தொடர்கள்
வலையங்கம்
இது வேண்டாமே

20250423195044574.jpeg

அணுசக்தி ரகசியம் என்றால் நாம் எப்போதும் கூடுதல் கவனத்துடன் ரகசியம் காப்போம். இந்திய அரசு அணுசக்தி சட்டத்தை திருத்த ஆலோசனை செய்வதாக தகவல் வர தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தில் தனியாரும் பங்கு பெறலாம். தனியார் நேரடியாக அணுசக்தி திட்டத்தில் பங்கேற்க வகை செய்யும் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. அணுசக்தி திட்டம் அல்லது அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் கையில் கிடைக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்யுமோ என்ற பயம் எல்லோருக்கும் வரத் தொடங்கி இருக்கிறது. அணு ஆயுத தொழில்நுட்பங்கள் தனியார் கைக்கு போனால் பணத்திற்காக அவர்கள் அதை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக போகக்கூடும் எனவே இந்த சட்ட திருத்தத்தை தேவையில்லை என்று மத்திய அரசு கைவிட வேண்டும்.