1.மாஸ் ரெக்கார்டு
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் 100 சிக்ஸர்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா சாதித்திருக்கிறார்.அவர் இதுவரை 102 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.
2. பி சி சி ஐ எச்சரிக்கிறது
ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், வீரர்களை மோசடி வலையில் வீழ்த்த முயற்சிப்பதாக பிசிசிஐ எச்சரிக்கை செய்திருக்கிறது. விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட மோசடி செயல்களை செய்ய இந்த தொழிலதிபர் தூண்டுகிறார் விழிப்புடன் இருங்கள் என்று ஐபிஎல் அணிகளை உஷார் படுத்தி அறிவுரை செய்திருக்கிறது கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்.
3.பேட் சோதனை
இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் நடுவர்கள் வீரர்களின் பேட்டை சோதனை செய்யும் விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வீரர்களை எரிச்சலடைய செய்கிறது. மட்டையை ஒப்பனை அறையிலேயே வந்து நடுவர் சோதனை செய்து விளையாட அனுமதிக்கலாமே ஆட்ட களத்தில் வந்து பேட் மாற்றுங்கள் என்று சொல்வது வீரர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது என்று புகார் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.
4.ரோபோ நாய்க்குட்டி
ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர்கள் பவுண்டிரிகளை. தாண்டி மைதானத்தில் உலாவும் ரோபோ நாய்க்குட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த ரோபோவில் கேமரா இருக்கிறது அந்த கேமரா புது புது விதமான கோணத்தில் காட்சிகளை படம் பிடித்து அனுப்புகிறது. இந்த ரோபோவால் ஓடவும் முடியும் குதிக்கவும் முடியும் .இந்த ரோபோ ரசிகர்களை மட்டுமல்லாமல் வீரர்களையும் கவர்ந்திருக்கிறது.
5.முதல் ஹாட்ரிக் ரன் அவுட்
இந்த வாரம் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வீரர்கள் ஆஷிதோஷ், குல்தீப் மற்றும் மோஷித் ஷர்மா அடுத்து அடுத்து மூன்று பந்துகளில் ரன் அவுட் ஆனார்கள்.ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் ரன் அவுட் இதுவே முதல் தடவை.
6.கடப்பாறை அணி
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ்அணியை அசைக்க முடியாத அளவுக்கு சாதனை செய்து நிலைத்து நிற்பதால் அதை கடப்பாறை அணி என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
Leave a comment
Upload