தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் 18 : வாரம் 4 – பால்கி

20250318190211122.jpg

தல தோனிக்கு வந்த நெருக்கடியென்று போன வாரம் அலசியிருந்தேன்.

நெருக்கடி தோனிக்கு அல்ல, அதாவது, தோனிக்கு மட்டுமில்ல, சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கும் தான். தன் நெஞ்சினினிலே பச்சைக்குத்திக்கொண்ட சென்னை ரசிகர்களுக்கும்தான்.

11 ஆம் ஏப்ரல் அன்று இந்த ஐபிஎல்லின் 25 ஆவது மேட்ச். சென்னைக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே இருந்ததும். யார் யாருக்கு விட்டுக்கொடுக்கிறார்களோ. பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள், நான் தவறா என்று கேட்டிருந்தேன். ருத்துராஜ் இனி ஐபிஎல்லில் உடல் காயம் (மட்டுமா?) காரணமாக ஆடமுடியாமல் விலக தல மீண்டும் கேப்டன் ஆனார். தொடர்ந்து நாலு மேட்ச்சில் செம ஒதை, எப்படி ஆடணும்னே சிங்கம் சென்னை டீம் மறந்துட்ட மாதிரி இருந்தது.

அந்த ட்ரெண்டே இந்த மேட்ச்சிலேயும் தொடர்ந்தது. கேப்(CAP)பை போட்டுக்கொண்டவுடன் ஜெயிச்சிடமுடியுமா தலக்கு?. அணிகளுக்கிடையேயான பாயிண்ட்ஸ் டேபிள்ள கடைசீ இடத்தில் ஐந்துக்கு ஒன்று என்று இருந்த வெற்றி சமன்பாடு (equation) ஆறுக்கு ஒன்று என்று பின்னேறியது.

வடிவேலு ஜோக் இந்த மேட்சுக்கு ஏற்றார்போலே

20250318203952810.png

அந்த சம்பாஷணை இதோ:

ருதுராஜ், வடிவேலு ஸ்டைலில்

RCB, RR, DC னு மூன்று டீம்மா.. அவங்களால எங்கள எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு வச்சு செஞ்சானுங்க. செஞ்சிட்டு ஒரு கார்கோ பிளைட்ல ஏத்திவிட்டானுங்க. சரி எங்கள சென்னைக்குத் தான் அனுப்புறாங்களோனு நம்ம்ம்....பி ஏறி உக்காந்தோம்.. அது நேரா சண்டிகாருக்குப் போச்சு.. அங்க PBKS டீம்ல 11 சின்ன பசங்கமா.. 20 over மூச்சு திணற திணற எங்கள அடிச்சானுங்க.. சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டோம்..

விட்டுட்டீங்களா? திருப்பி அடிக்கல?

இல்ல..

ஏன்?

அடிக்கும் போது ஒரு uncapped player சொன்னான்.. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்கடா இந்த முட்டி செத்த பயலுக.. Fair Play Listல முதல் இடத்தில இருக்கான்கடா.. இவன்க ரொம்ப நல்லவ...அன்கன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாம்மா!!!

மறுநாள், விகடகவி மீட்டுக்கு சென்னை வந்திருந்த இடத்தில் சென்னைக்கே பச்சை குத்திக் கொண்டவர் ஒருவர், “பேசாம மீதி மேட்சுங்கள ஆடி தோத்து மானம் போறத விட வாக் ஓவர் குட்த்துட்டா செலவும் மிச்சம். அப்பிடி சேர்ர பணமே ஐபிஎல் ப்ரைஸ்னு வெச்சி…அவருக்கு துக்கம் தாள முடியல்ல. கேட்டுக்கொண்டிருந்தவருக்கு…..அத விட முடியல்ல. என்ற சம்பாஷணை கேட்கும்படியாயிருந்தது பேரிடி தான்.

இத விட சென்னை டீமுக்கு வந்த இந்த நிலையைப்பாத்து கலாய்ப்பு வீடியோக்கள் தான் இன்னும் வெந்த புண்ல வேலப்பாய்ச்சுன மாதிரி இருந்தது.

இன்னும் தோனி தான் ஆடணும்னா இந்த வீடியோவைப் பாருங்க.

என்ன சொந்தங்களே, உங்களுக்கும் தானே.

