களை விற்று பணம் சம்பாதிக்கும் கும்பலும் இருக்கிறது.
சென்னையில் தற்போது ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்குள் , ஒரு பைக் 20 முதல் 30 செகண்ட் நேரத்தில் திருடப்படுகிறது . வருடம் தோறும் தோராயமாக 2600 பைக்குகள் திருடுப்போகிறது .
இதில் நான்கில் ஒரு பாகம் மட்டும் மீண்டும் பைக் கைப்பற்றப்படுகிறது என காவல்துறை அறிக்கை சொல்கிறது.வழக்கு பதியாமல் நிறைய பேர் சென்று விடுவதால் எண்ணிக்கை கூடுகிறது.
திருடப்பட்ட பைக்கிற்கு இன்சூரன்ஸ் இருந்தால் காவல்துறை 90 நாட்கள் தேடி கிடைக்கவில்லை என்று சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் வாகனத்திற்கான பணம் பைக் பறிக்கொடுத்த நபருக்கு வருகிறது.
நவீன பைக்குகளில் ஜிபிஎஸ் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து பைக்குகளும் ஜிபிஎஸ் கருவிகள் பைக் உரிமையாளர்கள் பொருத்தி கொள்ள வேண்டும் காவல்துறை அறிவுறுத்துகிறது.
சென்னையில் தற்போது ஒரு சவரன் விலை ரூ.71000,தற்போது சாதாரண பைக் விலை ரூ85,000 இருந்து 3 லட்சம் வரை இருக்கிறது.
செயின் பறிப்பை விட பைக் திருடுவதில் அதிக லாபம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் காவல்துறை சிசிடிவி காமிரா கண்ணில் மிளகாய் பொடி தூவி விட்டு பைக் லபாக் செய்து திருடர்கள் ஜாலியாக சென்னையை சுற்றி வருவது லேட்டஸ்ட் டிராண்டாக உள்ளது.
Leave a comment
Upload