இப்போதெல்லாம் தெருக்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக போய் வீடு திரும்புவது என்பது கேள்விக்குறியாகி விட்டது. அந்த அளவுக்கு தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி விட்டது. இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. இதனால் வெறி நோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்து வருகிறது. நாய் தொல்லையை எதிர்த்து பல முறை மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். நாய்களுக்கு நாங்கள் கருத்தடை செய்து விட்டோம் என்று அத்தோடு பிரச்சனையை முடித்து விடுகிறது அரசாங்கம். 2023-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் 6.2 கோடி தெரு நாய்கள் உள்ளன. 2019 -22 காலகட்டத்தில் நாட்டில் 1.6 கோடி நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன . ஒவ்வொரு ஆண்டும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. 2023-ல் மட்டும் 30 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகின. 2024 நாளில் 21.95 லட்சம் சம்பவங்கள் பதிவாகின.
தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய் கடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதில் 18 பேருக்கு வெறிநாய் தொற்று ஏற்பட்டுள்ளது. 2024 மட்டும் தமிழகத்தில் 43 பேர் வெறி நோயால் இறந்திருக்கிறார்கள். நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை என்பதை இந்த புள்ளி விவரம் சொல்கிறது. தமிழக அரசு முழு கவனம் செலுத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாய் கடியால் பல உயிர்கள் இழப்பதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு என்று சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடும்.
Leave a comment
Upload