பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ள போகும் நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்வது தொடர்பாக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது இது தேவைதான். பரபரப்பு செய்திகளுக்காக ஊடகங்கள் தங்கள் இஷ்டத்துக்கு செய்திகளை ஒளி பரப்புவது எதிரி நாட்டுக்கு நாமே தகவல் சொல்வது போல் ஆகிவிடும். தனிநபர் சுதந்திரம் அதிகளவு உள்ள நாடு அமெரிக்கா என்று சொன்னாலும் அது பாதுகாப்பு சம்பந்தமான செய்திகள் வெளியிடுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. நம் நாட்டில் ஊடக சுதந்திரம் என்ற பெயரில் செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை முற்றுகை இடுவது வினாடிக்கு வினாடி அரசாங்கத்தின் முடிவுகளை மிகைப்படுத்தி அல்லது திருத்தி வெளியிடுவது நிச்சயம் எல்லை மீறுவதாக தான் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசாங்கம் இன்னும் கொஞ்சம் கடுமையாக இருந்தால் கூட நல்லது தான். ஊடக சுதந்திரம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க அனுமதிக்க கூடாது.
Leave a comment
Upload