கொஞ்சம் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

சூப்பர் ஓவர்

டெல்லியோடு ராஜஸ்தான் டீம் லட்டா கெலிச்சிருக்க வேண்டிய மேட்ச். ராஜஸ்தான் பௌலிங்க்கில் அந்த கடைசி ஓவர் போடு என்று கொடுத்தால் சந்தீப் ஷர்மா ரெண்டு வைட் ஓவராக போட்டதே ஓவர் தான். அதே டெல்லியின் பௌல்ங்க்கில் இருபதாவது ஓவரை, இந்தா நீ போடு 9 ரன்னை எப்படி காப்பாயோ என்று கொடுத்தால், ஸ்டார்க் காலிலியே குத்தோ குத்துன்னு யார்க்கரா குத்தி எட்டு ரன்களே கொடுத்து மேட்ச்சை ஸ்கோர்ஸ் டை என்றாக்கி சூப்பரா சூப்பர் ஓவருக்கு கொண்டு போனார்.

20250318205927496.jpg

இந்த மாதிரி சூப்பர் ஓவரில் ஆடிய ராஜஸ்தான் அணி மூன்றில் இரண்டு முறை ஜெய்ச்சும் இருக்காங்க. அதே போல நான்கு மேட்ச்சில் மூன்றை வென்றிருக்கிறது டெல்லி. ஆக இரண்டுமே கடைசி பந்து ஆடும் வரை மேட்ச் முடிவதில்லை என்ற தோற்றத்தை நன்குணர்ந்தவர்கள் தான்.

ராஜஸ்தான் டீமில் ஏதோ கச முசா. அந்த் சூப்பர் ஓவரில் பேட்டிங்க் செய்ய யாரை அனுப்புவது என்ற டிஸ்கஷனில் கேப்டன் சஞ்சு சாம்சன் இல்லை என்பது பட்டவர்த்தனமாகவே மேட்ச் பார்த்தவர்களுக்குத் தெரிந்தது. சற்று முன் வரை 182 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அரை சதம் எடுத்த நிதிஷ் ராணாவை அனுப்பாமல் இருந்தது தவறு. சூப்பர் ஓவருக்குக்கொண்டு போன ஸ்டார்க்கே தொடர்ந்து அந்த சூப்பர் ஓவரை போட முதல் பந்து ரன் ஏதும் இல்லாமல் ஆரம்பித்தே இமாலய தவறு. மீதமுள்ள ஐந்து பந்துகளில் 11 ரன்கள் எடுக்க இரண்டு ரன் அவுட்களை பணயம் வைக்க வேண்டியிருந்தது. ஆரம்பப்பள்ளி பிராய தவறுகள் தான் அவை. விக்கெட்டுகளுக்கிடையே முயல் போன்று, ஏன் நம்ம தோனி போன்று ஓடக் கற்றுக்கொள்ளவேண்டும்.

தன்னுடைய சூபர் ஓவரில் 12 ரன்கள் இலக்கு என்று ஆட மிஸ்டர் நம்பிக்கை என்னும் கேஎல் ராஹுல் ஸ்டப்சுடன் களமிறங்க கடைசி வரை டென்ஷன் வேண்டாம் என்று ஒன்று என்னுமிடத்தில் முயலாக முயன்று இரண்டாக ஸ்கோரை ஆரம்பித்தார். அடுத்த பந்தில் பௌண்டரி அடித்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன்னை எடுத்து ஸ்டப்சிடம் பேட்டிங்க் கொடுக்க, சிக்சர் அடிக்க, தோற்றிருக்க வேண்டிய மேட்சை வெற்றியாக்கி பாயிண்ட்ஸ் டேபிளில் ஆறில் ஐந்து வெற்றிகள் கண்டு டெல்லி முதலிடம் பிடித்தது.

111 ரன்கள் ஒரு இலக்கா?

