தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை - செம்மீசை கொண்டைக்குருவி  -ப ஒப்பிலி பட உதவி K V R K திருநாரணன்

20250319062123638.jpeg

மைனாவின் அளவில் உள்ள சிறிய பறவை இந்த செம்மீசை கொண்டைக்குருவி. கண்களின் கீழே வெள்ளையும் சிகப்பும் கலந்த ஒரு சிறிய திட்டு. அதே போல சிறகுகளின் அடிப்பகுதியில் ஒரு திட்டு. கரேலென்ற அடர்ந்த கொண்டை, இவைதான் இந்த பறவையின் அடையாளம் என்கிறார் பறவைகளின ஆராய்ச்சியாளர்களின் தந்தை சலீம் அலி.

பொதுவாகவே ஜோடிகளாக பறந்து திரியும் இந்த பறவைகள், சில சமயங்களில் சிறிய கூட்டமாகவும் காணப்படும். இந்தியாவின் வட மேற்கு மாநிலங்கள் தவிர அணைத்து மாநிலங்களிலும் காணப்படுபவை. நிக்கோபார் தீவுகளில் கொண்டு சென்று விடப்பட்ட ஒரு பறவைதான் இந்த செம்மீசை கொண்டைக்குருவி, என்கிறார் சலீம் அலி.

கடல் மட்டத்திலிருந்து 2 500 அடி உயரத்தில்கூட காணப்படும் இந்த குருவியினம். இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இந்த குருவி வகைகள் இல்லை என்கிறார் அவர். தலையை ஆட்டி ஆட்டி இரண்டு விதமான குரல்களால் தன் இணையை தேடும் இந்த பறவை. ஒரு குரல் வீட்டில் காணப்படும் குருவியின் குரல் போல இருக்கும் என்கின்றனர் பறவையின ஆராய்ச்சியாளர்கள்.

இதே போல இருக்கும் மற்றொரு குருவி வகை செங்குதக் கொண்டைக்குருவி (Redvented Bulbul). இந்த இரண்டு குருவிகளையும் ஒன்றாக காண்பது என்பது மிக அரிதான ஒன்று. இந்த குருவியின் (செம்மீசை கொண்டை குருவி) இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை ஆகும். மரக்குச்சிகளால் ஆன அழகான சிறிய கூடுகளை கட்டும் இந்த பறவைகள் ஒரு சமயத்தில் ரெண்டு முதல் நான்கு முட்டைகள் வரை ஈனும். ஆண் மற்றும் பெண் பறவைகள் சேர்ந்தே குஞ்சுகளை வளர்க்கும், என்கிறார் சலீம் அலி.

ஆனால் ஏர்போர்ட்டில் அடிக்கடி மாட்டும் ஆசாமிகளுக்கு ஏன் குருவிகள் என்று பெயர் வைத்தார்கள் என்று தான் புரியவேயில்லை.