தொடர்கள்
வலையங்கம்
இது ரொம்ப ரொம்ப தப்பு

20250325192203532.jpeg

எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்தவர்கள் அரசு வேலையில் சேர்வதற்கான வாய்ப்பை தமிழக அரசின் புதிய அரசாணை கிட்டத்தட்ட இல்லாமலே செய்து விட்டது.

தமிழகத்தில் பட்டம் படிக்காதவர்களும் தமிழக அரசின் நிரந்தரமான அரசு வேலையில் சேரலாம் என்ற ஒரு வாய்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அலுவலக உதவியாளர், காவலாளி, தூய்மை பணியாளர் உள்ளாட்சி அமைப்புகளில் இரவு நேர காவலாளர், தோட்டக்கலை தொழிலாளர் என்று கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் நிரந்தர அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இப்போது இனிமேல் அந்தப் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் நியமிக்கப்படுவார்கள் என்று ஒரு அரசாணை உயர் கல்வித் துறை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தப் பணியிடங்களுக்கு காலவரை ஊதியம் மற்றும் நிரந்தர அரசு ஊழியர் என்ற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இது எல்லோருக்குமான அரசு என்று சொல்லிக் கொண்டு எல்லோரையும் வஞ்சித்துக் கொண்டிருப்பது எந்த வகையிலும் சரி இல்லை. இந்த உத்தரவு மக்களுக்கு எந்த அளவுக்கு இந்த திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் தருகிறது என்பதற்கு இதைவிட வேறு ஒரு உதாரணம் தேவையில்லை.