ஏசுவின் மிக பெரிய படுகொலைக்கு பின் ஏசு உயிர்பெற்ற சந்தோஷத்தை நாற்பது நாள் நோன்புக்கு பின் கொண்டாடும் ஒரு பண்டிகை தான் ஈஸ்டர் திருவிழா .
சாம்பல் புதனில் இருந்து துவங்கும் தவ காலம் முழுவதும் ஏசுவின் மிக மோசமான பாடுகளை நினைவுகூர்ந்து தவம் கடைப்பிடிக்க படுகிறது .
கடந்த வருடத்தின் காய்ந்த குருத்தோலைகள் எரித்து அந்த சாம்பலை புனித படுத்தி ' மனிதா மண்ணில் இருந்து வந்தாய் மண்ணுக்கே திரும்பி போவாய் ' என்று கூறி சாம்பலை நெற்றியில் பூசுவார்கள் குருக்கள் .
அந்த நாளில் இருந்து சிலுவை பாதையில் ஏசுவின் பாடுகளான 14 நிலைகளை நினைவுகூர்ந்து தியானித்து ஜெபித்து வருகின்றனர் .
முக்கியமாக வெள்ளிக்கிழமைகளில் உபவாசம் சிலுவை பாதை என்று தவம் தொடர்ந்தது.
14 ஆலயங்களுக்கு யாத்திரையாக சென்று வருவது .
மேலும் பரிகார பவனிகள் தபசு காலத்தின் ஐந்தாவது ஞாயிற்று கிழமை நடந்தது . சிலுவையை சுமந்தும் ஏசுவைபோல ஒருவர் சிலுவையை சுமந்து சென்றது அனைவரின் இதயத்தை தொட்டது .
கேரளாவில் உள்ள மலையற்றூரில் குருசுமலைக்கு சென்று அங்கு ஏசுவின் சிலுவை பாதையை நினைவு கூர்ந்து அங்குள்ள சிலுவையை தரிசித்து வருகிறார்கள் ஏராளமான கிறிஸ்தவர்கள் .
பெரிய சிலுவையை சுமந்து ஏசுவின் பாடுகளை நினைவுகூர்ந்து
குருசுமலையை ஏறி இறங்கி வருகிறார்கள்.
ஏராளமான இறைபக்தர்கள் .
" புனித புதன் அதிகாலை 1 மணிக்கு சிலுவைப்பாதையாக குருசுமலைமேல் ஏறிச்சென்று மீண்டும் விடியற்காலை 3 மணிக்கு திரும்பிவர அந்த இரவில் சிலுவையை சுமந்து சிலுவை பாதை பிராத்தனை செய்துகொண்டு நடந்து சென்றது அனைவரின் மனதில் ஏசுவின் பாடுகள் தான் பிரதிபலித்துக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது .
புனித தாமஸ் 15 ஆம் நூற்றாண்டில் எப்படி இந்த மலைமேல் ஏறிச்சென்றிருப்பார் என்று யோசிக்க வைத்தது என்கிறார் பெங்களூரை சேர்ந்த டொமினிக் ராஜேஷ் .
முக்கியமாக எல்லா ஆலயங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் உபவாசம் மற்றும் சிலுவை பாதையை செய்து முடித்தனர் .
ஈஸ்டர் திருவிழாவுக்கு முன் வியாழக்கிழமை வருடந்தோறும் ஆலயங்களில் உபயோகிக்கும் வாசனை எண்ணெய்கள் புனித படுத்தும் நிகழ்வு நடப்பது வழக்கம் .
உலகமுழுவதும் உள்ள அனைத்து மறைமாவட்ட ஆயர்கள் குருக்களுடன் இணைந்து ஞானஸ்தானம் , உறுதிப்பூசுதல் மற்றும் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவரை மந்திரித்து பூசும் எண்ணையை புனித படுத்தும் நிகழ்வு திருப்பலி 'கிரிஸ்மா மாஸ் ' சிறப்பிக்கப்படுவது வழக்கம் .
ஈஸ்டருக்கு முந்தின ஞாயிற்று கிழமை எல்லா ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்பிக்க படும் .
ஏசுவை கழுதையில் ஏற்றி குருத்தோலையை புனித படுத்தி கையில் ஏந்தி ' தாவீது மகனுக்கு ஓசன்னா ' என்று பாடி பவனியாக செல்வது ஒரு வைபவம் .
லண்டன் செயின்ட் பால் கத்தீட்ரலில் கழுதையுடன் குருத்தோலை பவனி நடந்தது ஆச்சிரியமான ஒன்று என்கிறார் லண்டன் வாழ் இந்தியர் மரியா !.
குருத்தோலை ஞாயிற்று கிழமையில் இருந்து ஈஸ்டர் ஞாயிற்று கிழமைவரை புனித வாரம் என்றழைக்க படுகிறது .
புனித புதன் கிழமை ஸ்பை புதன் ( Spy Wednesday ) என்றழைக்கப்படுகிறது
இந்த புதன் கிழமை தான் முப்பது வெள்ளிக்காசுகளுக்கு யூதாஸ் ஏசுவை காட்டிக்கொடுத்த நாள் என்பதை பைபிள் குறிப்பிடுகிறது .
