தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஆபாச அமைச்சர் - விழித்துக் கொண்ட நீதிமன்றம் - விகடகவியார்

20250319064508517.jpg

20250319064609404.jpeg

அமைச்சர் பொன்முடி சர்ச்சை இரண்டுமே பிரியா நண்பர்கள். அப்படித்தான் பொன்முடி நடவடிக்கை இன்று வரை இருக்கிறது.

திருவாரூர் தங்கராசு பெரியாரின் உண்மை தொண்டன் பெரியாருக்கு பிறகு வீரமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திராவிடர் கழகத்திலிருந்து விலகியவர். நல்ல பேச்சாளர்.

அவரது நூற்றாண்டு விழாவில் தான் வனத்துறை அமைச்சர் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஒரு விலைமாது வீட்டில் ஒருவருக்கு நடந்த அனுபவத்தை சைவ வைணவ சமயங்களில் குறியீடுகளான நாமம் மற்றும் விபூதி பட்டையை குறிப்பிட்டு மதத்தை இழிவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணினத்தையும் இழிவுபடுத்தும் அளவுக்கு சிரித்தபடியே வெளிப்படையாக ஆபாசமாக பேசினார் பொன்முடி. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான உடனே பொன்முடியை கண்டித்து பலர் கருத்து தெரிவித்தார்கள். இதில் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியும் ஒருவர். இந்த விஷயம் பெரிய அளவு பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து கடந்த 11-ஆம் தேதி பொன்முடியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்தப் பதவியில் திருச்சி சிவாவை நியமித்தார்.

ஆனாலும் இன்று வரை பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. பொன்முடி உள்பட மூன்று அமைச்சர்கள் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பேரவைத் தலைவர் விவாதத்திற்கு அனுமதிக்க மறுத்து கருத்து சொன்னதை தொடர்ந்து பேரவை தலைவரின் இந்த முடிவை கண்டித்து அதிமுக தொடர்ந்து வெளிநடப்பு செய்து வருகிறது. இது தவிர பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி போராட்டம் நடத்தி வருகிறது. வைணவ சைவ மதப் பற்றாளர்களும் திமுகவையும் பொன்முடியையும் தினந்தோறும் கண்டித்து கருத்து சொல்கிறார்கள்.

இதன் நடுவே பொன்முடி முதல்வரை சந்தித்து அவசரப்பட்டு பேசி விட்டேன் மன்னிக்கவும் என்று மன்னிப்பு எல்லாம் கேட்டுக் கொண்டாலும் முதல்வருக்கு பொன்முடி மீதான கோபம் இன்னும் தீர்ந்த பாடில்லை. .இதனால் சட்டசபைக்கு மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு வராமல் பொன்முடி தவிர்த்தார்.

இந்த நிலையில்தான் அமைச்சர் பொன்முடி மீதுதான சொத்து வழக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடியின் ஆபாச பேச்சை சுட்டி காட்டிய நீதிபதி "வில்லை விட்டுப் புறப்பட்ட அம்பு போல் பொன்முடியின் பேச்சு பரவலாக எல்லோரையும் சென்று விட்டது. அவர் மன்னிப்பு கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. அதே சமயம் அரசாங்கம் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவர் பேசிய பேச்சை வேறு யாராவது பேசியிருந்தால் குறைந்தபட்சம் 50 வழக்காவது பதிவாகி இருக்கும் "நீதிபதி கோபமாகவே தனது கருத்தை பதிவு செய்தார்.

தமிழக ஊடகங்களும் கப்சிப் அமைதி காக்கின்றன.

தமிழக அரசு சார்பில் பொன்முடி பேசியதுதொடர்பாக ஐந்து புகார்கள் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என பதில் சொன்னார்கள். அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரே குற்றத்திற்காக பொன்முடி மீது பல எஃப் ஐ ஆர்கள் தேவையில்லை. இந்த வழக்கை நீர்த்துப் போகத்தான் வழி செய்யும். இதுவரை பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை என்றால் நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை தொனியில்பேசினார் நீதிபதி.

ஆபாச பேச்சு விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் பொன்முடி மீது வழக்குப் பதிவு கைது அமைச்சர் பதவி பறிப்பு என்று நடவடிக்கை தீவிரமாகும் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.

திமுக என்ன செய்ய போகிறது ??

வழக்கம் போல் இதையும் தாமதப்படுத்தி மக்களை மறக்கச் செய்து இன்னொரு புதிய அக்கப்போர் வரும் வரை காத்திருக்கும் !! வேறென்ன ??