தொடர்கள்
விகடகவியார்
மாம்பழ சீசன் - ராமதாஸ் Vs ராமதாஸ் - விகடகவியார்

20250319055939190.jpeg

சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சித் தலைவராக அன்புமணி ராமதாசை மருத்துவர் ராமதாஸ் அறிவித்தாலும் அறிக்கைகள், கருத்துக்கள் என்று டாக்டர் ராமதாஸ் தனது கருத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். இதனை கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவ்வளவாக ரசிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கட்சித் தலைவர் நான் இருக்கும் போது இவர் எதற்கு தேவையில்லாமல் கருத்து சொல்கிறார் என்று அவர் காதுபட அன்புமணி ராமதாஸ் முணுமுணுத்தும் இருக்கிறார்.

ஏற்கனவே இளைஞர் அணி பொறுப்பில் அன்புமணி ராமதாஸின் சகோதரி மகனை நியமிப்பதற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ். அப்போது டாக்டர் ராமதாஸ் இது நான் தொடங்கிய கட்சி நான் சொல்வது தான் இங்கு நடக்கும் அதற்கு விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம் என்று கோபமாக சொன்னார். திடீரென சென்ற வாரம் நான்தான் இனி கட்சித் தலைவர். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இதை அன்புமணி ராமதாஸ் ஏற்கவில்லை. அவருக்கு அதிகாரம் இல்லை பொதுக்குழு மூலம் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் தேர்தல் கமிஷன் என்னை அங்கீகரித்து இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்.

இப்போது டாக்டர் ராமதாஸ் மாவட்ட வாரியாக பொது குழு உறுப்பினர்களை தனது தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து அன்புமணி ராமதாசை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கையெழுத்து வாங்கும் வேலையில் இறங்கி இருக்கிறார். இதனை கேள்விப்பட்ட அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளரிடம் தானே தொடர்ந்து பதவியில் நீடிக்க கையெழுத்து வாங்குகிறார்

தந்தை மகன் இருவருக்கும் இடையே உண்மையில் என்னதான் பிரச்சனை என்று விசாரித்த போது அன்புமணி ராமதாஸ் தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் கட்சியில் முதன்மைப்படுத்த விரும்புகிறார். தனது மனைவியை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கி மத்திய அமைச்சராக்க விரும்புகிறார் .தவிர தனது மகளை கட்சியில் முக்கிய பொறுப்பில் அமர்த்த விரும்புகிறார். அதாவது அன்புமணி ராமதாஸ் குடும்பம் மட்டுமே கட்சிப் பொறுப்பில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விருப்பம் மற்ற குடும்ப உறவுகள் கட்சியில் தீவிரமாகஈடுபடுவதை அன்புமணி விரும்பவில்லை.இது தவிர சில அறக்கட்டளைகளில் ஓசைப்படாமல் தலைவர் என்ற தன் அதிகாரத்தை பயன்படுத்தி டாக்டர் ராமதாசை கழற்றி விட்டிருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் தெரிந்து தான் நானே தலைவர் என்று அறிவித்திருக்கிறார்டாக்டர் ராமதாஸ்.இந்த மோதல் வெளிப்படையாக இன்னும் பெரிய அளவில் வெடிக்கும் என்கிறது பாமக தரப்பு. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.