புனித வியாழன் மிக முக்கிய நாளாக கடைபிடிக்க படுகிறது .
அன்று மாலை 6.30 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும் அந்த நாள் மாலை தான் ஏசு தன் பன்னிரெண்டு சீடர்களுடன் அமர்ந்து அவர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு தாழ்ச்சியை வெளிப்படுத்தினார் .
அதன் பின் கடைசி இராவுணவை பகிர்ந்து கொண்டு சிலுவை பாடுகளுக்கு தயாரானார் .
அந்த நாளில் தான் குருத்துவத்தை துவக்கிவைத்தார் ஏசு .
உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ குருமார்களுக்கும் அந்த நாள் சிறப்பான நாள்.
ஏசு கெத்சமனி தோட்டத்தில் தனக்கு வர போகும் துன்பங்கள் குறித்து யோசித்து ரத்தவேர்வை சிந்தினார் .பின்னர் இரவு முழுவதும் விசாரணை சாட்டையடி என்று துன்பப்பட்டதை நினைவுகூர்ந்து வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை பகல் மூன்றுமணிவரை திவ்யநற்கருணை ஆராதனை செய்து வருவது இன்று வரை தொடரும் ஒரு சிறந்த வழிபாடு .
ஏசுவின் இறப்பு நாள் தான் Good Friday என்று அனுசரிக்க படுகிறது .
அன்று முழுவதும் துக்கம் அனுசரித்து மாலை மூன்று மணிக்கு ஏசு உயிர்பிரிந்த நேரம் உடல் அடக்கம் நினைவு கூறப்பட்டு ஒரு அமைதி நிலவும் சனிக்கிழமை முழுவதும் .
சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆலயங்கள் இருட்டில் இருக்க ஆலய முற்றத்தில் புதிய நெருப்பு புனித படுத்தப்பட்டு பெரிய பாஸ்கா கேண்டில் புதுப்பிக்க பட்டு அதில் குருவானவர் ஆல்பா ஓமேகா அதாவது முதலும் முடிவும் நானே என்று எழுதி புதிய ஒளியை ஏற்றி வைத்து இரவு 12 மணிக்கு ஏசுவின் உயிர்ப்பு கொண்டாடப்படுகிறது .
அந்த இரவில் தான் பாஸ்கா கேண்டிலை வாளிகளில் நிரப்பிய நீரில் மூழ்கவைத்து நீர் புனிதப்படுத்த பட்டு அனைவரின் மேலும் தெளிக்க படுவது வழக்கம் .
ஈஸ்டர் திருவிழா ஏசுவின் உயிர்ப்பு மற்றும் வசந்த காலத்தின் துவக்கமாக கொண்டடப்படுகிறது .
ஊட்டியில் உள்ள தென்னகத்தின் கல்வாரி குருசடியின் அதிபர் ஜெயக்குமார் கூறும்போது ,
" ஆண்டவரின் பாடுகளை தியானிக்கும் காலம் விபூதி புதனன்று துவங்கி அருளின் காலமாக சிறப்பாக முடிந்தது . சிலுவைபாதையுடன் நம் வாழ்வின் பாதையை ஒப்புக்கொடுத்து ஏசுவோடு இணைந்து பயணித்த காலங்கள் அருளின் ஆசீர்வாத காலம் .ஏசுவின் துன்பங்கள் நம் துன்பங்கள் அவர் நம்மோடு இருந்ததை உணர்ந்தோம் .
கிறிஸ்துமஸ் திருவிழாவை டிசம்பர் 25 சிறப்பிப்போம் ஆனால் ஈஸ்டர் தேதி மாதம் மாறிவரும் .
ஆங்கிலத்தில் spring equonox வசந்த உத்தராயணம் என்பது சம இரவு நாள் ஆகும் .
இந்த நாளில் சூரியன் பூமத்திய ரேகையை கடந்து செல்லும் இதனால் இரவும் பகலும் சமமாக இருக்கும் .இது பூமியின் அச்சு சூரியனை நோக்கி சாய்ந்திருக்காத நாள் .உலகம் முழுவதும் பகலும் இரவும் ஏறத்தாழ சமமாக இருக்கும் .மார்ச் 20 அல்லது 21 ஆம் தேதி இரவும் பகலும் சமமாக இருக்கும் ஒரு நிகழ்வு துவங்கி 'சம இரவு நாளாக வரும் ' அந்த ஞாயிற்று கிழமை தான் ஈஸ்டர் திருவிழா கொண்டாடப்படுகிறது .
வசந்த காலம் துவக்கமும் ஏசுவின் உயிர்ப்பும் சமமாக அமைந்துள்ளது ". என்று கூறினார் .
ஒரு தனி மனிதனை எந்த குற்றமும் இல்லாமல் அடித்து துன்புறுத்தி சிலுவையில் அறைந்து கொலைசெய்தனர் யூதர்கள் .
இறந்து மூன்றாம் நாள் அதிகாலை உயிர்த்தெழுந்தார் ஏசு அவரின் உயிர்ப்பு இனிமையான வசந்த காலமாக திகழ்ந்தது .
ஈஸ்டர் ஒரு அதிசயமான உயிர்ப்பு திருவிழா
Leave a comment
Upload