இதே வாரத்தில் 31ஆம் மேட்ச்சில் முதலில் ஆடிய பஞ்சாப் வெறும் 111 ரன்கள் எடுத்தது ஐபிஎல்லின் சரித்திரத்தில் நான்காவது குறைந்த இலக்காகும். முதல் எட்டு ஓவரில் 72/3 என்றிருந்த நிலை அடுத்த 42 பந்துகளில் 23 ரன்களே முக்கி முக்கி எடுத்த கொல்கத்தா 95ல் சுருண்டு தோல்வி கண்டது. அவுட்டே ஆகவில்லை ஆனால் அம்பயரின் அவுட் நிர்ணயத்திற்கு கைய்யில் DRS எனும் வரம் இருந்தும். அஜிங்க்ய ரஹானே பெருந்தன்மையாக அம்பையருடன் எதற்கு மோதல்? என்று விட்டது அவருக்கு எதிரியாகிவிட்டது. பஞ்சாபின் தலைமை கோச், ரிக்கி பாண்டிங்க், அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரிடம், “யப்பா! எனுக்கு வயிசு அம்பதாவுது, இந்த மாறியான டென்ஷன் ஆன மேட்ச் வாணாம்பா” இருதய துடிப்பு இன்னும் நிக்கலபா” என்று கட்டி பிடித்துக்கொண்டிருக்கிறார்.

20250318210201339.jpg

ஐபிஎல் கப் ஜெயிச்சா தான் நீ ஒரு கிரேட் கோச் என்று சொல்லிக்கலாம் என்ற பஞ்ச் லைன் தான் கோச்சிங்க்கிலேயிருந்தும் மூன்றாண்டுகளாய் வெறுமனே இருந்த ஆஸ்த்ரேலியாவின் சூப்பர் கோச் ஜஸ்டின் லேங்கரை லக்னௌ டீமுக்கு கோச்சாக இழுத்திருக்கிறது. இழுத்தவர் அந்த அணியின் முதலாளி சஞ்ஜிவ் கோயங்கா தான்.

20250318210429216.jpg

இந்த பிட்ச் என்னோடது என்று பெங்களூருவை பெங்களூரிலேயே தோற்கடித்த டெல்லியின் 93 நாட் அவுட் அடித்த கேஎல் ராஹுல் வெற்றி கொண்டாட்டமாக நடு பிட்ச்சில் ஒரு வட்டம் போட்டு அதன் நடுவில் பேட்டால் ஒரு குத்து குத்தி நெஞ்சில் கையால் குத்திக் காண்பித்தது கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சை உலுக்கியது.

20250318211636195.jpg

வானியற்பியல் (astrophysics) துறையில் முனைவர் பெற்ற ஆவிஷ்கார் சால்வி தான் கிரிகெட்டர்களிலேயே அதிகம் படித்த ஆட்டக்காரர். இவர் இன்றைய டெல்லி கேபிடல்ஸின் முந்தைய அவதாரமான டெல்லி டேர்டெவில்ஸில் 2009, 2011 சீசனில் ஆடியிருக்கிறர்.

கொஞ்சம் வரலாறு

ஐபிஎல் தோன்றிய வரலாறு.

20250318211712216.jpg

2007 தென்னாஃப்ரிக்காவின் ஜோஹனஸ்பர்க்கில் நடந்த T20 முதல் உலக கோப்பையை இந்தியா வெல்ல ஐபிஎல் ஐடியா உருவானது. இறுதி போட்டியில் ஈசியா ஜெயிச்சிருக்க வேண்டிய பாகிஸ்தான் அதன் கேப்டன் மிஸ்பாஉல்ஹக்கின் ஸ்கூப் ஷாட்டை ஸ்ரீஷாந்த் முதல் முயற்சியில் பிடிக்கத்தவறி கீழே விழ இருந்த பந்தை தரையில் விழுவதற்கு முன் பிடிக்க இரண்டு சரித்திர நிகழ்வுகள் துவங்கியது.

20250318211921292.jpg

[வெற்றி ஊர்வலம்]

முதலாமவது, பரம வைரி பாகிஸ்தானிடம் இரண்டு மேட்ச்சுகளிலும் வெற்றி பெற்று கப்பை வென்றது. இரண்டாவதாக, அந்த நிகழ்வு தான் பின்னாளில் உருவாகி இன்று உலகின் பணக்கார ஆட்டமான ஐபிஎல் உருவாகக் காரணம்.

2008ல் முதல் ஐபிஎல் சீசன் ஆரம்பித்து இன்று 18 ஆவது சீசன் நடக்கிறது.

அடுத்த வாரமும் தொடர்வோம்.