தொடர்கள்
பொது
அட இதக் கேட்டீங்களா – பால்கி

20250512223847583.jpg

மும்பை உயர்நீதிமன்ற ஜட்ஜ் 19 டிசம்பர் 2024 அன்று திறந்த கோர்ட்டில் வாசித்த 85 பக்கங்கள் கொண்ட ஆர்டர் ஆறு மாதங்கள் கழித்தே உயர்நீதிமன்ற வெப்சைட்டில் 30 மே 2025 அன்று தான் அப்லோட் செய்ய முடிந்ததாம். சம்பந்தப்பட்ட ஜட்ஜ் மாதவ் ஜம்தார் கடந்த ஆறு மாதங்களாக தினமும் அதி காலை 2 மணி வரை பணி புரிய வேண்டி வந்ததாம். நித்தமும் இரவு 11.30 மணிக்கு மேல் தான் தனது சேம்பரிலிருந்து இல்லத்திற்கு திரும்புவாராம்.

****

20250512223921761.jpg

70 வருட லிவ்-இன் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். நடந்தது கலாந்தர், துங்கார்புர் மாவட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில். ஆதிவாசி இனத்தைசேர்ந்த இவர்கள், மாப்பிள்ளைக்கு ஜஸ்ட் 95 , மணப்பெண்ணுக்கு இப்போது தான் 90 வயதை எட்டியுள்ளார். இது இப்படி இருக்க இவர்களுக்கு எட்டு குழந்தைகளாம், மற்றும் அவர்கள் மூலம் பேர கொள்ளு பேரன்களும் உண்டாம்.

தனது குழந்தைகள் பேரக்குழந்தைகளின் ஆதரவில் இந்த இருவரும் மண வாழ்க்கையில் விழத்துணிந்துவிட்டனராம் என்று அவரது மூத்த பையன் காந்திலால் கராரி கூறுகிறார். 4 ஜூன் திருமணம் இனிதே நடந்ததாம் என்றும் அவரே கூறுகிறார்.

****

20250512224615941.jpg

அம்மா அழைத்தாள் வந்தேன் என்று கட்ராவில் அமர்ந்து அருள்பாலிக்கும் வைஷ்ணோ தேவியைத் தரிசித்த பின்னர், ஜம்மு காஷ்மீருக்கு இந்த வந்தே பாரத் ரயில் ஒரு மிகப்பெரிய பரிசு தான், என்று பெருமிதம் கொள்கிறார் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா. இந்த ரயில் பாதை காஷ்மீரை அனைத்து இந்திய நகரங்களுடன் இணைக்கிறது.

****

இப்ப வயசு 60 ஆகிறது. ஆனால் 1972ஆம் ஆண்டு நாலாங்கிளாஸ் படிக்கும்போது ஏற்பட்ட பகைமை புதுப்பிக்கப்பட்டு அடி தடியில் இறங்கி பல்லுடைந்து படு காயங்களோடு ஆஸ்பித்திரியில் இப்போது. இது ஒரு புறமிருந்தால், இது போலீஸ் கேசாகி விட்டதே.

20250513105610441.jpg

காசரகோட் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது கூட்டாளி மேத்யூ வலியப்ளக்கால் என்பவரோடு பாபு என்னும் தனது 4ஆங்கிளாஸ் பள்ளி தோழன், இல்லை இல்லை பகைவன் பாபுவை அடித்து….மேலே சொன்னதெல்லாம் நடந்துவிட்டிருக்கிறது.

****